Skip to main content

Posts

                              அக்டோபஸ் கவிதைகளும் அடர்ந்த கவித்துவமும்                                 உள்ளொளி நிறைந்த உலகம்               நாங்கள் வாடகை வீட்டில் குடியிருந்த நாட்கள்  எங்களுக்கென ஒரு சொந்த வீடு வாங்கிவிடவேண்டுமென்ற உந்துதலை உண்டாக்கிக்கொண்டிருந்தது. வாடகை வீடுகள் நம்மை ஏற்றுக்கொள்வதில்லை. இது யாருக்கோ கட்டிய வீடு இதில் உனக்கு இடமில்லை என்று குடியிருப்பனை எச்சரித்தபடி இருக்கும். என்னதான் மாதாமாதம் வாடகைப்பணத்தைக் கட்டிமுடித்தாலும், வீட்டு உரிமையாளன் நமக்குத் எந்த விதத் தொந்தரவும் தராவிட்டாலும், நம்முடைய இருப்பை அது தற்காலிகமாகவேதான் கருதுகிறது. ‘வீடு உன்னுடையதல்ல’ என்ற உரிமைப்போராட்டத்தை வீடு மௌனமாகவே அரங்கேற்...

தாமான் பெர்வீரா இடைநிலைப்பள்ளியில் சிறுகதைப் பயிலரங்கு

 துணை முதல்வர் திரு கோவிந்தசாமி  ஆசிரியர் முனிச்செல்வியுடன் நான் என் எழுத்துச் சகோதரி முனிச்செல்வி  ஏற்கனவே தான் போதித்த பள்ளிகளில் சிறுகதைப் பயிலரங்கு நடத்த என்னை அழைத்திருக்கிறார். அது ஒரு அலாதியான அனுபவம். தானும் ஒரு எழுத்தாளர் என்பதால் அவரிடம் படைப்பிலக்கியம் பற்றிய வற்றாத பற்று  ஊறிக்கொண்டே இருக்கிறது . இம்முறையும் மாணவர் பயனுற என்னை தற்போது அவர் பணியாற்றும் தாமான் பெர்வீரா இடைநிலைப் பள்ளியில் ஒரு பயிலரங்கை நடத்தச் சொல்லி கேட்டுக்கொண்டதிலிருந்து இலக்கியம் சார்ந்த அவரின் ஈர்ப்பு நன்கு புலனாகிறது.( ஏன் அவரையே அழைக்கிறீர்கள் ,எனக்கு ஒரு  வாய்ப்பு தரலாமல்லவா என்று யாராவது உங்களைக் கேட்டும் வரலாம் செல்வி) ஒரு மூன்றாண்டு காலம் தன்னுடைய முதுகலைப் படிப்பை வெற்றிகரமாய் முடித்துவிட்டு இந்தப் புதிய பள்ளிக்கு மாற்றலாகி வந்திருக்கிறார் அவர்.எங்கே போனாலும் மாணவர்களோடு அன்பான தொடர்பு வைத்திருப்பவர் இவர். அவர்களுக்கும் படைப்பிலக்கிய ஆற்றல் வளரவேண்டும் என்ற எண்ணம் உள்ளவர். கடந்த வெள்ளிக்கிழமை 17.2.2012 ல் சரியாக 12.50 க்குப் பள்ளியை அடைந்ததும் என்ன...

