Skip to main content

மாடுகள் மலைகள் ஏரிகள்.3

மாடுகள் மலைகள் ஏரிகள்~ 3

நாங்கள் தங்கும் விடுதியெல்லாம் சற்றேறக் குறைய வீடு போன்ற அமைப்பைக் கொண்டது. சமையல் அறை, அதற்கான தளவாடங்கள், துணி துவைக்கும் இயந்திரம் என பெரும்பாலான வசதி கொண்ட இடம்.  மறுநாள் வெகுதூரம் பயணமாக வேண்டும் . வாய்க்கு ருசியாக உணவு கிடைப்பது கடினம். இடையில் உணவுக்காக நிறுத்தினால் சுற்றுலாத் தளங்களைப் பார்க்க முடியாது.  எனவே காலை உணவு விடுதியிலேயே தயாரித்துக் கொள்ளலாம் என்று முடிவெடுத்தோம்.  ரொட்டி, சீஸ், துனா சாடின், முட்டை, பால் . சீனி, நெஸ்கேப்பி போன்ற உடனடி உணவு வகையை  அன்றிரவே வாங்கிக் கொண்டோம்.  என் மனைவியும் செல்வியும் அன்றைக்கான உணவு தயாரிக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்கள். ரோத்தொருவா எனும் புகழ்பெற்ற நீர்வீச்சி சுற்றுளாத் தளம்  எங்களின் அடுத்த இலக்கு. பகல் உணவு நேரம் நெருங்கும்போது நாம் ஒரு சிறிய பட்டணத்தை அடைவோம் என்றார் மருமகன்.
நாங்கள் கிளம்பும் போது காலை மணி எட்டு. ஆனால் வேன் சில இயந்திரப் பிரச்னைகளைக் சமிக்ஞை செய்தது. வெகுதூரப் பயணமாதலால் சரி செய்துவிட வேண்டும் என்று அங்குள்ள கிளை அலுவலகத்துக்குச் சென்று சரி செய்து கொண்டோம். அங்கேயே காலை உணவை முடித்துக் கொண்டு ரோத்துருவா நோக்கிப் புறப்பட்டோம். இந்த லூசி சுற்றுலா வழிகாட்டி கம்பெனி நியுசிலாந்து முழுவதும் அலுவலகங்கள் வைத்திருக்கிறது. நூற்றுக்கணக்கான வாகனங்கள். பேருந்துகள். உல்லாசக் கப்பல்கள், விடுதிகள் என லூசிக் நிறுவனத்துக்குச் சொந்தமாக இருந்து விரிந்த சேவை வழங்குகிறது. வாகனப் பிரச்னை இணையத் தொடர்பு பிரச்னை என்றால் கிளை அலுவலகங்களுக்கும் செல்லலாம், தொலைபேசியில் தொடர்கொண்டால் உடனே சீர் செய்து கொடுக்கிறார்கள்.
ஒரு பட்டணத்துக்கும் இன்னொரு பட்டணத்துக்கும் வெகுதூரப் பயணம் மேற்கொள்ள வேண்டும். நூற்றுக்கணக்கான, பல மணி நேரப் பயணத்துக்கு நாம் மனதளவில் தயாராகிவிட வேண்டும். கையோடு உணவுப் பொருட்கள் கொண்டு போவது புத்திசாலித்தனமாகும். நியூசிலாந்தில் பொதுப் போக்குவரத்து என்றால் விமான வழி மட்டுமே. சாலைகளை அல்லது விரவு ரயில் போக்கு வரத்தை துரைதப்படுத்த  எண்ணற்ற மலைகளைக் குடைந்தாக வேண்டும். மிக்ந்து பொருட் செலவு. எனவே சாலைகளை மலைகளில் ஏறி இறங்கி பள்ளத்தா க்கு வழியாகத்தான் செல்ல வேண்டும். பபொதுப் போக்கு வரத்தாக   நீண்ட தூரப்  பேருந்து சேவை கூட இல்லை. நகரங்க ளுக்கு உள்ளே மட்டுமே பேருந்து சேவை உண்டு.

