Skip to main content

மாடுகள் மலைகள் ஏரிகள் ~7 நியூசிலாந்து பயண அனுபவம்

 மலைகள் மாடுகள் ஏரிகள்~7

உலங்கு வானூர்தியின் வழி திமிங்கலத்தைப் பார்க்கலாம் என்றவுடன் ஆர்வமாகிவிட்டோம். கண்டிப்பாய் பர்க்கமுடியுமா என்று விசாரித்தோம். அது உங்கள் அதிர்ஸ்டத்தைப் பொறுத்தது என்றார் விமான ஓட்டி. (அதுக்கு அதிர்ஸ்டம் வேண்டும் எங்களைப் பார்க்க!) . 10 பேரில் இருவருக்கு அது போன்ற வாய்ப்பு கிட்டுவதில்லை. என்றார். நமக்கும் அப்படி ஆகிவிட்டால் என்னாவது என்று பின் வாங்கினோம். அரை மணிநேரப் பயணம்தான். ஆனால் தாழப் பறந்து   காட்டுவார்கள். விலை மிக அதிகம்.  திமிங்கலத்தைப் பார்க்கும் வாய்ப்பு கிட்டுவதும் சுலபமல்ல. அந்தச் சுற்றுலாத் தளத்தை அரசே நடத்துகிறது.

அங்கிருந்து கிரைஸ்சர்ச் நோக்கிப் பயணமானோம். நாங்கள் பெர்ரியில் ஏறும்போதே  கிரைஸர்ச்சுக்குப் போகும் மலையோரப் பாதை முன்னர்   எரிமலை வெடித்த காரணத்தால் மூடப்பட்டுவிட்டது என்று எச்சரிக்கப் பட்டது. ஆனால் தென்   தீ வுக்குப் போய் இரண்டு நாட்களில் திறந்துவிடப் பட்டிருந்தது. நாங்கள் சுவிட்சர் லாந்தில் பார்த்ததுபோல மலைகளைக் குடைந்து  போடப்பட்ட  நெடுஞ்சாலைகள் இங்கே பெரும்பாலும் இல்லை . பொருட்செலவு அதிகம் உண்டாகும் என்பதனால். அதற்குப் பதிலாக மலை அடிவாரத்தில் கடலுக்கு அருகே பாதை போடப்பட்டிருந்தது. ரயில் பாதை , சாலைகள் இரண்டுமே மலைச் சரிவில்தான். காட்சிகள் அபாரமாக இருந்தன. ஆனால் அங்கே மலைச் சரிவு ஏற்பட்ட பாதிப்பைப் பார்க்க முடிந்தது. சாலைகள் குறுகளாக்கப்பட்டு நெறிசலை உண்டாக்கியது. முழுவதும் கற்கள் பாறைகள்தான். சாலையையும் தண்டவாளத்தையும் கற்கள் மூடி மறைத்துவிட்டன. நாங்கள் போகும் போது சீர் செய்து கொண்டிருந்தார்கள்.
சரிவு

பசுபிக் மகா சமுத்திரம் அக்கரை தீவைக்  காட்டாது பரந்து விரிந்திருந்தது. வடக்க தீவுக்கு மறுபுறத்தின் கடற்பரப்பு அது. கரை நெடுக்க நீர் நாய்கள் கரும்   பொதிபோலப்    படுத்துக் கிடந்தன. கரிய நிறத்தில் கரிய பாறையின் மீது. கேமாரவுக்குள் சரியாகக் கிடைக்கவில்லை. பாறைகள்  எரிமலை தீயில்   உருகி பல்வேறு வடிவில் நெளிந்து கிடந்தன.  எரிமலை,  நிலநடுக்கம்   போன்றவை   கிரைஸ்சர்ச்சில்      மட்டுமல்ல, பெரும்பாலான பட்டணங்களில் உயர்ந்த கட்டடங்கள் கிடையாது. ஆக்லாந்திலும்  வெலிங்டனிலும்   மட்டுமே ஒரு சில கட்டடங்கள். எல்லாமே சிறு சிறு தரை   வீடுகள்தான்.

