Skip to main content

Posts

நடிகர் நடிகையரைப்பற்றிய என்சைக்லோபிடியா.. ந்தா பிடியா

கிருத்திக் ரோபொஷனுக்கு எப்போது பிறந்தநாள் என்று தெரியுமா உங்களுக்கு? அவருக்கு இப்போது என்ன வயதாகிறது? திருமணமாகிட்டதா? எத்தனைக் குழந்தைகள் என்ற விபரமாவது தெரியுமா இதெல்லாம் தெரியாதென்றால் பொது அறிவைப் புறக்கணித்த கிணற்றுத்தவளையாகிவிடுகிறீர்கள் நீங்கள். ரஜினிக்கு தன் மனைவியோடு பேசுகிறாரா? கமல் கௌதமியோடு குடும்பம் நடத்துகிறாரா? அல்லது ஒரே வீட்டில் சேர்ந்து நண்பர்களாக இருக்கிறார்கள் போன்ற முக்கியமான புதிர்களுக்கு விடை காணவேண்டுமா? ஸரேயாவின் இடுப்புச்சுற்றளவு தெரியவேண்டுமா? சாமிரா ரெட்டியின் ஸ்தனங்கள் என்ன சைஸ்? அடுத்த திரைப்படத்துக்கு விஜய் எந்த நாயகியைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்? ஏன் திரிஷாவை ஓரங்கட்டினார் போன்ற அதல பாதால வினாக்களுக்குப் பதில் வேண்டுமா? இதையெல்லாம் தெரியாமல் இருப்பது உங்களுக்கு வெட்கக்கேடான விஷயமாக படுகிறதா? கவலையே வேண்டாம்! இதற்கெல்லாம் விரல் நுணியில் விளக்கம் வைத்திருந்து தருவதற்கு நம் தனியார் வானொலி அறிவிப்பாளர்கள் தயாராக இருக்கிறார்கள். சதா நடிகை நடிகர்களின் திருநாமங்களை உச்சரிப்பதிலும், சினிமா பற்றிய சமீபத்திய சரித்திரத்தைத் தெரிந்துகொள்வதிலும் அவர்கள்...

ஒரு தடுப்புச்சுவரிலிருந்து படரும் இருள்

1. அந்தக்கம்பத்தில் கால்வைத்தபோது அந்நிய பிரதேசத்தில் நுழைந்துவிட்டதுபோன்ற குற்றமனம் உறுத்தியது.. கம்பத்துக்குள் நுழைவது அதுதான் முதன்முறை என்பதனால்.. கரீம்தான் கண்டிப்பாய் வரவேண்டும் என்று கையைப்பிடித்து வலிய கேட்டுக்கொண்டான். எல்.சி.இக்கு நான்கு மாதமே இருக்க நானும் அவனும் மிக நெருக்கமாகிக்கொண்டிருந்தோம். என் மலாய் மொழியின் சந்தேகத்தை அவனிடமும், அவனின் கணிதப்பாட சந்தேகத்தை நானும் தீர்த்துக்கொண்டதில் உண்டான எங்கள் நட்பு, ஒரே தட்டில் சாப்பிடப் பழக்கமாகி, ஹரிராயாவுக்கு அவன் வீடுவரை என்னை இழுத்து வந்திருக்கிறது. அவன் வீடு இன்னதுதான் என்று அவன் கொடுத்த பத்தாவது மைல் கல், பள்ளிவாசல், இரு கிளைகள் ஓடிய தென்னை அச்சு அசலாய் அடையாளம் காட்ட, எங்களை வரச்சொன்ன அவனை வாசலில் காணமல் ஏமாற்றம் சின்னதாய் கோபத்தைக்கிளறியது. எனக்குப்பரிச்சியமான ஒரே முகம் கரீமுடையதுதான். நான் வீட்டு முன் உங்களுக்காகக் காத்திருப்பேன் என்று சொன்னவனைக் காணாததால் அந்த அந்நியம் எங்களுக்குள் நுழைந்திருக்கலாம். ஓங்கி வளர்ந்து நீண்டிருந்த தென்னை மரங்கள் அந்தக் கிராமத்தைத்தாங்கும் தூண்கள் போன்று நின்றிருந்தன. அப்போதுதான்...

