Skip to main content

Posts

பதின்மத்தில்

                                            Dr.puspha -president of EWRF SUNGAI PETANI    கடந்த 17ம் தேதி வெள்ளிக்கிழமை காலை ஏழு மணிக்கே என் உடல வறுத்தி தூக்கத்தைக் கலைத்துக்கொள்ள வேண்டியதாயிற்று. பணி ஓய்வு பெற்றதிலிருந்து தாமதமாக எழுவது பழக்கமாகிப்போக நிர்ப்பந்தங்களின் நெருக்குதலில் வழக்கத்துக்கு மாறாக அதிகாலை துயிலெழல் நிகழ்ந்துவிட்டிருந்தது. எனக்கு மணி பின்னிரவு மூன்றிலிருந்துதான் தூக்கமே பிடிக்க ஆரம்பிக்கும். வாசித்துவிட்டு இணைய உலகில் அலைந்து திரிந்துவிட்டுப் போய்ப்படுக்கும்போது மணி இரண்டரையாகிவிடுகிறது. என்ன செய்வது உடலின் தேவை உடலே பூர்த்திசெய்துகொள்கிறது.. காலை 7.00 மணிக்கு எழுந்து 7.45க்கெல்லாம் பெர்பாடானான் தமிழ்ப்பள்ளியை அடைந்தேன். டாக்டர் புஷ்பா என்னை காலை வணக்கத்தோடு கைகுலுக்கி வரவேற்றார். என்னை அவரும் அவரை நானும் முதல் முதலாகச் சந்திக்கிற அந்தக்கா...

பனிப்பொழிவில் 10 நாட்கள்

சிம்லா மலை உச்சி குப்ரி மஹாசு மலை உச்சி இது . மேலே பஞ்சாப் போகும் பாதை நெடிகிலும் உள்ள் விக்ஸ் மரங்கள். ஆக மேலே குப்ரியின் சிவன் கோயில்.குடும்ப சகிதமாய் காட்சி தருகிறார்.  சிம்லா மலை உச்சி குப்ரியில், பின்னால் தெரிவது இமய மலைத்தொடர் 4.      ஓரிடத்தில் இறங்கி கொறிப்பதற்கு கடலைப் வாஙகப்போனேன். கடலையோடு பொறி, தக்காலித்துண்டு, பெப்பர் மிளகாய்த்துண்டு, பருப்பு கலந்து மிளகுத்தூளையும் மிளகாய்த்தூளையும் கலந்து கொடுத்தார்கள். சாப்பிட்டுப்பார்த்தேன். அப்படியொன்றும் அலாதி சுவையில்லை. சுங்கைபட்டாணி துளசி ராமன் மிக்சருக்கு ஈடாகாது. குளிருக்குப் பொருத்தமான உணவாகிறது அங்குள்ள மக்களுக்கு. நிறைய பேர் நின்றுகொண்டு அங்கேயே சுவைத்துக்கொண்டிருந்தனர்.        உறை பனி காலம் தொடங்கப் போவதை ஒரிரு தடயங்களைக் காண முடிந்தது. ஓரிடத்தில் கொட்டியிருந்த  ஒரு பிடி ஐஸ் துகல்களைக் மருமகன் கொண்டு வந்தார். இன்னும் ஓரிரு தினங்களில் உறை பனியைக் காணமுடியும் போலும். உறை பனியைக்கான நாம் மன்னாடி போகலாமென்றார் தோமஸ்.      ...

பனிப்பொழிவில் 10 நாட்கள்

சிம்லா விடுதியில், சிமலா மலை உச்சியில் 3.    எங்களுக்கு மணி 11க்குதான் விடிந்தது.      லோபியில் கிடந்த ஆங்கிலப் பத்திரிகையில் சிம்லாவில் குளிர் ஐந்து செல்சியஸ் என்று போட்டிருந்தது. இத்தவனையில் இது குறைந்தபட்ச குளிர் என்று எழ்தியிருந்தது. இன்னும் சில தினங்களில் குளிர் மைனஸ் செல்சியஸைத்தொடும் என்றும் கணித்திருந்தது. தடித்த குளிராடை அணிந்தால் மட்டுமே குளிரைச் சாமளிக்க முடியும். எங்களை சிம்லா குளிர் ஒன்றும் செய்து விட முடியாது. நாங்கள் இன்று சாயங்காலம் சிம்லாவை விட்டு இறங்கி விடுவோமே!      அன்று காலை பசியாறிக்கொண்டிருக்கும்போது இருவர் உள்ளே நுழைந்தனர். பார்ப்பதற்குத் தமிழர் போலவே இருந்தனர். வடநாட்டுக்காரர்களாக இருக்குமோ என்று பேசத் தயங்கினேன். பின்னர் அவர்கள் உரையாடியதைக் கேட்டதும்தான் தெரிந்தது அது மலேசியத் தமிழ் என்று. மலேசியத் தமிழ் என்று எப்படிக்கண்டுபிடிப்பது? பேச்சின் ஊடே மலாய் வார்த்தை புகுந்துவிடும். உச்சரிப்பு அழுத்தமாய் இருக்காது. தமிழ் நாட்டில் காணப்படும் வட்டார வழக்கு இருக்காது. ஒரே மாதிரித் தமிழ் பேசுகிறோம். thr...

