Skip to main content

Posts

11. பனிப்பொழிவில் 10 நாட்கள்

ஆக்ராவிலிருந்து ஜெய்ப்பூருக்கு போகும் நெடுஞ்சாலையில் ஓர் உணவுக்கடை, சாப்பாட்டுக்கு முன் உண்ணும் டிசெர்ட் வகை, ஹாட்டலில்,ஜெய்ப்பூர் சாலை.  ஜெய்ப்பூர் அரண்மனை, ஆக்ரா  செங்கோட்டை, ஜெய்ப்பூர் கோட்டை   கோட்டைகளும் ராஜ வம்சமும்    ஜெய்ப்பூரிலிருந்து பத்து கிலோ மீட்டர் தூரத்தில் குஜார் சாதிப்பிரிவினர் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதாக செய்தி கிடைத்தது. தங்கள் இனத்துக்கு அரசாங்கம் ஒதுக்கிய பொருளாதார வேலை வாய்ப்பு விகிதம் மிகக்குறைவு என்று அது கூட்டப்பட வேண்டுமென்ற நோக்கத்தொடு நடக்கும் போராட்டம் தான் அது. இந்தியாவில் கணக்கற்ற சாதி பிரிவினைகள் உண்டு. ஒரு குறிட்ட சாதிக்குள்ளே நூற்றுக்கணக்கான உட்பிரிவுகள் வேறு. சில இடங்கள் குறிப்பிட்ட உட்பிரிவினருக்குள்ளேதான் மணம் புரிந்து கொள்கிறார்கள். உறவு முறை கொண்டாடுகிறார்கள். அவர்கள் குலதெய்வம் , சிறுதெய்வம் கூட வேறுபடும். இந்து சமயத்தில் மக்கள் புரிதலுக்கேற்ப பல்லாயிரம் சித்தாங்கள் உருவாகின. அவர்கள் வாழ்வு  முறைக்கேற்ப, கலாச்சாரத்திற்கேற்ப, கடவுள்கள, சிறுதெய்னங்கள், குலதெய்வங்கள், கோயில்கள், பல்லாயிரம் ஆண்டுகளாக கூடிய...

10.பனிப்பொழிவில் 10 நாட்கள்

கைகளால் செதுக்கப்பட்ட மார்பல் ஓவியம். தாஜ்மஹாலில் பதிக்கப்பட்ட எல்லா கற்களும் மனிதக் கைகளாலேயே செதுக்கபட்டது. (விடியோ கிளிப்பை டிலீட் செய்ய முடியல)   மிகப் பிரமாண்டமான செங்கோட்டையை விட்டு தாஜ் மஹாலுக்குப் புறப்பட்டோம்.    நாங்கள் போன நேரம் யாரோ வெளிநாட்டு அமைச்சர் தாஜ் மஹாலைக் காண வந்திருப்பதாகச் செய்தி வந்தது. பயணிகள் வெளியே காத்திருந்தனர். மூன்று மணி நேரத்துக்குப் பிறகுதான் பார்க்க முடியும் என்ற தகவல் கிடைத்தது. அது தெரிந்தும் எங்களை தாஜ் மஹாலுக்கு அழைத்துச்சென்ற ஒரு டேக்சி ஓட்டுனர் பணத்தை வாங்கிக்கொண்டு தெரியாததுபோல இருந்துவிட்டார். தாஜ் மஹால் வளாகத்துக்குள் இந்த டேக்சிகள் பயன்படுத்தப் படுகின்றன.  2002ல் வந்த போது ஒட்டக வண்டியில்தான் போனோம். இந்த முறை ஒரு சில ஒட்டகங்களே இருந்தன. பாரம்பரிய முறையில் போக நினைப்பவர்கள் ஒட்டக வண்டியிலும் , குதிரை வண்டியிலும் ஏறிப் போகலாம்.    முன்று மணி நேரம் காத்திருக்க முடியாததால் மீண்டும் பட்டணத்துக்குப் போய் மதிய உணவுக் கடையை தேடிக்கொண்டிருந்தோம். வெளி நாட்டுப் பிரமுகர் வருகையால் அக்ரா ஸ்தம்பித்...