விளையாட்டுப்பருவத்தைக் கபளீகரம் செய்யும் கல்வித்திட்டம்

நேற்று என் பேரன் முதலாம் ஆண்டில் காலடி எடுத்துவைத்திருக்கிறான். பள்ளி ஆண்டு துவங்குவதற்கு முன்னாலிருந்தே அவனைப்பதிவதற்கான முன்னேற்பாடுகளின் போது அவன் காட்டிய ஆர்வமும் பரபரப்பும் அவன்பால் அதிகம் ஈர்க்கவைத்தது. அவனுக்காக வாங்கப்பட்ட புத்தகப்பையை என்னிடம் காட்டி அவன் ஆத்தா வாங்கிக்கொடுத்ததாக சொல்லி அதனைப் பயன்படுத்தும் முறையை என்னிடம் விளக்க ஆரம்பித்தான். புத்தகப்பையைத் தூரமாக எடுத்துச்செல்லும்போது அதனை இலகுவாக இழுத்துச்செல்லமுடியும் எனச்செய்து காட்டினான். அதனை முதுகிலும் சுமந்து செல்வதற்கான முறையையும் செய்து காட்டினான். தன் புதிய வெள்ளைக்காலணிகளையும் காலுறைகளையும் போட்டுக்காட்டி அவை பள்ளியில் சுத்தமாகப்பயன்படுத்த வேண்டும் என்றும் விளக்கினான். அவனுக்கு வாங்கித்தரப்பட்ட பென்சில் பெட்டியையும் காட்டி, அவற்றுக்குள் என்னென்ன இருக்கிறது அதன் பயன்பாடு என்ன என்பதையும் விளக்கிய வண்ணமிருந்தான். அப்போது அவன் முகத்திலிருந்தும் உடல் மொழியிலிருந்தும் வெளிப்பட்ட வெளிச்சம் பிரகாசமாய் இருந்தது. அவன் பெறப்போகும் புதிய அனுபவத்தின் படிமங்களை ரசித்தது சுகானுபவமாக இருந்தது. தனக்கான ஒரு கற்பனை உலகத்தை...
அன்பு சகோதரருக்கு, நமஸ்காரம். நிங்ஙளின் வலைப்பதிவை படிக்கிறேன். விளிம்பு நிலை--க் கவிதை நன்றாக உள்ளது. கட்டுரைகளும் அப்பழுக்கில்லை. சுவாரஸ்யத்துடன் படிக்கத் தூண்டுபவையே, அதிலும் மலேசியாவின் இன்றைய நிலையை அழகாக படம் பிடித்துக்காட்டுகிறீர்கள்.. ஒரு சம்சயம். தமிழாசிரியர் என்பதால் கேட்கிறேன். நிங்ஙளின் முகப்புக்கட்டுரையில், கபலீகரம் என்று வருகிறதே? சரியா என்று தெரியவில்லையே? கபளீகரம் என்பதுதானே தூய தமிழ்ச்சொல். தட்டச்சின் அவசரத்தில் அப்படி வந்து விட்டதோ? அன்புடன் கமலாதேவி.சிங்கப்பூர்

விளிம்பு நிலையில் கடவுள்

அரசர் சாலமனிடம் இன்னொரு விசித்திரமான வழக்கு வந்தது ஒரே கடவுளை இரு மதங்கள் உரிமை கொண்டாடின சாலமன் ஆழச்சிந்தித்து ஒரு முடிவுக்கு வந்தான் கடவுளைச் சம பாதியாக துண்டுபோட்டு ஆளுகொன்றாய் கொடுத்துவிடு என்று உத்தரவிட்டான் கதி கலங்கிய இரண்டு மதங்களும் அழுது கதறிப்புலம்பின தன் வாழ்நாள் முழுதும் இரண்டு பக்கமும் இருந்துவந்த கடவுள் இப்போது யார் பக்கமும் போகாமல் இருந்துவிட்டார்.

