Skip to main content

கையறு நாவல் விமர்சனங்கள், பார்வைகள்.

வணக்கம்,


கையறு நாவல் கிடைக்குமிடம்: கோ.புண்ணியவான் 0195584905 மலேசியா.

என் கையறு நாவல் தொடர்பாக எழுதப்பட்ட விமர்சனங்களை இங்கே பதிவு செய்ய நினைக்கிறேன். குறைவான எண்ணிக்கையிலே கையறு நாவலை அச்சிட்டமையால் அவை தாமதமாகக் கேட்போருக்குக் கிடைக்காமல் போகலாம்.எனவே இப்பதிவுகள் இந்நாவல் தொடர்பான விடயங்களை முன்வைத்து நாவல் வாசிக்க ஆர்முள்ளவர்களைத் தூண்டும் நோக்கமுடையவை என்ற காரணத்தால் இவற்றை இங்கே பதிவு செய்கிறேன். தபாலில் குறைந்தது 150 நாவ்லகளை அனுப்பிவிட்டேன். சுங்கை பட்டாணியிலும், கூலிமிலும் (9/10-4.2021 தேதிகளில் நாவலின் அறிமுக நிகழ்ச்சியில் குறைந்தது 100 நாவல்களை வாசகர்கள் வாங்கிச் சென்றார்கள். மேலும் நாவலை புலனத்திலும், முகநூலிலும் விளம்பரம் செய்தமையால் சுமார் 150 நூல்கள் தபால் வழியாக வாசகர்களைச் சென்றடைந்தன. 

இளைய தலைமுறையினருக்கு நம்முடைய இரண்டாம் உலக யுத்த  சப்பானியர் ஆட்சியின் மனிதக் கொடுமைகளை வாசிக்கக் கிடைக்க வேண்டும் என்ற நோக்கம் கொண்டு ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளுக்கும் நாவல்களை கொண்டுபோய்க் கொடுத்துள்ளேன்.  என்னிடம் இப்போது சொற்ப நூல்களே எஞ்சியுள்ளன.  நாவல் வெளியான நாள்தொட்டு



விமர்சனத்துக்கு உள்ளாகி பரபரப்பாக விற்றுக்கொண்டிருக்கும் சாத்தியங்களை வைத்துப் பார்க்கும் போது எஞ்சிய நூல்களும் விரைந்து விற்று முடிந்துவிடும் என்றே தோன்றுகிறது. தேடி வாசிக்க விரும்புவோருக்கு நாவல் கிடைக்கக் கூடிய ஒரே இடம் மலாயா பல்கலைக் கழக இந்திய ஆய்வியல் துறை நூலகமும், கைவசம் என்னிடன் எஞ்சியிருக்கும் நூல்கள்  மட்டுமே. இரண்டாம் பதிப்பு வெளியிட இப்போதைக்கு எந்த நோக்கமும் இல்லை அவசியம் ஏற்பட்டாலொழிய.

இனி என் வலைப்பூவில் வெளியாகும் விமர்சனங்களை வாசிப்பதன் வழி நூலைத் வாசிக்க விரும்புவோர் என்னை அணுகலாம்.(0195584905)

முதல் விமர்சனமாக ம. நவீன் செல்லியல் இணையதளத்தில் பேசிய காணொலியை இணைத்துள்ளேன். கீழக்கண்ட லிங்கை அழுத்தினால் ம. நவீன் பேசிய காணொலி கிடைக்கும். நன்றி