இரண்டாவது ஆன்மா

நான் முன்பிருந்த வீட்டுக்குப் போனபோதுதான் எனக்கு இரண்டு ஆன்மாக்கள் இருப்பதாக உணர்ந்தேன் வீட்டின் தூண் ஒன்றைக் கெட்டியாகப் பிடித்தவாறு இருந்தது அது வீட்டைக் காலி செய்துவிட்டு விலகியபோது அது அங்கேயே தங்கிவிட்டிருக்கக்கூடும் கடைசியாக ஒருமுறை திரும்பிப் பார்க்கவைத்ததும் அதுவாக ஏன் இருக்கமுடியாது வீட்டை விட்டுப் பிரியும் தருணத்தில் ஒரே பிஸ்கட்டை நாயொன்று கவ்வ்¢ச்சென்ற பசித்த குழந்தையின் சோகம் கனத்திருந்தது என் குரல்களின் அசரீரியை சேகரித்து வைத்து ஒலித்துக்காட்டியது என் பாதத்தடங்கள் படியாத இடமொன்றுண்டா என்று கேலி செய்தது என் படுக்கையறையிலிருந்து வரும் குரட்டையொலி சன்னமாகக் கசிந்தது கொய்யா மரத்தை அன்னாந்தவாறு வீட்டை மீண்டும் வாங்கிவிடலாமே என்று என் மகன் கேட்டான்  இரண்டாவது ஆன்மாவிடம் எப்படி விலை பேசுவது?

ஆயாக்கொட்டா(சிறுகதை)

                                      (மலேசியத் தோட்டப்புற சூழல் சிறுகதை)        ஆயக்கொட்டாயில நஞ்சானும் குஞ்சானுமா கெடக்கிற புள்ளங்கில கருக்கல்லியே வுட்டுட்டு போற தோட்டத்துச் சனங்க வேல வுட்டு வந்த , கடசி ஆளு  புள்ளய தூக்கும்போது லயத்துக் காட்ல ‘மினுக்கிட்டான் பூச்சி கணக்கா, மினுக் மினுக்குன்னு மண்ணெண்ண வெளக்கு அமிஞ்சிரட்டுமா அமிஞ்சிரட்டுமான்னு கேக்குற மாறி எரியும். கித்தா மரம் வெட்டப் போறதுங்க மணி ஒன்னரைக்கெல்லாம் வந்திடுங்க -ஒத்த வெட்டுன்னா. வெயில் காயுறு நாள்ளயும் வெல்லென வந்துடுங்க. பாதி நேரத்துல மல பிடிச்சிருசின்னா சுருக்கா வந்திடுங்க. கித்தா மரம் வெட்றதிலியும் சிலது இருக்குங்க , சந்தடி இல்லாம் வேல முடிஞ்சி வூட்டுக்குப் போயி , சமச்சி, தொவச்சி , ஏறக்கட்டி வச்சிட்டு , குளிச்சி முழுவி மூஞ்சில திப்பி திப்பியா பகுடர பூசிக்கிட்டுத்தான் புள்ளய தூக்க வருங்க. அன்னிக்கி டபுல் வ...

வற்றாது ஒடும் நதி

ஆக்டோபஸ் கவிதைகளும் அடர்ந்த கவித்துவமும்   கனத்த இதயத்தோடுதான் நான் பணி ஓய்வு பெறும் நாளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.  இனி அத்துவான வெளியைப்பொல சலனமற்று விரிந்திருக்கும் வெறுமையான நாட்களை எப்படி எதிர்கொள்ளப்போகிறேன் என்ற இனம் புரியாத அச்சம் மனதுக்குள் கசியத்துவங்கியிருந்தது. ஆனால் ஓய்வு பெற்ற ஓரிரு நாட்களிலேயே அந்த அச்சம் உச்சி வெயிலின் நிழலென சுருங்கிவிட்டிருந்தது! எனக்கு வாசிக்கும் பழக்கமும் எழுதும் பழக்கமும் என்னோடு கவச குண்டலமாய் ஒட்டிக்கொண்டிருந்ததால் பணி ஓய்வு பெற்ற வெறுமையான நாட்களை எளிதில் கடந்து செல்ல  முடிந்திருந்தது. கலை சார்ந்து இயங்காதவர்களின் வாழ்க்கையின் வெறுமையான நாட்களை எளிதில் கடந்துவிடும் உபாயம் பெற்றிருப்பார்களா என்பதில் என் மனதில் தீராத சந்தேகம் வடிந்தபடி இருக்கிறது. என் நீண்ட கால ஆசிரியர் பணியை செம்மையாகச் செய்ததுண்டா என்ற வினா  மின்சார, தண்ணீர், தொலைபேசி கட்டண பில் போல  என்னை விடாமல் பின் தொடர்ந்தவண்ணம் உள்ளது. பள்ளியில் நான் போட்ட திட்டங்கள் பல நிறைவேறியும், சில வற்றில் தோல்வியும், முழுமூச்சாய் ஈடுபடாததால் சிலவற்றில் நிறைவின்மையும் ...