கிரைஸ் சர்ச்சுக்கு நெடும் பயணம் அது. கடும் உஷ்ணம் பயணம்    நெடுக்க. ஆக்லாந்திலும் பிற இடங்களிலும் கோடையும் வீசிய குளிர்   காற்று  இங்கே 'பந்த்' செய்திருந்தது. ஒரு வழியாய்  சீரான பாதைக்கு வந்து சேர்ந்தோம். வழியில் மாடுகளைப் பால் கரக்கும் இடத்தைப் பார்க்கலாம் என்ற ஆசை வந்தது. நூற்றுக் கண்க்கான கரவை மாடுகள் மடி கனத்து கரக்கும் இயந்திரத்தை அடைய வரிசையில் நின்றன.  பால் சுமந்த  அதன் மடிகள்  ஐந்து கிலோ அரிசி மூட்டைபோல விம்மி இரு ந்தன .  கரவைகள்  நின்று நின்று ஒன்று முடிந்து ஒன்று இயந்திரதுக்குள் மடியைக் கொடுக்கின்றன என்று நினைத்தோம். அவற்றை ஒரு மிஷின் பின்னாலிருந்து தள்ளிக்கொண்டு வந்து சேர்வதை உன்னிப்பாக பார்த்தாலே கிடைக்கும். அங்கே ஒருவன் அதன் மடியின்  நான்கு சுரப்பிக்குள்ளும் மிஷினைப் பொறுத்துகிறான். வட இந்தியன். நிமிடங்களில் பால் கரக்கப்பட்டு அவற்றை தன்னிச்சையாக விடுவிக்கின்றன. கரக்கப் பட்ட பால் ஒரு பெரிய தாங்க்கிக்குள் சேகரிக்கப்பட்டு லாரிகளிள் அனு    ப்பப்   படுகிறது.
போகும் வழியில் பழைய கார்கள் சேகரிக்கப்பட்ட இடமும் உண்டு. அதற்குப் பிறகு கோடைகாலத்தில் பயிரி டப்படும் லெவெண்டர் பூக்களும், அதலிருந்து தயாரிக்கப்படும் வாசனைத்       திரவியப் பொருடகள், லெவெண்டர் தேன் என விற்குமிடத்தைப் பார்த்துவிட்டு அடுத்தடுத்து போய்க்கொண்டே இருந்தோம். முன்னர் லெவெண்டர் தேனை எம்வேய் வாங்கி விற்றது. ஆனால்    அவற்றுள்   செயற்கை சுவையூட்டிகளை சேர்க்கிறார்கள் என்று தெரிந்ததும் எம்வேய் விலக்கிவிட்டது. இனிப்பென்றால் அப்படிப்பட்ட இனிப்பு. சீனி அளவுக்கு மீறி கலந்த இனிப்பு.  லெவெண்டர் பூந்தோட்டமும், செர்ரி, பிலம், காய்க்கறி வகையை மட்டுமே கோடையில் பார்க்கமுடியும். பூத்துக் குலுங்கும் நியூசிலாந்தை வசந்த காலத்தில் போனால் பார்க்கலாம். இங்கே குளிர்காலம் கொஞ்சம் பிந்தி வருகிறது.
 வடதுருவ நாடுகளில் நவம்பர் டிசம்பர் ஜனவரி மாதங்கள் குளிர்காலமாகும்.

லெவெண்டர் மலர்கள்


வைத்தாகி என்று சொல்லக் கூடிய இடம்   அங்குள்ள மௌரியர்கள் குடியேறிய ஏரிக்கரை. அது ஒரு  கண் காட்சி இடமாகப் பாதுகாக்கப் படுகிறது. இங்கேதான் முதன் முதலில் ஹவாயி தீவுகளிலிருந்து வந்து குடியேறிய  மௌரிய   வரலாற்றை பாதுகாக்கிறார்கள். இது ஏரிக்கரையாக மட்டுமின் றி வனப்பான நீர்வீழ்ச்சிகள் கொண்ட இடமாகவும் இருக்கிறது..

