Skip to main content

Posts

இளகிய மனமுள்ளோர் இதப்படிக்காதீங்க

சின்ன வயசுல ஒரு கதை சொல்வாங்கஇ ஏழு கடல் தாண்டி ஏழு மலை தாண்டி ஒரு அரக்கனோட உயிர்இ ஒரு கிளிட்ட இருக்குஇ அந்த கிளிய ஒரு ராஜகுமாரன் போய் கொன்னுட்டு தன்னோட ராணிய காப்பாத்துனான்னு… கேள்விபட்டிருக்கீங்களா? கண்டிப்பாகேள்விபட்டிருப்பீங்க. ஏன்னாஇ அது சின்ன வயசு கதை. இப்ப பெரிய வயசுல ஒரு கதை சொல்றேன். ஒரு பாலம் தாண்டிஇ ஒரு கோயில் இருக்கு. அந்த பாலத்துக்கு அடியில ஒரே தண்ணிஇ கண்ணுக்கு எட்டுன தூரம் வரை தண்ணி. அத கடல்னு சொல்றாங்க. அந்தக் கடல்ல என்ன நடந்தாலும் யாருக்கும் எதுவுமே தெரியாது. அந்தக் கோயில்ல ஒரு சாமி இருக்கு. அந்த சாமியால கூட உதவ முடியாம கடலுக்கு பக்கத்துல நிறைய மக்கள் இருக்காங்க. உங்களப் போலஇ என்னப் போல … சொல்லப் போனா ஒரு லட்சம் மக்கள். எந்த ராஜகுமாரனும் இதுவரைக்கும் வந்தபாடில்ல. இத கேள்விபட்டிருக்கீங்களா?. கண்டிப்பா கேள்வி பட்டிருக்கமாட்டீங்க. ஏன்னாஇ அந்த மக்களோட வாழ்க்கை முறைக்கும் நமக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. ஒரே ஒரு சம்மந்தம் வேணும்னா இருக்கும். அது என்னான்னு அப்புறம் சொல்றேன். இந்த கோயிலும்இ பாலமும்இ எங்க இருக்குன்னு யோசிச்சீங்களா? தெரியலேனா பரவாயில்லைஇ ரொம்ப யோசிக்...

சினிமாட் தாக்கம்

சினிமா தாக்கம் சினிமாவைப் பற்றி தெரிந்து வைத்துக் கொள்ளும் அறிவு இதனை தாண்டி தமிழ் இலக்கிய படைப்புகளைப் படிக்க முன்வந்தோர் இன்றில்லையோ என்றெண்ணும் அளவுக்கு இன்றைய நிலைமை உள்ளது. ஜனரஞ்சகமான காட்சிகள்இ கருத்தைஇ கவனத்தைக் கவருவதில் அதிசயமில்லைதான். எழுத்தையும்இ படைப்பையும் அப்படி மாற்றுவதற்கான வாய்ப்புகள் வருமா? எப்படிப் படைத்தாலும் படிப்பவரின் எண்ணிக்கையில் ஏற்றமில்லை. ஊடகங்களின் ஆகிரமிப்பில் உணர்வுகளைத் தொலைத்து விட்டு நிற்கிறோமோ என்ற எண்ண அச்சுறுத்துகிறது. கடிதம் எழுதச் சொல்லிக்கொடுத்தால் ஒரு மாணவன் கேட்கிறான் எதற்கு இதைப் படிக்க வேண்டும் அலைபேசியில் அழைத்து விவரத்தைச் சொல்லி விடலாமே என்று. துரு துரு பையனின் கேள்விக்குத் திரு திரு என்று விழித்து விட்டு சொன்னேன் சோதனைக்கு வரும் படி என்று. அவனுக்கு என்ன சொல்லி உணர்த்த வேண்டும். எப்படி சொன்னால் புரிந்து கொள்வான் என்று தெரியவில்லை. இப்படி தான் சினிமாவும் என்று ஒரு இயல்பான பதிலைத் தயாராக வைத்துக் கொள்ள வேண்டுமோ? தெரியவில்லை. சினிமாவும் ஓர் இலக்கியமாக இருந்த காலம் ஒன்று உண்டு. ஆனால்இ அது பழங்கதையோ. நம்மவர்களுக்குச் சிறந்த பொழுது போக்கென்று ஒ...

ஒரு தடுப்புச்சுவரிலிருந்து.....