எல்லையற்ற பரிவு

  அக்டோபஸ் கவிதைகளும் அடர்ந்த கவித்துவமும்                              என் அம்மாவை ஐம்பத்தைந்து வயதில் வேலையை விட்டு நிறுத்தியிருந்தார்கள். அம்மா அப்படியொன்றும் அலுவலக வேலையில் நான்கு இலக்க சம்பளம் எடுத்தவரில்லை. தோட்டப் பாட்டாளியாக ‘மம்மட்டி’ வேலை செய்து வந்தார். அவர் வேலையிருந்து நீக்கப்பட்ட நாளில் அம்மாவின் முகத்தில் ஆழமான துயரம் படிந்திருந்தது. அந்த இக்கட்டான தருணத்தில் நாங்கள் நான்கு பேர் படித்துக்கொண்டிருந்தோம். பட்டணத்துக்குப் போக வர கட்டணச்செலவு ,  மாதந்தோறும் கட்டவேண்டிய பள்ளிக்கட்டணம், வீட்டுச்செலவு என ஒரு பசி தீரா அரக்கனைப்போல அம்மாவின் சம்பளத்தையே விழுங்கிக்கொண்டிருந்த வேளையில் வயது காரணமாக ‘நோட்டீஸ்’ கொடுக்கப்பட்டு வாழ்வாதாரம் கேள்விக்குரியதாகி இருந்தது. எப்படிச் சமாளிக்கப் போகிறோம் என்றா புதிரான வினாவே அம்மாவின் முகத்தில் கூடுதல் சோகத்தை பதித்திருந்தது. அம்மா நின்ற பல ஆண்டுகளுக்கு முன்னாலேயே அப்பா வேலையில்லாமல்  போயிருந்தார். ...

அன்னை என்ற தீபம் அணையாது எரிகிறது

அக்டோபஸ் கவிதைகளும் அடர்ந்த கவித்துவமும். அம்மா என்ற தலைப்பில் கவிதை கேட்டார்கள் ‘அம்மா’ என்றேன் உடனே, கேட்டது அம்மாவாக இருந்தால் இன்னும் சின்னதாய் சொல்வேன் ‘நீ’.....என்று                     ...தாஜ்       இந்தக்கவிதை ஆனந்தவிகடன் இதழில் 2002 ஆம் ஆண்டு நடத்திய கவிதைப்போட்டியில் எழுபத்தைந்து சிறந்த கவிதைகளில் ஒன்றாக பதிவாகியது. கடுகளவே இருக்கும் இந்தக் கவிதை மனதுக்குள் பூமழை பொழிவதை உணரமுடிகிறது.  வெப்பம் உரசியதும் நெகிழ்ந்துருகும் நெய்யைப்போல அம்மா என்ற சொல்லுக்குள் அன்பும் பாசமும் பிரவாகமாவதைத் தவிர்க்க முடிவதில்லை. வெறும் சொல்தானே என்று புறந்தள்ள முடிவதில்லை, அதற்குள் உறைந்திருக்கும் உணர்வும் உயிர்த்துடிப்புள்ளவை!. எல்லாச் சொற்களுக்கும் தாய்ச்சொல்லாக தன்னை நிறுவிக்கொள்கிறது அம்மா என்ற அற்புதச் சொல். உயிரெ¦ழுத்தும், மெய்யெழுத்தும் உயிர்மெய்யை உருவாக்குவதுபோல அம்மா என்ற ஒற்றைச் சொல்லுக்குள் உயிரும்    மெய்யும் இரண்டரக் கலந்து நிற்...