 மலைகளைக் கடந்து  பயணம் செய்து கொண்டே இருக்கிறோம். அடுத்த பட்டணம் எப்போது நெருங்குவோம் என்ற இலக்கை மறந்த பயணம்.  விவசாய நிலங்களின் செழும் பச்சை , நீலம் நெடுக விரிந்த விதானம் ,  கடல் போல விரிந்து கிடக்கும் நீலவண்ண ஏரிகளின் மேல்பரப்பை வெள்ளி மணித் துகல்களாக்கும் சூரியக் கதிர்களின் ரசவாதம், இப்படிப் புத்தம் புதிய நிலத்தின் வனப்பில்   குதூகளிப்பில் திளைக்கிறது மனம்.  இவ்வாறான நிலக்காட்சிகளைப் பார்த்து நெடு நாட்களாகிவிட்டதன. குறிப்பாக மலைகள் நிறைந்த இடம் நியூசிலாந்து. குறிஞ்சி நிலப் பகுதி நிறைந்த ஊர் . ஐந்திணை என்று தமிழர் மரபு நிலத்தை ஐந்தாகப் பிரிக்கிறார்கள். அதில் மலை சார்ந்த பகுதிகளை குறிஞ்சி நிலம் என்கிறார்கள். குறிஞ்சி நிலம் கெட்டியான மண்ணால் ஆனது. அதனை  நியூசிலாந்தில் நெடுக்க பார்க்கலாம். பெரும்பகுதியான மலைப்பகுதிகள் பாறைகளாலுல் கற்களாலும் ஆனது.
இடை இடையே மேய்ச்சல் மாடுகள் ஆயிரக் கணக்கில்  பார்க்கக் கிடைக்கிறது. ஆனால் வேலியற்ற சாலைக்கு அருகே கூட ஒரு மாடுகூட வரவில்லை. நான்கு மணி நேரம் பயணத்தில் இதனைக் கவனித்த சேதுதான் குறிப்பிட்டுக் கேட்டார்.
"நம்ம ஊர்லன்னா நெடுஞ்சாலையில் கூட மாடுகள் இருக்க வாய்ப்புண்டு. இங்கே அப்படியில்லையே," என்றார்.  "அது பாட்டுக்கு  கடமையே கண்ணாக மேய்ந்து கொண்டிருக்கிறது. குனிந்த தலை நிமிராது மணப்பெண்போல."(இப்போதுள்ள மணப்பெண்களை இப்படியெல்லாம் நான் கேவலப் படுத்த மாட்டேன்) 
இங்கே வேலியில் மின்சாரம் ஓட்டம் இருக்கலாம் என்றார் சேது .
அப்படியிருக்காது, மிருக வதைச் சட்டத்தில் உள்ளே போட்டு விடுவார்கள்! அதற்கான சுவையான புற்கள் தனியாக வளர்க்கிறார்கள்.  அவற்றுக்கென்றேயான பிரத்தியேக புற்பகுதிகள் அவை. அதன் சுவையை விட்டு வெளியேற அவற்றுக்கு  மனமில்லாமல் இருக்கலாம். நம்மூர் மாடுகளுக்கு மட்டும்தான் அக்கறைப் பச்சை பேராசை போலும். என்றேன். நன்றாகப் பாருங்கள் நாம் அவற்றை வேடிக்கைப் பார்க்கிறோம். அவை நம்மை திரும்பிக் கூடப் பார்ப்பதில்லை. அப்படியானால் புல்லின் சுவை அலாதியாக இருக்கும். உலகத்தின் உணவு வகைகளில் மாட்டிறைச்சி சுவை மிகுந்தது என்கிறார்கள். இது ஏன்? அதனை ஆரோக்கியமாக வளர்க்கும் முறைதான் காரணம்.