சார் இக்கதை அருமையாக இருந்தது. முக்கியமாய் கதையின் முடிவு விழியில் நீரை வரவழைத்து விட்டது. இன்றைய நிலையை உள்ளப்படியே கதையில் காட்டியிருக்கிறீர்கள். எங்கள் பக்கத்து வீட்டுக்காரரின் தடுப்புச்சுவர் போல் இருக்கிறதே என்று படித்தேன்இ மனங்களிலும் இவர்களால் எப்படிதான் சுவர் எழுப்பிக் கொள்ள முடிகிறதோ தெரியவில்லை. இந்த வரிகள் மிகவும் அழகாக அனுபவபூர்வமாக எழுதப்பட்டுள்ளது என்று நினைக்கிறேன். அவர்கள் கரிசனத்தோடு பேசப்பேச அவர்களின் புத்தாடையைவிட அழகாகிகொண்டே போனார்கள். வீட்டில் இருக்கும் தருணங்களில் சதா அணைத்தபடி இருந்தவளின் உடற் சூட்டுக்காக தவித்தாள். அநத அணைப்பு கிட்டாத தருணம் தன் வாழ்வின் புதிர் மிகுந்த தருணமாக மாறிக்கொண்டிருப்பதாக உணர்ந்தாள்.. ஒரு தாயின் தவிப்பை இந்த வரிகளில் அழகாக ஆழமாகப் பதிவு செய்திருக்கிறீர்கள். மஞ்சுளா

மறக்கப்பட்ட ஆளுமை

கோ.புண்ணியவான். எம்.ஏ.இளஞ்செல்வன் நினைவாக மலேசிய சிறுகதை எழுத்தாளர் எம் ஏ இளஞ்செல்வன் மாரடைப்பால் திடீர் மரணமுற்ற தகவல் கிடைத்தபோது நான் மலாயா பல்கலைக்கழக துணைவேந்தர் மண்டப வாயிலின் எழுத்துலக நண்பர்களோடு பேசிக்கொண்டிருந்தேன்.டாக்டர் கிருஷ்ணன் மணியம்தான் அவர் இறந்து போன செய்தியை என்னிடம் சொன்னார். அவரின் வசிப்பிடத்துக்கு அருகாமையிலேயே வசிக்கும் எனக்கு கோலாலம்பூருக்குப்போன பிறகுதான் செய்திகிடைத்தது ஒரு துர்ரதிர்ஸ்டம். மனம் பல்கலலைக்கழக மண்டபத்திலிருந்து அப்போதே விடைபெற்றுக்கொண்டிருந்தது. ஒரு இலக்கிய நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்திருந்த எனக்கு ஒரு இலக்கியப்பேராண்மையின் மரணம் என்னைப்பெரிதும் பாதிக்கத்துவங்கியிருந்தது. ஏனெனில் எம் ஏ இளஞ்செல்வனை ஒரு நண்பராக பார்த்ததைவிடவும், ஒரு சக எழுத்தாளனாக அவதானித்ததைவிடவும், சக தலைமை ஆசிரிய நண்பனாகப் பழகியதைவிடவும், ஒரு இலக்கிய மேலாண்மையை பிரம்மிப்போடு அன்னாந்து பார்க்கும் மன நிலைக்கு நான் தள்ளப்பட்டிருந்தேன். அவருடைய சிறுகதைகளை வாசித்த பிறகு அவரை அமானுடமாக பார்ப்பதை ஒரு தரிசனமாகவே மேற்கொண்டேன். அவருடைய சிறுகதைகள் முற்றிலும் வேறொரு தளத்தில் இயங்கி இ...
வணக்கம் சார்.  தங்களின் ‘கோபாலும் அவனைச்சுற்றிப் பின்னப்பட்டுள்ள வலைகளும்’ படித்தேன். கோபாலின் நோயைவிட கோபாலைச் சுற்றிப் பின்னப்பட்டுள்ள வலைகளே அவனுடைய வாழ்க்கையில் கொடியதாக அமைந்துள்ளது. பல சமயங்கள் தற்கொலைக்கு முயல்பவனைக் கோழை என்றும் பயமுறுத்தல் என்றும் வகை படுத்த முடியவில்லை. கோபாலின் நோயினால் மற்றவர்களிடமிருந்து எஞ்சியது அனுதாபமும் வெறுப்பும் மட்டுமே. அன்பை இழந்த வெறுமை வாழ்க்கையே அவனைத் தற்கொலைக்குத் தள்ளிவிடுகின்றது. கோபாலின் மனநிலையை உணர முடிகின்றது. அனுதாபமும் வெறுப்பும் வழியும் வாழ்க்கைப்பகுதிகளை அன்பு நிரப்பியிருப்பின் கோபாலின் நோயை எதிர்க்கும் சக்தி மருந்தைத் தோற்கடித்திருக்கும் என சிந்திக்க வைக்கின்றது. அருமையான கதை சார். பாராட்டுகள்.. அன்புடன், க.ராஜம்ரஞ்சனி

