என்னுடைய இல்ல நூலகத்தை மறு சீரமைப்பு செய்யும் நேரத்தில்,மலேசிய புதுக்கவிதை கருத்தரங்கின் போது வெளியிடப்பட்ட நூல்கள் கிடைத்தன. அவை புதுக்கவிதை இயக்கம் தொடக்கப்பட்ட வேளையில் வெளியிடப்பட்ட ஆவணங்கள். பின்னாளில் புதுக்கவிதை இயக்கம் ஆரம்பிக்கப்பட்டதை ஞாயிறு பத்திரிகைகள் வழியேதான் தெரிந்துகொள்ள முடிந்தது. நான் என்னுடைய எஸ்பிம் எம்சியி சோதனையை எழுதி முடித்துவிட்டு முடிவுக்காகக் காத்திருந்த காலக்கட்டத்தில்தான் எழுதத் துவங்கினேன். புதுக்கவிதை என் முதல் எழுத்து அல்ல, சிறுகதையே புள்ளையார் சுழியிட்டு தொடக்கி வைத்தது. அப்போதெல்லாம் புதுக்கவிதை என்ற வடிவம் பற்றி யாரும் பேசிக்கூட நான் கேள்விப்பட்டதில்லை. ஆனால் அப்போது அது மெல்ல மெல்ல தமிழ்நாட்டில் வேர்பிடிக்கத் துவங்கியிருந்ததை மலேசிய எழுத்துலகம் அறிந்திருக்கவில்லை என்பதும், அப்படியே கேள்விப்பட்டாலும் அதனைப் பெரிதாய் எடுத்துக்கொள்ளவில்லை என்பதும் வரலாறியும். அன்றைய ஊடகத்துறை இன்றைக்குப்போல நொடிக்கு நொடி அறிவிக்கும் தொழில்நுட்ப ஆற்றலுக்கு வெகுதொலைவுக்குப் அப்பால் இருந்...
ஒவ்வொருமுறையும் நூல்கள் திறக்கப்படும்போது- நன்றிக் கடனாக அவை உங்களை அகலத் திறந்துவிடுகினறன. (ko.punniavan@gmail.com)