9.பனிப்பொழிவில் 10 நாட்கள்

செங்க்கோட்டை வாசல்                                     மேலே  தாஜ் மஹால் வாசல் / செங்கோட்டை     அக்ராவில் அன்று இரவு தங்கிவிட்டு காலையில் காதல் சின்னத்தைப் பார்க்கத்திட்டம்.     அக்ரா ஒரு புராதன ஊர். பழமை மேய்ந்து கிடக்கிறது. தூசு மண்டிக்கிடக்கிறது. மக்கள் பிழைப்பதற்காத நடத்தும் போராட்டம் முதல் பார்வையிலேயே தெரிகிறது. சாலைகளில் நேரடி விற்பனையாளர்கள், வேற்று நாட்டவரை அடையாளங்கண்டு கைவினைப்பொருட்களை தலையில் கட்டப் போராடுகிறார்கள். அறுபது விகிதம் மக்கள் சுற்றுப்பயணிகளை நம்பியே வாழ்கிறார்கள். செங்கோட்டையும் தாஜ் மஹாலும்தான் ‘வாழ்வாதாரம்’.      அக்ரா தொடக்கத்தில் இந்து ராஜ்யமாகத்தான் இருந்திருக்கிறது. அது இந்து ராஜ்யத்தின் கீழ் இயங்கும் போது ஆக்ரபன் என்ற பெயரைப் பெற்றிருந்தது. மகாபார தத்தில் அக்ரபான் என்றே குறிப்பிடப்பட்டிருப்பது அக்ராதான் என்று நிறுவுகிறார்க...

8. பனிப்பொழிவில் 10 நாட்கள்

 சாலையோர டபா (உணவுக்கடை)  செங்கோட்டை மார்பல் வேலைபாடுகள் கைகளால் செதுக்கப்பட்டவை  தாஜ்மஹால் தொடர் 8 அதிகாரத்துவமும் அடிமைத்தனமும்  டில்லியைக் கடக்கையில்  முக்கிய சாலையோரத்தில் தலைவர்கள் சிலைகள் நிறுவப்பட்டிருந்ததைக் காணமுடிந்தது. அந்தச் சிலைகள் தரும் செய்தி படிமமாகி மனதை வருத்தியது. ஆமாம் , விடுதலைப் போராட்டத்துக்கான வியர்வையும் ரத்தமும் சிந்திய காட்சி சிலைகளாக எழுந்து நின்றுகொண்டிருந்தது.    பேசிக்கொண்டே போகையில் வெள்ளிக்கிழமை அக்ராவில் இருக்கும் காதல் சின்னமான பளிங்கு மாளிகை , தாஜ்மஹால் வெள்ளிக்கிழமை அடைப்பு என்ற செய்திதான் அது. நாங்கள் வெள்ளிக்கிழமை ஜெய்ப்பூரில் இருப்போம். அப்படியானால் தாஜ் மஹாலைக் காண்பது கனவாகவே கலைந்துவிடும் என்ற பயம் மருமகனுக்கு. நான் 2002ல் தாஜ்மஹாலைப் பார்த்துவிட்டேன். எனவே எனக்கு அது பெரிய விஷயமாகப் படவில்லை.   நான் தாஜ் மஹாலைப் பார்த்தே ஆகவெண்டும். அதற்காகத்தான் முக்கியமாக வந்தேன். நீங்கள் உடனே திசையை மாற்றுங்கள் என்றார். டில்லியைக் கடந்து ஜெய்ப்பூருக்குச் செல்லும் மெய்ன் சாலைக்கு நுழைந்தாயிற்று. அக...

7, பனிப்பொழிவில் 10 நாட்கள்

சண்டிகார் கைவினைக் காட்சியகத்தில், பொற்கோயில் புனித நீராடல், ஒரு சுவையான உணவு வகை.      தூசு படிந்த நகரத்தில் தூய்மையான புனிதத் தலம்      அது கார் விற்கப்படும் சந்தையாம். கார் விற்பவர்கள் வாங்குபவர்கள் கூடும் இடம்- ஞாயிற்றுக்கிழமைகளில் இது நடக்குமாம். அவர்களுக்கிடையே பேரம் நடக்கிறது. கார் விற்பனையாளரிடமே நேரடியாகப் பேரம் பேசி காரின் நிலை பரிசோதித்து வாங்கிக்கொள்ளலாம். செக்கண் ஹாண்ட் கார் விற்பனையாளருக்கோ, இடைத்தரகருக்கோ  அங்கே இடமில்லை. பத்தாயிரம் வெள்ளிக்கு அடித்து வாங்கிய  செக்கண் ஹாண்ட் காரை விற்பனையாளர்கள் இருபதாயிரம் வெள்ளிக்கு விற்று கார் சொந்தக்காரரின் வயிற்றில் அடிக்கும் பழக்கம் இங்கு போல அங்கு இல்லை. நேரடி விற்பனை. கார் சொந்தக்காரர் பெரிய நஷ்டத்தில் விற்கும் நிலை இங்கே ஏற்படாது. கார் சந்தை நம் நாட்டிலும் இருந்தால் என்ன என்ற எண்ணம் தோன்றியது. செக்கண் ஹாண்ட் கார் விற்பனையாளர்கள் சும்மா விடமாட்டார்கள்!          சுத்தம் கிலோவுக்கு என்ன விலை என்று கேட்கும்  டில்லியைப் போலவோ ச...