இதெல்லாம் முடிந்து ஒரு முக்கிய இடத்தை அடைந்தோம். அது பங்கி ஜம்ப். அதாவது 100 மீட்டர் பள்ளத்தில், பாலத்திலிருந்து பாய்ந்து சாகசம் செய்வது. எல்லாம் போதிய பாதுகாப்போடுதான். ஆனால் பாதுகாப்ப்பபைப் பற்றி பயத்துக்கு என்ன விளங்கும்?    அதற்காக  இரு வீரர்களை மலேசியாவிலிருந்து அழைத்துச் சென்றிருந்தோம். ஆனால் பிறர் குதிப்பதைப் பார்த்ததும் மெல்ல பின்வாங்கினர்.  அங்கே    தன் காதலி ஒருத்தி குதிப்பதற்கான கட்டணம் கட்டிவிட்டு அழுதபடி இருந்தாள். காதலான் அவளை ஆறுதல் படுத்திக் கொண்டிருந்தான். அவள் இந்தியப் பிரஜை. ஆனால் வெள்ளையப் பெண்கள் குதிப்பதில் காட்டும் ஆர்வம் நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது. என்ன கூய்ச்சல் என்ன குதூகளிப்பு! நாங்கள் அழைத்துச் சென்றவர்களின் மனைவி மார்கள் கூட இருந்ததால் கோழைகள் பட்டம் எளிதாகக் கிடைத்துவிடும் என்ற காரணத்தால் பின்வாங்குவதும் பம்முவதுமாக இருந்தார்கள். குதித்தார்களா இல்லையா....? நியூசிலாந்தில் மிக முக்கிய இடம் அது. குதிக்காமல் வந்தால் அவ்வளவு தூரம் போய் என்ன பயன்?
 தொடரும்.....

அந்த 2 வீரர்கள்



ஆற்றொழுக்கு

தொடரும்......

Comments

Popular posts from this blog

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

கோ.புண்ணியவான். அதன் பிறகு இந்தப் புதிய வடிவத்துக்குப் பெரிதாய் வாசல் திறந்து வரவேற்பு நல்கியது புதிதாய்ச் சிறகு தரித்து நாடு முழுதும் பாட வந்த வானம்பாடி என்ற வார இதழ்.தமிழ் மலரில் ஒரு செய்தி ஆசிரியராகச்சேர்ந்த ஆதி.குமணன் என்ற இளம் பத்திரிகையாளர் பின்னாளில் வானம்பாடி வார இதழைத்தொடங்கி புதுக்கவிதையை வளர்த்தெடுப்பதில் பிரத்தியேகக் கவனத்தைச்செலுத்தினார் என்பதைச்சரித்திரம் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்து வைத்திருக்கிறது. இதில் மிக முக்கியமான செய்தி என்னவெனில் தமிழ் மலரில் பணியாற்றும்போதே புதுக்கவிதைக்குப் பதியம் போட்ட ஆதிகுமணன் பிற பத்திரிகைகள் கொடுக்கத்தயங்கிய அங்கீகாரத்தைத் தன் புதுப்பத்திரிகையான வானம்பாடியில் சிவப்புக்கம்பல வரவேற்பை நல்கினார்.அதன் பின்னர் வானம்பாடி புதுக்கவிதைக்கான இயக்கமாகவே மாறி அதனைத்தீவிரமாக வளர்த்தெடுக்க முயன்றது.புதுக்கவிதை வடிவம் பழைய மரபைக் கட்டுடைத்துத்தந்த சுதந்திரத்தைச் சாதகமாகப்பார்த்த பலர் இத்துறையில் தங்கள் எண்ணங்களை எழுத்துக்களாக வடித்தனர். சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, கு.கிருஷ்ணன், துரை.முனியாண்டி, பிரசன்னா, இளந்தமிழன், வே.ராஜேஸ்வரி, அருள்தாசன் போன

