Skip to main content

நூல் விமர்சனம்: கோ.புண்ணியவானின் சமீபத்திய சிறுகதை நூலான 'எதிர்வினைகள்'


     



  அழியாமல் ஆடிக்கொண்டிருக்கும்  தடித்த வடுக்கள்

     பல தருணங்களில்  மனம் எதற்கெதற்கோ கடந்து தவியாய்த் தவிக்கும். கோ. புண்ணியவானின் மனமும் அப்படித் தவித்துதான் பல எதிர்வலைகளை எழுப்பியுள்ளது. சமுதாயத்தில் புரையோடியிருக்கும் புண்களைத்தான் எல்லா படைப்பாளனும் நமக்குக் காட்டிக்கொண்டிருப்பார்கள். இதைத்தான் இவரும் செய்திருக்கிறார். இருப்பினும் தன் எளிய நடையில் தன்னைப் பாதித்தப் பதிவுகளை மிக நேர்த்தியாக எதிர்வினைகளாக்கியிருப்பதுவே அவருக்குள்ள தனித்துவமாகும். இத்தொகுப்பின் தலைப்பும் எதிர்வினைகள் என்றிடப்பட்டிருப்பதுவும் சிறப்பு அம்சமும்கூட.
சாமிக்கண்ணு தூக்குபோட்டுக்கொள்வதும் அதனால் அவனுடைய மனைவி சாரதா அடையும் விடுதலையும்தான் கதையின் போக்கு. அவன் கொடுத்த ஆறாத் துயரங்களைக் கதையோட்டத்தினூடே அடுக்கிக்கொண்டே போகிறார். புறவாழ் மக்களின் எண்ணப் பகிர்வுகளும் புலம்பல்களும் சாவு வீட்டில் சிதறிக் கிடக்கின்றன. இதேப் போன்றுதான் ஆறுமுகம், ‘இறந்தவன் பற்றிய வாக்குமூலமும்’ கதையில் தூக்குமாட்டிக்கொள்கிறான். இருவர் பிழைப்பும் நாறிப்போனதுதான் என்று கதை சொல்கிறது. குடிக்காரக் கணவர்கள் குடும்பத்தில் மனைவியிடத்தில் எத்தகைய வெறுப்புகளை நெருப்புத் துண்டங்களாக விட்டுச்செல்கிறார்கள் என்பது நல்ல பதிவு.
ஒவ்வொரு மனிதனிடமிருக்கும் அகங்காரங்களும், கூடவேயிருக்கும் திமிர்களும் எவ்வாரெல்லாம் வாழ்க்கையை துவசம் செய்கின்றன என்று படைப்பாளர் நூலாம்படை,, துறவு என்றனவான கதைகளில் விவரிக்கின்றார். சரளாவின் சமரசம் காணா போக்கும் அவளுடைய கணவனின் விறைப்பும், மணவாழ்க்கையை இன்றைய இளைஞர்கள் ஆராதிக்காமையும் பெற்றோர்களை மனமுடையச் செய்கிறது. மாலாவின் மாற்றாள் மணவாளனை தன்னுடைமையாக்கும் போக்கும் அதனால் அவள்படும் இன்னல்களையும்  நூல்பிடித்தவாறு இருகதைகளிலும் சொல்லிச் செல்கிறார் படைப்பாளர். நூலின் தொடக்கத்தில் உரைத்திருப்பதுபோல் மௌனவதைகள் நம் உள்ளத்தில் ஊடுருவுகின்றன.
புனைவுக் கதைகள் ஒரு மனிதனுக்கும் இன்னொரு மனிதனுக்கும்; ஒரு மனிதனுக்கும் இயற்கைக்குமிடையே ஏற்படும் முரண்களையும் பிரச்சனைகளையும் விவரிக்கும் தன்மையுள்ளன. எனவே புறவாழ்க்கையில் ஏற்படும் துர்அனுபவங்கள் சில சமயங்களில் அகத்தை ஒரு ஆட்டு ஆட்டுகிறன  என்பதற்குச் ‘சுடரைச் சுற்றிக் கனன்று கொண்டிருக்கும் நெருப்பும் சில விட்டில் பூச்சிகளும்’, நிகற்றவன் கதைகளும் எடுத்துக்காட்டு. சில சமயங்களில் தான் மூக்குடைந்த துயர நிகழ்வுகளைத்தான் படைப்பாளர் சொல்ல வருகிறாரோ என எண்ணத்தோன்றுகிறது.