வெள்ளி முளைத்தும் விடியாத சமூகத்தேக்கம்

கடந்த வெள்ளி சனி, ஞாயிறு ஆகிய தினங்களில் லங்காவித்தீவுக்குச் சுற்றுலா போயிருந்தோம். மலேசியாவின் மேற்குக்கடற்கரை பகுதியில் ஒரு மீனவத்தீவாகவே 70களின் இறுதிவரை தன்னை அடையாளப்படுத்திக்கொண்ட தீவு லங்காவி.( இலங்கையை நினைவுக்கு வருகிறதா? இராமனின் பாதச்சுவடு லங்காவியில் இருபதாகச்சொல்கிறார்கள்) விவசாய நிலமும் ஏழை மனிதர்களும் அவர்களைச்சூழ்ந்துள்ள ஏழ்மையைப்போல், கடல் அலைகள் மட்டுமே இருந்த இந்தத்தீவு இன்றைக்கு உரு மாறி, நிறம் மாறி, ஏழ்மை என்ற முள்வேலியை அகற்றிக்கொண்டு தன்னை வைரங்களாலான ஆபரங்ணங்களால் அழகுபடுத்திக்கொண்டு கம்பீரமாகக்காட்சி தருகிறது. ஒரு மந்திரவாதியின் மந்திரக்கோல் சொடுக்கில் திடீரென வேறொன்றாய்க்காட்சி தரும் லங்காவித்தீவு கரையை வந்தடையும் அலகலைப்போல சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்திழுத்த வண்ணம் இருக்கிறது. அந்தத்தீவீன் தலையெழுத்தை மாற்றிய மந்திரவாதி வேறு யாருமல்ல. மலேசியாவின் நான்காவது பிரதமராக 20 ஆண்டுக்கும் மேலாக இருந்த துன் மகாதிர் தான். ( துன் என்பது பேரரசர் வழங்கிய மிகப்பெரிய கௌரவ விருது) மகாதிர் மேல் மிகக்காத்திரமான அரசியல் சார்ந்த விமர்சனங்கள் இன்றளவும் வீசப்பட்டுக்கொண்டு இருந்...

சினிமாக்காரனுக்கு ஏன் இந்தச் சின்ன புத்தி?

இரண்டு தினங்களுக்கு முன்னர் இதனை எழுத நினைத்து நான்கு ஐந்து வரிகள் எழுதி பின்னர் அழித்துவிட்டேன். எனக்கு எழுதப்பிடிக்கவில்ல. ஆனால் நேற்று ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியைப் பார்த்த பின்னர் அதன் பாதிப்பால் மீண்டும் எழுதத்தூண்டியது. வேண்டாம் என்று விட்டு விடலாம் என்று பார்த்தால், ஏதோ ஒன்று எழுதிவிடுவதற்கான நெருப்பை மூட்டிக்கொண்டே இருக்கிறது. இந்தச்சகதியெல்லாம் எழுதி நேரத்தை ஏன் வீணாக்கவேண்டும் என்று முடிவெடுத்து ஒதுங்கினாலும், குறுக்கே வந்து எழுதித் தொலைப்பதற்கான ஆதங்கத்தை மேலோங்கச்செய்தது. இப்போதும் சொல்கிறேன் நான் எழுதவில்லை, எனக்குள் புகுந்த ஒன்று தீய சக்தியைப்பற்றி எழுத வைக்கிறது. மலத்தை 24 மணிநேரத்துக்குமேல் உடல் வைத்திருக்க விரும்புவதில்லை. இல்லையா? ஒரு வாரத்துக்கு முன்னால் நடிகர், சூப்பர் ஸ்டார், இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் ரஜினியின் பிறந்த நாள். தமிழை எப்படி உச்சரிக்கவேண்டும் என்று சிவாஜி கணேசன் இவரிடம் கற்றுக்கொள்ள வேண்டும். எப்படி இடுப்பை ஆட்டிக்கொண்டு கைகளை மூன்னும் பின்னுமாக (கொசு விரட்டும் மாட்டின் வாலைப்போல) வீசி வீசி வசனத்தை நாக்கில் படாமல் பேசுவது என்ற வித்தையை தமிழ...