கோடை காலத்தில்  மேய்ச்சல் மாடுகளுக்கான புற்பரப்பு காய்ந்துவிடாமல் இருக்க தண்ணீர்  பீய்ச்சுகிறார்கள் -தன்னிச்சையாய் நீர்வார்க்கும் இயந்திரங்கள் கொண்டு. மாடு மேய்க்கவோ  நீரூற்றவோ ஒரு மனிதத் தலையைக் கூடப் பார்க்க முடியவில்லை. அப்படிப் பண்போடு வளர்த்திருக்கிறார்கள் ஆடு மாடுகளை. மலேசியாவில் சில மாட் ரெம்பிட் மாடுகள் கண்மண் தெரியாமல் மோட்டார் சைக்கில் பந்தயத்தை நள்ளிரவில் நடத்தும். இதனை இங்குள்ள காவலர் மாடுகள் கட்டுப் படுத்தவே முடியவில்லை. மலேசியாவில் கைகால் உடைந்து போனவர் எண்ணிக்கைக் கான  கண்க்கிட ஆய்வு நடந்தால்  அதௌ மாட் ரெம்பிட்   விபத்துக்குள்ளானவர்கள்தான் அதிகம் இருப்பர்.






ரோத்தோருவா நீர் வீழ்ச்சிகளுக்குப் பிரபலமான இடம். அதனை போய்ச்சேருமுன்னர், ஹொபிட்டன் என்ற பிரபல ஹாலிவுட் திரைப்படம் எடுக்கப்பட்ட இடத்துக்கு வண்டியைத் திருப்பினோம். ஹாபிட்டன் திரைப்பட படப்பிடிப்புத் தளம் 2010 படம் எடுத்த நாளிலிருந்து பேணப்பட்டு வருகிறது. இது Lord of Rings திரைப்பட அத்தியாயத்தில்  மேலுமொரு படம். அந்த படப்பிடிப்புத் தளத்தை உருவாக்க நூற்றுக் கணக்கான் ஏக்கர் நிலத்தை உரியவரிடம் வாங்கி  இருக்கிறார்கள். நம்ம சங்கர் செலவைவிட 100 மடங்கு  அ திகம். நியூசிலாந்து அரசாங்க அப்படத்தளம் உருவாக்க ராணுவ வீரர்களையும் வடிவமைப்புக்கான செலவையும் ஏற்றுக் கொண்டு செயலாற்றியிருக்கிறது.  அப்படம் ஓஸ்கார் வெற்றிகளைக் குவித்திருக்கிறது.  ஆதாயம் இல்லாமல் ஆத்த கட்டி இறைக்க மாட்டான் என ஒரு பழமொழி உண்டு. ஏன் இவ்வளவு மெனக்கட்டு செலவு செய்திருக்கிறது என்ற காரணம் அங்கே போய்ப் பார்த்தால்தான் தெரிகிறது. அந்த ஓஸ்கார் பேரை வைத்துக்கொண்டு அதனை சுற்றுலாத்தளமாக்கி கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறார்கள். அவ்விடத்தைச் சுற்றிப்பார்க்க குறைந்தது தலைக்கு 1000 ரிங்கிட் டிக்கட் விற்று போட்ட பணத்துக்கும் மேலாக வருமானம் ஈட்டி வருகிறார்கள். நாங்கள் போனபோது அங்கே நூற்றுக் கணக்கானவர் காத்திருந்தனர். 
அங்கேயே பகல் உணவை முடித்துவிட்டு ரோத்தோருவா கிளம்பினோம்.

தொடரும்....







Comments

Popular posts from this blog

கவிதைக்குள் பாதாம்பருப்பு

                                                                                                  நா ன் பணியாற்றிய ஒரு பள்ளியில் ஓர்இளைஞர் தற்காலி ஆசிரியராக வந்து சேர்ந்தார். தொடக்கத்தில் அவர் சாமான்ய இளைஞரைப்போலத்தான் தோன்றினார்.  ஆனால் அவரிடம் சில கோளாறுகள் இருப்பது சற்றுத் தாமதமாகத்தான் தெரிய வந்தது. உடன் வேலை செய்யும் ஆசிரியர்கள் கொடுத்த புகார்களின் பேரிலும் நானே நேரடியாக அனுபவித்ததின் பேரிலும் . அவரை தொடர்ந்து பள்ளியில் வைத்திருப்பது ஆபத்தானது என்று முடிவெடுத்து மாவட்டக் கல்வி இலாகாவின் கட்டளையின் பேரில் அவரை வேலையிலிருந்து உடனே நிறுத்திவிட்டேன். பள்ளியில் படிக்கும்போது அவர் மிகவும் கெட்டிக்கார மாணவராக இருந்திருக்கிறார்.  அசாதாரண அறிவாளி தரத்தில் வைத்துப் பார்க்கவேண்டியவர் என்று அவரோடு படித்து இன்றைக்குப் பல்கலைப் பேராசிரியாரா...