நம் தமிழ்ச் சமுதாயம் கல்விக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கின்றது ‘என்பற்கு கதவுகள் தாழிடப்பட்டிருக்கின்றன’ கதை நல்ல சான்று. மனப்பிறழ்வுகள் பெற்றோர்களுக்கா அல்லது கல்வி கற்கும் குழந்தைகளுக்கா? எனும் கூற்றை முடிவு செய்யும் தகுதியை வாசகன் பெறுகிறான். இக்கதையில் ஆறாம் ஆண்டு முடிவுக்காக
ராணியும் ஏனையோரும் என்னென்ன சாகசங்கள் செய்கிறார்கள் என்பதுதான் கதை. தாதிமை கல்விப் பெறச் செல்லும் இன்னொரு ராணியின் கதையான ‘கடைசி சந்திப்புக்குக் பிறகான நினைவுக் குறிப்புகள்’ ஏறக்குறைய ஒரே விளைவுகளைத்தான் பறைசாற்றுக்கின்றன. மிதமிஞ்சிய எதிப்பார்ப்புகள சில சமயங்ளில் அகோர முகங்கொண்ட றுக்கத்தன்மையுள்ள விளைவுகளை இச்சமுதாயத்தில் விதைக்கின்றன என்பதே நமக்கு ஓர் எச்சரிக்கைதான்.
 சில நேரங்களில் கையறுநிலை ஏற்படும்போது மனத்தில் ஒருவித வெறுப்புத்  தோன்றி மறையும். யாரைக்கண்டாலும்  கசப்பும், வெறுமையும் பிரதிபலிப்பது உண்மையெனலாம். தான் அதிகம் பாசம் வைத்தவர்கள் தன்னை புறக்கணிக்கும்போது ஏற்படும் வலி சொல்லண்ணாதாகும். புறக்கணிப்பு ஒருவிதமான வன்முறை எனப்படுகிறது. நீரிழிவு நோயால் காலிழக்கும் ஜானகிக்கும், மகனால் உதாசினப்படுத்தப்படுகிற ஆயம்மாவுக்கும் பெரிய வேறுபாடில்லை. நிதர்சனங்கள் ஜானகிபடும் இடுக்கண்களையும், ஆயாக்கொட்டை கிழவிபடும் அவலங்களையும்  நவநாகரிக சமுதாயத்திற்குச் சொல்கின்றன. உழைத்து மட்கிப்போன அண்ணனின் வாழ்க்கையும், மறக்கப்பட்ட நன்றிகளும் சருகுகளில்  காற்றாய் வருகின்றன. நம்மை ஓங்கியும் அறைகின்றன.
 ஒருத்தி உழைத்து வாழ்கிறாள், மற்றொருவன் ஊரை ஏய்த்து பிழைக்கின்றான் என்பதனைச் சகுந்தலா கதாபாத்திரம் ‘ஐம்பது ரூபாய் அற்றைக்கூலிக்கான’ துணை நடிகை கதையிலும், கலகக்காரனில் பெரும் திறனாளியான மாரிமுத்துவும் மிளிர்கிறார்கள். வாழ நினத்தால் மனவலிமையும் சாகசமும் தேவையென இக்கதைகள் புரியவைக்கின்றன.
 ‘நீருக்குள்ளிருந்தே நழுவும் மீன்கள்’ கதையில் வரும் கோபால் படைப்பாளியை அதிகம் பாதித்திருப்பாரோ எனச் சிந்திக்கவைக்கிறது. அவரின் கல்வியாளர் பணி பல்வகைத்  தடங்களை விட்டுச் சென்றிருக்கின்றன. அவையனைத்தையும் மிக அழகாக பதிவு செய்திருக்கிறார். இதே பதிவுகள்தான் ‘புலவர் வேந்தர்கோனின் வரலாற்றிலிருந்து பிரிக்க இயலாத சில பக்கங்கள்’ என்ற இரண்டு தொடர் கதைகள். பணம் வாழ்வாதாரம் என்பது புலவரின் கணிப்பு. அதற்கான முனைப்பு கதை.
 ‘சாமி கண்ணை குத்திடுச்சு’ கதை கெடாவிலுள்ள லுனாஸ் பகுதியில் இருபது முப்பது ஆண்டுகளுக்கு முன் நடநத  சம்சு மரணத்தைக் கண்முன் நிறுத்துகிறது. சம்சுவினால் கண் போனவர்களும், மண்வாரியால் கொத்துக் கொத்தாக அள்ளிப் போடப்படடுப் புதைக்கப்பட்ட  தமிழர்ச் சடலங்களும் மறக்கக்கூடிய நிகழ்வுகளா? படைப்பாளர் இச்சம்பவத்தை நினவில் கொண்டு கதையாடல் செய்திருப்பாரோ என மனம் வினவுகிறது. எது எப்படியிருப்பினும் மது நம் சமுதாயத்தை அழிவை நோக்கி அழைத்துச் செல்கிறது என்று படைப்பாளர் அஞ்சுவது நமக்கு உறைக்கிறதா?இதிலுள்ள 17 சிறுகதைகள் மனித செயற்பாடுகளின் பல்வேறு போக்குகளை உணர்வுப் பூர்வமாகவும், எள்ளல் தொனியோடும் எழுதப் பட்டுள்ளது. கதை மாந்தர்கள் வேறு யாருமில்லை, நாமும் அதில் ஊடுருத்து வருகிறோம்.
 மொத்தத்தில் இத்தொகுப்பு ஓய்வு பெற்ற கல்வியாளர் கோ.புண்ணியவான் என்ற கதைசொல்லி அள்ளித் தந்த வானம்.
                                
