Skip to main content

Posts

மைனா-மிகை உணர்ச்சிச் சித்திரம்

கோ.புண்ணியவான். நான் சினிமாப் படம் பார்ப்பது மிகக்குறைவு. சினிமா விமர்சனங்களைப் படித்தும் , பார்த்தவர்கள் கருத்து சொல்லும்போது கேட்டும் படங்களைத் தேர்ந்தெடுப்பேன். அப்படிக் கவனமாகத் தேர்வு செய்தும் , தியேட்டரில் அமர்ந்து பொறுமிக்கொண்டு பொழுதைக் கொன்ற தருணங்கள் இம்சையானவை (குடும்பத்தோடு போனதால் வெளியே தப்பித்து ஓட முடியவில்லை). தமிழ் சினிமாவை நான் வெறுக்க ஆரம்பித்தது எம் ஜி ஆரின் மிகை ஒப்பனையைப் பார்த்த பிறகு. தன் போலி பிம்பத்தை முன் வைத்து அரசியல் லாபத்துக்கு அவர் தன்னை முன்னெடுத்த போது என் எதிர்ப்புணர்வு துவங்கியது. அவர் ஒப்பனை முகத்தைச் சுரண்டிப் பார்த்தால் கால் அங்குல ஆழத்துக்காவது முகப்பூச்சை சுரண்டி எடுக்கலாம். அதிலும் தன்னுடைய தள்ளாத வயதில் பதின்ம வயது நடிகைகளுடன் ஜோடி போட்டது என்னைபோன்ற ரசிகர்கள் செய்த பெரும்பாவம். இன்றைக்கு மலேசியாவில் ஆளும் கட்சிக்கு ஆதரவாய்ச் செயல்பட்டு ‘சத்து மலேசிய’ சுலோகத்தைத் ‘தூக்கிப் பிடித்து’ நம் மக்களை ஏமாற்றும் அரசு சார்ந்த ஊடகத்தைப் போலவே தமிழ் நாட்டிலும் , நடிகர்களை வளர்த்து மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுத்தந்தது. அதன் கோள...

ஒரு பூங்காற்று திரும்புமா?

மலேசிய வாசுதேவனின் மரணச் செய்தி செவிப்பறைக்குள் தீப்பிழம்பாய் பாய்ந்ததிருந்தது. அதனை எழுதும்போது மனசும் வலிக்கிறது. நாம் நீண்ட நாள் பாதுகாத்து வைத்திருந்த , விலை மதிக்கமுடியாத பொருளொன்று கைத்தவறிப்போய் இனி கிடைக்கவே வாய்ப்பில்லை என்றாகிவிட்டது. அந்த நிதர்சனத்தை நினைக்கும்போது , ஒரு வெறுமை தன்னை நிலைகொள்ளச் செய்து கொள்கிறது. மலேசியா என்ற சொல்லை முதன் மொழியாக்கி தன் பெயரை வரும் மொழியாக்கி தன்னை ஒரு தேச பக்தனாக அடையாளத்தை நிறுவிய வாசு இன்றில்லை. ஒவ்வொரு முறையும் அவர் பாடல் ஒலிக்கும்போது வாசுதேவன் என்று வாய்த்தவறி கூட சொல்லியிருக்க மாட்டார்கள் ஒலிபரப்பாளர்கள். மாறாக மலேசிய வாசுதேவன் என்றே சொல்ல வைத்து தன் தேசத்தை முன்னிறுத்தியவர் வாசு. எண்ணிக்கையிலடங்காத அளவுக்கு மலேசியா என்ற சொல்லை திரும்பத் திரும்ப சொல்லவைத்தவர் வாசு. இனியும் ஊடகங்களைச் சொல்ல வைப்பார். மலேசியா என்ற சொல்லை உலக அளவுக்குப் பரப்பிய இன்னொரு நபரை நினைவுகூர முடியவில்லை. ஷாருக்கானுக்கு டத்தோ பட்டத்தை முன்மொழிந்த மலாக்கா முதல்வர் நம் தலைவர்களைவிட எவ்வளவோ மேல். மலேசிய என்ற சொல்லை விடவா டத்தோ உயரியது என்று எண்ணியிருப்பார்கள...