யானையின் பாதத்தடம்

                                         இ ம்முறை வல்லினம் விருது பி.எம் மூர்த்திக்கு வழங்கப்படுகிறது. அதனை முன்னிட்டு மூர்த்தியையுடனான என் அனுபவப் பகிர்வு இக்கட்டுரை.           மூர்த்தியை நான் முதன் முதலில் ஜித்ரா ஐ ஏ பி கல்விக் கழகத்தில்தான்   சந்தித்தேன். இது நடந்து கிட்டதட்ட 35/40 ஆண்டுகள் கடந்துவிட்டன. எங்கள் இருவருக்கும் ஒரே அறை ஒதுக்கப்பட்டிருந்தது ஒரு தற்செயல் அல்ல அது ஏதோ ஓர் ஏற்பாடு என்று முதலில் நான் அறிந்திருக்கவில்லை. குளிர்சாதன வசதி இல்லாத அறை அது. இரவில்கூட வெக்கை உக்கிரமாகத் தாக்கும். 30 மைல்கள் ஓடிவிட்டது போல வியர்த்துக் கொட்டும். இரு முறை மும்முறை இரவில் குளித்தவுடனும் வியர்க்கும். இவ்வாறான கையறு நிலையில் உஷ்ணத்தைக் குறைக்க சில அசட்டுத்தனமான யோசனைகள் தோன்றுவது இயல்பு. உறக்கம் வராமல் தவித்துபோது , சிமிந்துத் தரையில் வாலி வாலியாக தண்ண...

சீ.முத்துசாமி தேர்ந்தெடுத்த எழுத்திலக்கு வெல்லும் இலக்கு.

 சீ.முத்துசாமி தேர்ந்தெடுத்த எழுத்திலக்கு வெல்லும் இலக்கு.   சீ.முத்துசாமி அறிமுகமான தொடக்க காலம்தொட்டே எனக்கும் அவருக்குமான விலகல் தொடங்கிவிட்டிருந்தது .அது என்ன காரணத்தினால் என்று என்னால் அருதியிட்டுச் சொல்லத் தெரியவில்லை. சம வயது கலைஞர்களுக்கே உரித்தான காழ்ப்பு மன இயல்பாகக் கூட இருக்கலாம். அவர் யாரிடமும் நெருக்கமாக பழகும் குணமுடையவர் அல்ல. எம் ஏ இளஞ்செல்வனும் அவரும் சமகாலக் கலைஞர்களாக இருந்தாலும் அவர்களிடையேகூட விலகல் இருந்துகொண்டே இருந்ததை நான் அவதானித்தேன். சீ.முத்துசாமி ஒரு தனிமை விரும்பி. சொற்களை அளந்து பேசுபவர். சக நண்பர்கள் விரும்பாத தொனியில் சொற்களை உபயோகிப்பவர். இந்தக் காரணங்களின் பொருட்டே அவர் தனித்த பாதையைத் தேர்ந்தெடுத்திருக்கலாம்..அது சில தனிமனிதர்களின் இயல்பு என்று பின்னாளில் புரிந்துகொண்டேன்.  எனக்கும் அவருக்குமான விரிசல் ஒரு சந்தர்ப்பத்தில் விஸ்வரூபம் எடுத்தது. நான் 1995 முதல் 2005 வரையில் கெடா மாநில எழுத்தாளர் சங்கத் தலைவராக இருந்தேன். நான் விரும்பி ஏற்றுக்கொண்ட பதவி அல்ல அது. என்னிடம் வற்புறுத்தி கொடுக்கப்பட்ட ஒரு பணி. லாங்காவியில் ஐந்து ஆண்டுகால ...