கோபாலும் அவனைச்சுற்றிப் பின்னப்பட்டுள்ள வலைகளும்

கோ.புண்ணியவான் என் காரின் டெஷ்போர்ட் காபினெட்டின் பழைய குப்பைகளை அகற்றி சுத்தம் செய்துகொண்டிருந்த போதுதான் கோபாலின் நினைவு மீண்டும் வந்தது. இரண்டு அங்குல அகலமும் ஐந்து அங்குல நீளமும் கொண்டு, பின் செய்யப்பட்டு இணைக்கப்பட்ட வண்ண வண்ண தாளில் அவன் கைப்பட எழுதி என்னிடம் கொடுத்த பொன்மொழிகளைப் பார்த்தபோதுதான் கோபாலை நினவுகூரும் சந்தர்ப்பம் உண்டானது. அந்தத்தாட்கள் அவன் வேலைசெய்யும் இடத்தில் வெட்டி வீசப்பட்டதாக இருக்கவேண்டுமென்ற எண்ணம் அதனைப்பார்த்தபோதே தேவையில்லாமல் தோன்றி மறைந்தது. கோபாலைக் கடைசியாகச் சந்தித்து இரண்டாண்டுகளிருக்கும். அவனை அருதியாய் மறந்துவிட்டிருந்தேன். நினைவில் வைத்திருக்கும் அளவுக்கு அவன் பெரிய மனிதர் ஒன்றும் இல்லையென்றாலும் அவனைப்பற்றிச் பிறரிடம் சொல்வதற்குச் சுவாரஸ்சியமான சம்பவங்கள் நிறையவே இருந்தன. அவன் புத்தகங்களில் படித்த பொன்மொழிக¨ள் எழுதி அதற்கு விளக்கமும் எழுதியிருந்தான். முத்து முத்தான கையெழுத்தில் நீல மைகொண்டு எழுதி அதன் பொருளைச் சிவப்பு மையால் எழுதியிருந்தான். முதல் பார்வையில் திருக்குறள் எழுதப்பட்டிருக்கின்றன்னவோ என்றுதான் நினைக்கத்தோன்றும். எல்லாம் எனக்...

நடிகர் நடிகையரைப்பற்றிய என்சைக்லோபிடியா.. ந்தா பிடியா

கிருத்திக் ரோபொஷனுக்கு எப்போது பிறந்தநாள் என்று தெரியுமா உங்களுக்கு? அவருக்கு இப்போது என்ன வயதாகிறது? திருமணமாகிட்டதா? எத்தனைக் குழந்தைகள் என்ற விபரமாவது தெரியுமா இதெல்லாம் தெரியாதென்றால் பொது அறிவைப் புறக்கணித்த கிணற்றுத்தவளையாகிவிடுகிறீர்கள் நீங்கள். ரஜினிக்கு தன் மனைவியோடு பேசுகிறாரா? கமல் கௌதமியோடு குடும்பம் நடத்துகிறாரா? அல்லது ஒரே வீட்டில் சேர்ந்து நண்பர்களாக இருக்கிறார்கள் போன்ற முக்கியமான புதிர்களுக்கு விடை காணவேண்டுமா? ஸரேயாவின் இடுப்புச்சுற்றளவு தெரியவேண்டுமா? சாமிரா ரெட்டியின் ஸ்தனங்கள் என்ன சைஸ்? அடுத்த திரைப்படத்துக்கு விஜய் எந்த நாயகியைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்? ஏன் திரிஷாவை ஓரங்கட்டினார் போன்ற அதல பாதால வினாக்களுக்குப் பதில் வேண்டுமா? இதையெல்லாம் தெரியாமல் இருப்பது உங்களுக்கு வெட்கக்கேடான விஷயமாக படுகிறதா? கவலையே வேண்டாம்! இதற்கெல்லாம் விரல் நுணியில் விளக்கம் வைத்திருந்து தருவதற்கு நம் தனியார் வானொலி அறிவிப்பாளர்கள் தயாராக இருக்கிறார்கள். சதா நடிகை நடிகர்களின் திருநாமங்களை உச்சரிப்பதிலும், சினிமா பற்றிய சமீபத்திய சரித்திரத்தைத் தெரிந்துகொள்வதிலும் அவர்கள்...