கோலகிட்டில் இடைநிலைப் பள்ளியில் படிவம் 3, 4, 5 மாணவர்களுக்கான சிறுகதைப் பட்டறை

இன்று 17.2.2011 வியாழக்கிழமை கோல கிட்டில் இடை நிலைப்பள்ளி மாணவர்களுக்கு ஒரு சிறுகதைப் பட்டறையை நடத்தி முடித்தேன் . மதிய 12.00 மணிக்குத் தொடங்கி 2.00 மணிவரை நடந்தது. அவர்கள் எனக்குக் கொடுத்த நேரம் போதுமானதாகவே இருந்தது. ஒரு சிறுகதைகான கூறுகளையும், கட்டமைப்பையும், செய்நேர்த்தியையும் சொல்ல நல்ல வாய்ப்பை ஏற்படுத்தித்தந்தார் - முனைப்போடு செயல்பட்ட ஆசிரியை திருமதி கமலா. தமிழ் மொழி பாடக்குழுத் தலைவர் குமாரி மலர்க்கொடி, குமாரி ராஜேஸ்வரி, திருமதி பாரதி, ஜஸ்பிர் கோர் ஆகியோர் இறுதிவரை மாணவர்களுடன் அமர்ந்திருந்தனர். நான்கைந்து  நாட்களுக்கு முன்பிருந்தே என்னைத்தொடர்பு கொண்டு மாணவர்களுக்குப் புரியும் வண்ணம் சிறுகதைக்  கலையைப்பற்றிச் சொல்லித்தரவேண்டும் என்று அறிவுறுத்தி வந்தார். புரியும்படி என்ற வார்த்தையின் பொருளை நான் உள்வாங்கிக்கொண்டேனா என்பதில் அவர் கவனம் மையமிட்டிருந்தது. அவர் காட்டிய அக்கறை என்னை ஊக்குவித்துக்கொண்டிருந்தது. ஏற்கனவே பட்டறையின் செய்பொருள் என்னிடம் இருந்தமையால்  இலகுவாக அதை என்னால் நடத்த முடிந்தது. கெடா மாநிலத்தில் தமிழ் மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் கொண்ட இடைநி...

கலகக்காரன்

கோ.புண்ணியவான் தனித்து அடையாளங்காணக் கூடியவராக இருந்தார் மாரிமுத்து. அவருக்குப் புனைப்பெயர் ஏதும் இல்லாதது வியப்பாகத்தான் இருந்தது. புனைப்பெயரிடுவதற்கான எல்லா தகுதியும் அவருக்கு இருக்கிறது. வெளிப்படையாக இல்லையென்றாலும் அன்னாரின் விசித்திர சுபாவத்துக்குள் புனைப்பெயருக்கான அடையாளத்தை உள்ளிருத்திக்கொண்டதாகவும் இருக்கலாம். “ தோ வந்துட்டான்யா” என்று உதட்டைப்பிதுக்கி ‘வரவேற்பதிலிருந்தே’ அவரைப்பற்றிய அங்கீகாரம் ஊரறிந்த ரகசியம். ஒரு நாற்பது வருடத்துக்கு மேலாகியும் இன்னும் மறையாத பாத்திரமாக , எனக்குத் தெரியாமலேயே எனக்குள்ளிருந்து தன் பாத்திரத்தைத் தானே மெருகேற்றி வார்த்துக்கொண்டிருப்பதன் ரகசியம்தான் எனக்குப்புரியவில்லை. இப்படிப்பட்ட மனிதரை மனதிலிருந்து எப்படி வெளியேற்றுவது ? என் போன்ற படைப்பாளிகளுக்கு வடிகால் உண்டு. படைப்பு வடிகால் இல்லாதவர்கதான் பாவம். ஆனாலும், எழுதித் தொலைத்துவிட்டால் நாற்பது வருடகால குடியிருப்பை வாபஸ் வாங்கிக்கொண்டு முழுமையாக வெளியேறிவிடுவாரா என்று உறுதியாய் சொல்லிவிடவும் முடியவில்லை. ‘அழுதுத்தீர்க்கத்தான் என் கதையைச் சொன்னேன், இப்ப மனசு லேசாயிடுச்சு ’ என்று சொன...