வைரமுத்துவின் காலத்தால் அரிக்கப்படாத பாடல்கள்

கவிஞர் வைரமுத்து இந்த ஜூலை 13ல் மணிவிழா  கொண்டாடினார். மணி விழா எடுக்க எல்லாத் தகுதியும் கொண்டவர் கவிஞர். புதுக்கவிதை தமிழ்ப் படைப்புலகுக்கு அறிமுகமான  காலத்தில்   மரபிலிருந்து  புதுக்கவிதைக்குப் பெரும்  பாய்ச்சலை  நிகழ்த்தியவர்களில் மிக முக்கியமானவர்.  மரபுக்கவிதை காலமாற்றத்தால் கனிந்து உதிர்ந்து விழுந்து கொண்டிருக்கும் வேளையில் கவிதை இலக்கியம் தன்னை புதிய தோற்றத்துக்குத் தோலிருத்துக் கொண்டு புதிய சட்டையை மேலணிந்து கொள்ளத்துவங்கியது. இலக்கணச் சங்கிலியால் படைப்புச் சுதந்திரத்தை கட்டிப்போட்டிருந்த படைப்புத் தமிழ் மெல்லத் தளர்ந்து பின்னர் கட்டவிழ்த்து இலக்கணப் பிடியற்ற புதிய விடுதலைக்குத் தயாரானது. புதிய பரிமாணத்தில் புதிய கவிதை யுகத்தைப் படைக்க தொடங்கியிருந்தது. இது காலம் கொண்டுவந்த மாற்றம். மனிதர்களின் முன்தீர்மானம், திட்டமிட்ட செயல் என்றெல்லாம் சொல்வது காலம் வகுத்த விதிக்கு முரணாக சொல்லப்படும் கருத்தாக்கம். புதுக்கவிதை  மரபை பதியம்போட்டு வளர்த்த அப்போதிருந்த வானம்பாடிக் கவிஞர்களே புதுக்கவிதை இலக்கியத்தை ஒரு இயக்கமாக முன்னெடுத்தார்கள். கவிதை படைப்பிலக்கியத்துக்குப் புதிய தோற்றம் த

தாய்மை- சிறுகதை

                                                                தாய்மை                                                      கோ.புண்ணியவான்                காரை என்னால் தொடர்ந்து செலுத்த முடியவில்லை. கார் என் கட்டுப்பாட்டிலிருந்து நழுவிய நுண்ணுணர்வு தாக்கியது. நான்  காரின் கட்டுப்பாடட்டுக்குள் அடிமையான தோல்வியை உணர்ந்தேன். அம்மா இல்லாத பின் இருக்கை, அவள் மூச்செறியும் ஓசையின்மை, குமாரு..என்று குரலெழுப்பாமை, என்னை அலைக்கழித்தது. என்னைச் சுதாரித்துக் காரை  ஓரங் கட்டினேன். காரை நிறுத்திவிட்டு  சாய்த்து சலனமற்றிருந்தேன்.                மனைவி என்னைத் தீர்க்காமாகப் பார்த்தாள்.   என் நிலைமையைப் புரிந்துகொண்டவள் போல்,” நான் ஓட்றேன். நீங்க இப்படி உட்காந்துக்குங்க,” என்று கதவைத் திறந்தாள்.வாகனங்கள் சாலையைக் கிழித்துக்கொண்டு காற்றை  அறைந்தபடிச் சீறிச் சென்றன. நான் கதவைத் திறந்தேன். திடீரென் செவிகளைத் தாக்கிய ஹார்ன் சப்தம் என் சுய நினைவை மீட்க,. மீண்டும் கதவை அடைத்தேன். மனைவி, “பாத்து” என்று பதறினாள்.               மனைவி ஓட்டுனர் சீட்டுக்கு மாறினாள் நான் பக்கத்து இருக்கையில் அமர்ந்தேன். நெஞ்சின