கோ.புண்ணியவானின் எதிர்வினைகள் சிறுகதைத் தொகுப்பு எதிர்வரும் 15.10.2011 சனிக்கிழமை மாலை 4.30க்கு, சுங்கைப் பட்டாணி,கெடா மலேசியாவில், சிந்தா சாயாங் சல்சா மண்டபத்தில் நடைபெறும்.
நூல் கிடைக்கிமிடம். 3203 லொரொங் 9, சுங்கைப் பட்டாணி, கெடா.
                       குமாரசாமி,
                       விரிவுரைஞர் பினாங்கு ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி

 

Comments

Karthigesu said…
புண்ணியவான்,

குமாரசாமியின் விமர்சனம் கச்சிதமாக இருக்கிறது. பாராட்டுக்கள். எனக்கு இரு பிரதிகள் அனுப்புங்கள்:
33, Jalan 5/31,
46000 Petaling Jaya.
விலை மின்ன்ஞ்சலில் சொல்லுங்கள். அனுப்பிவைப்பேன்.

ரெ.கா.

Popular posts from this blog

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

கோ.புண்ணியவான். அதன் பிறகு இந்தப் புதிய வடிவத்துக்குப் பெரிதாய் வாசல் திறந்து வரவேற்பு நல்கியது புதிதாய்ச் சிறகு தரித்து நாடு முழுதும் பாட வந்த வானம்பாடி என்ற வார இதழ்.தமிழ் மலரில் ஒரு செய்தி ஆசிரியராகச்சேர்ந்த ஆதி.குமணன் என்ற இளம் பத்திரிகையாளர் பின்னாளில் வானம்பாடி வார இதழைத்தொடங்கி புதுக்கவிதையை வளர்த்தெடுப்பதில் பிரத்தியேகக் கவனத்தைச்செலுத்தினார் என்பதைச்சரித்திரம் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்து வைத்திருக்கிறது. இதில் மிக முக்கியமான செய்தி என்னவெனில் தமிழ் மலரில் பணியாற்றும்போதே புதுக்கவிதைக்குப் பதியம் போட்ட ஆதிகுமணன் பிற பத்திரிகைகள் கொடுக்கத்தயங்கிய அங்கீகாரத்தைத் தன் புதுப்பத்திரிகையான வானம்பாடியில் சிவப்புக்கம்பல வரவேற்பை நல்கினார்.அதன் பின்னர் வானம்பாடி புதுக்கவிதைக்கான இயக்கமாகவே மாறி அதனைத்தீவிரமாக வளர்த்தெடுக்க முயன்றது.புதுக்கவிதை வடிவம் பழைய மரபைக் கட்டுடைத்துத்தந்த சுதந்திரத்தைச் சாதகமாகப்பார்த்த பலர் இத்துறையில் தங்கள் எண்ணங்களை எழுத்துக்களாக வடித்தனர். சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, கு.கிருஷ்ணன், துரை.முனியாண்டி, பிரசன்னா, இளந்தமிழன், வே.ராஜேஸ்வரி, அருள்தாசன் போன

எத்தனை கதவுகளை அடைத்துவிட முடியும் உங்களால் ?