சேலை கட்டிய மாதர்

கணினிக் காதலர் மலாக்கா முத்துக்கிருஷ்னன் தன்னுடைய வலைப்பூவில் http://ksmuthukrishnan.blogspot.com/ சில பழமொழிகளுக்கு அறிவுப்பூர்வமாக விளக்கம் அளித்திருகிறார். மூடநம்பிக்கையை விடாமல் பிடித்துக்கொண்டிருக்கும் நமக்கு இந்த விளக்கங்கங்கள் ‘ஆமாம் சரிதான்’ என்று ஆமோதிக்கச்செய்யும். அவருடைய விளக்கங்கள் பழமொழிகளை உள்வாங்கிக்கொள்ள உதவியாக இருக்கிறது. எப்போதுமே நமக்கு இருக்கும் சொற்ப அறிவைக்கொண்டு நம்மிடம் உலவும் தவறான கருத்தாக்கங்களுக்கு அறிவுப்பூர்வ முறையில் ஆழமாகச் சிந்தித்தால் அதற்கான விளக்கம் கிடைத்துவிடும். நாம் மூட நம்பிக்கைகளை நம் பாக்கெட்டுக்குள் பத்திரமாக பாதுகாப்புடன் வைத்தவாறே இருந்தால் நமக்குள் வெளிச்சம் வர அஞ்சும். நம்மைப் பிரித்து ஆள்பவர்களுக்கு எளிமையாகிவிடும். இப்போதுள்ள பாரிசான் அரசு செய்வதைப்போல! சேலை கட்டிய பெண்ணை நம்பவேண்டாம் என்ற பழமொழிக்கு ‘கள ஆய்வு’ செய்து விளக்கம் அளித்திருக்கிறார் நண்பர் முத்துக்கிருஷ்ணன். எப்போதோ ஒருமுறை ஒரு பெண் சேலை கட்டிக்கோண்டு பூ வைத்து போட்டிட்டு பவ்யமாக காட்சி அளித்து சோரம் போயிருக்கவேண்டும். அவளை நம்பி எமாந்தவன் இந்தப் பழமொழியை அவன் ...

தூவானம் , பா.அ.சிவம்

மௌனம் சிற்றிதழில் வெளியான என் பேட்டி தொடர்பான... கோ.புண்ணியவான் : சிறு குறிப்பு ‘ மெளனம் ’ , கவிதை பேசும் இதழ் என்பதை மீண்டுமாய் நிரூபித்துள்ளது. கவிதைக்கும் கவிஞனுக்கும் என்ன செய்ய வேண்டுமோ அதை மெளனம் நிறைவாகவே செய்துகொண்டு வருகிறது. ஒவ்வொரு கவிஞனுக்குள்ளும் கவிதையும் கவிதை இதழும் எப்படியெப்படியெல்லாமோ வரவேண்டுமோ, அப்படியே மெளனம் இதழ் வெளிவருகிறது. மெளனம் இதழின் மூலம் நல்ல கவிதைகள் முன்னிறுத்தப்படுவதையும் அதைப் பற்றி விவாதிப்பதையும் தரமான இரசிகர்கள் வரவேற்கிறார்கள். அந்த வகையில், கடந்த மெளனம் இதழ், எழுத்தாளர் கோ.புண்ணியவானின் சிறப்பிதழாக வெளிவந்ததில் மிக்க மகிழ்ச்சி. இதுபோன்று இதர கவிஞர்களின் சிறப்பிதழ்களும் தொடர்ந்து வர வேண்டும். அதனை மெளனம் செய்யும் என்றே நான் எண்ணுகிறேன். இதுபோன்ற நகர்த்தல்கள் மிகவும் அவசியம். இல்லையேல், நாம் காலம் காலமாகத் தமிழகக் கவிஞர்களின் நேர்காணல்களையும் அனுபவங்களையும் மட்டுமே வாசித்து, மனம் நெகிழ்ந்து, பாராட்டி மலேசியத் தமிழ்க் கவிதை உலகோடு ஒப்பிட்டுத் தூற்றிக் கொண்டிருப்போம். கோ.புண்ணியவானோடு இது நின்று விடக்கூடாது. இங்குப் பலர் இருக்கின்றனர். அவர்...

நாற்காலியின் எண்ணற்ற கால்கள்

கோ.புண்ணியவான்     நகராத நாற்காலி    நகர்த்திகொண்டே இருக்கிறது    பிட்டங்களை   பிட்டங்களை   நீண்ட நாளைக்கு   இருத்துவதில் உடன்பாடற்று   பல சமயங்களில்   அமளி செய்கிறது   சில நேரம்   சிலுவைக்கு அனுப்பிவிடுகிறது   நாற்காலி உயர்திணையாகி  அமர்ந்தவனை  அக்றிணையாக்கிவிடுகிறது  அடிக்கடி ஆளைமாற்றும் ஆசை நாயகி விபச்சாரி  என்ன விலைக்கும் தன்னை விற்கும் விலைமதிப்பற்ற விலைமாது  நான்கு கால்கள் ஏன்? இரண்டு கால்களைச் சமாளிக்க வேண்டுமே !  ஒருகால்..... அவருக்கா? அல்லது இவருக்கா? அவரோ இவரோ தோற்றவன் ஒரு காலை பிடுங்கிக்கொள்ள வென்றவன் மூன்று கால்களோடுதான் அமர்கிறான் !  இனம் இனத்தோடுதானே சேரும் அதனால்தான் இவனும் மரமாகிறான். ‘ஒரு இடைவேளைக்குப்பிறகு  மீண்டும் சந்திப்போம்’  நாற்காலியிருந்துதான்  தொடங்கியதோ!  காலி செய்வதற்குத்தானே நாற்...காலி ! Ko.punniavan...