2.பனிப்பொழிவில் 10 நாட்கள்

சிம்லாவுக்குப் போகும் வழியிலும் சிம்லா விடுதியிலும், சிம்லா   மலையுச்சியிலும் 2.  மருமகன் முன்சீட்டில் இடம்பிடித்து அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தார். இந்த சாலையில் அவருக்கு தூக்கம் எப்படித்தான் வருகிறது என்று தெரியவில்லை. கொடுத்து வைத்த மனிதன். சாய்ந்தவுடன் தூக்கம் பிடித்துவிடுகிறது. என்னைச் சொல்லுங்கள் தூக்கத்து முன்னால் பயணத் துக்கம் முந்திக்கொள்கிறது. மருமகன் தூங்கட்டும் எழுந்ததும் காரை ஓட்டசொல்லலாம் என்று முடிவெடுத்திருந்தேன்.    தோமஸ் இறங்கி தேநீர் அருந்தச் சென்றார். சாலை ஒரக் கடை. கடை நிறைய பயணிகள் இருந்தனர். சூடான தேனீர், நான், சப்பாத்தி எனப் பலவகைப் பலகாரங்கள் இருந்தன. எனக்கு எதையும் சாப்பிடத் தோணவில்லை.    அதற்குள் மருமகன் தூக்கம் கலைந்து வெளியே வந்தார். தேநீர் சாப்பிடலாமென்றார். “நீங்கள் தேநீர் குடிச்சிட்டு வந்து கார ஒட்டுங்க. தோமஸால முடியாது. பயமா இருக்கு என்றேன்”     “ஓட்டலாமே அதுக்கென்ன? தோமஸ் ஒத்துக்கணுமே!” என்றார்.     தோமஸ் வந்ததும் கேட்டேன்.     “என் லைஸன்ஸ பிடிங்கிடுவாணுங்க,” என்றார்...

பனிப்பொழிவில் 10 நாட்கள்

                  விமானத்திலிருந்து டில்லி, தாஜ் மஹால், மனைவி, மகள், மருமகன், நான்                               கோ.புண்ணியவான்                1.    டிசம்பர் 17ம் தேதி டில்லியில் போய் இறங்கியபோது குளிர் எங்களை வரவேற்றது. தமிழ் பேய்ப்படங்களில் உருண்டு திப்பித்திப்பியாய் வரும் மேகக்கூட்டங்கள் போல பனி மூட்டம் சுருண்டு எங்களைக்கடந்த வண்ணமிருந்தது. முன் எச்சரிக்கையாகக் குளிர் ஆடையைப் போர்த்தியிருந்ததால் குளிர் என்னை நெருங்கத் துணியவில்லை. விமானத்தளத்தில் வரவேற்பு வாசலில் புது டில்லியின் பிரசித்தி பெற்ற பனிக்கர் டிரவல்ஸை சேர்ந்த கார் ஓட்டுனர் தோமஸ் நான்கே பேர் கொண்ட எங்கள் குழுத் தலைவர் பெயர் பலகையை  ஏந்திய வண்ணம் எங்களை வரவேற்றபோது குளிரின் உக்கிரம் தெரியவில்லை. விமான நிலையத்தில் ஹ...

நினைவெழுத்துகள்

இக்கட்டுரை மலேசிய நவீன இலக்கியத்தை முன்னெடுத்துச்சென்ற எம்.ஏ. இளஞ்செல்வனுடனான என் பகிர்வுகளாகும் க.இளமணி, கோ.புண்ணியவான்,அப்பாவிச் சோழன்,சை.பீர்,இளஞ்செல்வன் நினைவெழுத்துகள் 1.      என்னுடைய முதல் சிறுகதைத்தொகுப்பு வெளியாகிறது. நிஜம் என்று அதற்குத்தலைப்பிட்டதும் , தனித்தமிழில் ஆர்வலர்களிடமிருந்து கண்டனக்கடிதங்கள் வந்தன. உண்மை என்று தலைப்பிட வேண்டியதுதானே என்று நேரடியாகவும் முறையிட்டார்கள். இதைப்பற்றி  வேறொரு தருணத்தில் கதைக்கலாம். நிஜம் வெளியீடு கூலிம் தியான ஆஸ்ரமத்தில் சுவாமி பிரம்மாநந்த சரஸ்வதி தலைமையில் நடந்தேறியது. எம். ஏ இளஞ்செல்வன் நூலாய்வு செய்தார்.  நிகழ்ச்சிக்கு நான் அழைக்காமலிருந்தாலும் சை. பீர்முகம்மதுவும், அப்பாவிச்சோழனும் , இன்னொரு நண்பருடன் நட்பின் காரணமாக கோலாலம்பூரிலிருந்து வந்திருந்தனர் . பாலு மணிமாறன்தான் அப்பாவிச்சோழனாக மலேசியாவில் இலக்கியமுகத்தில் வாழ்ந்துகொண்டிருந்தவர். நூலாய்வு செய்த இளஞ்செல்வன் , நான் எழுதிய பதினாறு கதைகளில் நான்குதான் தேறும் என்று சபையில் கூறினார். அதில் ஒரு கதை ‘குப்புச்சியும் கோழிகளும்’ உலகத்தரத்தில் ...

America

இந்தப் பாடல் யு டியூபிலிருந்து எடுத்தது. அங்கதத்தில் அமெரிக்காவை விலாசு விலாசென்று விலாசுகிறது. சுராங்கனி மெட்டில் அமைந்த அமர்க்கலமான ஆங்கிலோ இந்தியா மொழிப்பாடல்.அமெரிக்கா யு டியுபுக்கு நன்றி.