.                      Mr Rama                             Mr.Velan  எத்தனை கதவுகளை அடைத்திவிட முடியும் உங்களால் ? என் கையறு நாவலை அச்சிடப்பட்ட புதிதில் யாவரும் பதிப்பாளரிடமிருந்து 600 பிரதிகள் தருவித்திருந்தேன். அந்த 600 பிரதிகளும் விற்றுத் தீர்ந்தன. அவற்றில் 400 பிரதிகள் நோய்த்தொற்று காலத்தில் தபால் வழிகாகவே அனுப்பவேண்டியிருந்தது.  by தொற்று நோய் பீடித்த காலத்தில் வீட்டுக்குள்ளேயே அடங்கிக் கிடந்தவர்களுக்குத் தொலைகாட்சி ஊடகம் போரடித்திருக்க வேண்டும். எனவேதான் அவர்கள் வாசிக்க நூல்களைத் தேடியிருக்கிறார்கள். கையறு நாவல் வரலாற்றுப் புனைவு என்பதாலும் அதில் கொத்தடிமைகளாக இருந்து வாழ்வின் அனைத்து துன்பங்களையும் அனுபவித்துவிட்ட தன் உறவுகள் கதை என்பதாலும்  அந்த எண்ணிக்கையை எட்டியிருந்தது.  நோய்த்தொற்று சரிந்து பழையபடி சீரான நிலைக்குத் திரும்பிக்கொண்டிருந்த  அடுத்த ஆண்டு இரண்டு இடங்களில் நூல் வெளியீடு செய்தேன். முதலில் நான் குடியிருக்கும் சுங்கைப் பட்டாணி நகரிலும் பின்னர் நான் படித்து வளர்ந்த கூலிம் நகரிலும் செய்தேன்.  நூல் வெளியீடு பெரும்பாலும் வாசகர்களே வரவேண்டும் என்று நினைப்பதால் இந்த இரு ந

வைரமுத்துவின் காலத்தால் அரிக்கப்படாத பாடல்கள்

கவிஞர் வைரமுத்து இந்த ஜூலை 13ல் மணிவிழா  கொண்டாடினார். மணி விழா எடுக்க எல்லாத் தகுதியும் கொண்டவர் கவிஞர். புதுக்கவிதை தமிழ்ப் படைப்புலகுக்கு அறிமுகமான  காலத்தில்   மரபிலிருந்து  புதுக்கவிதைக்குப் பெரும்  பாய்ச்சலை  நிகழ்த்தியவர்களில் மிக முக்கியமானவர்.  மரபுக்கவிதை காலமாற்றத்தால் கனிந்து உதிர்ந்து விழுந்து கொண்டிருக்கும் வேளையில் கவிதை இலக்கியம் தன்னை புதிய தோற்றத்துக்குத் தோலிருத்துக் கொண்டு புதிய சட்டையை மேலணிந்து கொள்ளத்துவங்கியது. இலக்கணச் சங்கிலியால் படைப்புச் சுதந்திரத்தை கட்டிப்போட்டிருந்த படைப்புத் தமிழ் மெல்லத் தளர்ந்து பின்னர் கட்டவிழ்த்து இலக்கணப் பிடியற்ற புதிய விடுதலைக்குத் தயாரானது. புதிய பரிமாணத்தில் புதிய கவிதை யுகத்தைப் படைக்க தொடங்கியிருந்தது. இது காலம் கொண்டுவந்த மாற்றம். மனிதர்களின் முன்தீர்மானம், திட்டமிட்ட செயல் என்றெல்லாம் சொல்வது காலம் வகுத்த விதிக்கு முரணாக சொல்லப்படும் கருத்தாக்கம். புதுக்கவிதை  மரபை பதியம்போட்டு வளர்த்த அப்போதிருந்த வானம்பாடிக் கவிஞர்களே புதுக்கவிதை இலக்கியத்தை ஒரு இயக்கமாக முன்னெடுத்தார்கள். கவிதை படைப்பிலக்கியத்துக்குப் புதிய தோற்றம் த