https://youtu.be/fNjlp8M0DxQ





Comments

Popular posts from this blog

கவிதைக்குள் பாதாம்பருப்பு

                                                                                                  நா ன் பணியாற்றிய ஒரு பள்ளியில் ஓர்இளைஞர் தற்காலி ஆசிரியராக வந்து சேர்ந்தார். தொடக்கத்தில் அவர் சாமான்ய இளைஞரைப்போலத்தான் தோன்றினார்.  ஆனால் அவரிடம் சில கோளாறுகள் இருப்பது சற்றுத் தாமதமாகத்தான் தெரிய வந்தது. உடன் வேலை செய்யும் ஆசிரியர்கள் கொடுத்த புகார்களின் பேரிலும் நானே நேரடியாக அனுபவித்ததின் பேரிலும் . அவரை தொடர்ந்து பள்ளியில் வைத்திருப்பது ஆபத்தானது என்று முடிவெடுத்து மாவட்டக் கல்வி இலாகாவின் கட்டளையின் பேரில் அவரை வேலையிலிருந்து உடனே நிறுத்திவிட்டேன். பள்ளியில் படிக்கும்போது அவர் மிகவும் கெட்டிக்கார மாணவராக இருந்திருக்கிறார்.  அசாதாரண அறிவாளி தரத்தில் வைத்துப் பார்க்கவேண்டியவர் என்று அவரோடு படித்து இன்றைக்குப் பல்கலைப் பேராசிரியாரா...

யானையின் பாதத்தடம்

                                         இ ம்முறை வல்லினம் விருது பி.எம் மூர்த்திக்கு வழங்கப்படுகிறது. அதனை முன்னிட்டு மூர்த்தியையுடனான என் அனுபவப் பகிர்வு இக்கட்டுரை.           மூர்த்தியை நான் முதன் முதலில் ஜித்ரா ஐ ஏ பி கல்விக் கழகத்தில்தான்   சந்தித்தேன். இது நடந்து கிட்டதட்ட 35/40 ஆண்டுகள் கடந்துவிட்டன. எங்கள் இருவருக்கும் ஒரே அறை ஒதுக்கப்பட்டிருந்தது ஒரு தற்செயல் அல்ல அது ஏதோ ஓர் ஏற்பாடு என்று முதலில் நான் அறிந்திருக்கவில்லை. குளிர்சாதன வசதி இல்லாத அறை அது. இரவில்கூட வெக்கை உக்கிரமாகத் தாக்கும். 30 மைல்கள் ஓடிவிட்டது போல வியர்த்துக் கொட்டும். இரு முறை மும்முறை இரவில் குளித்தவுடனும் வியர்க்கும். இவ்வாறான கையறு நிலையில் உஷ்ணத்தைக் குறைக்க சில அசட்டுத்தனமான யோசனைகள் தோன்றுவது இயல்பு. உறக்கம் வராமல் தவித்துபோது , சிமிந்துத் தரையில் வாலி வாலியாக தண்ண...

அதிர்வுகள் அனுபவங்கள்

                                             புதிய மனிதர்களைச் சந்திக்க நேர்வது அவர்களின் அறிமுகத்தைத் தாண்டி அவர்கள் ஏதோ ஒன்றை நம்மிடம் விட்டுச்செல்லத்தான் என்று தோணுகிறது. அல்லது ஏதோ ஒன்றை நினைவுபடுத்ததான் என்றும் நினைக்க வைக்கிறது. அந்தச் சந்திப்புகள் எதேச்சையாக வரலாற்றுச் சுவடுகளை ஏந்திவந்து நம்மை மலைப்பில் ஆழ்த்தவும் கூடும் சில தருணங்களில். யார்தான் எதிர்பார்ப்பார், கிட்டதட்ட எழுபது ஆண்டுகளுக்கும் முன்னர் நடந்தவை இந்த நாளில் சாட்சியங்களோடு வந்து முன்னிற்கும் என்று.சுவடுகளே இல்லாமல் மறைந்து போயிருக்கும் என்றுதானே நான் நினைத்திருந்தேன். ஆனால் ஊடகங்களின் பதிவு இல்லாமலேயே சில வரலாறுகள் மீண்டெழும் அபூர்வ தருணங்கள் நிகழும்.. இன்று (1.1 2025) சுங்கை கோப் வித்யாரண்யத்தில் பாரதி விழாவுக்குக் கூட்டம் நிறைந்திருந்தது. சிலர் பேசிக்கொண்டிருந்தபோது நான் அவர்களுடன் போய்க் கலந்துகொண்டேன். கலந்துகொள்ளவேண்டும் என்ற பிராப்தம் இருந்திருக்கிறது. அவர்களில் ஒருவர் உணர்ச்சி மேலிட பேசிக்கொண...