Skip to main content

Posts

சண்டைக்காரனிடமே சரணடைந்த ஹிண்ட்ராப்

                                                                                                      எதிர்க் கட்சித் தலைவர் அன்வர் இப்ராஹிம் இன்று ‘வரலாற்றுப் புகழ்மிக்க ஒரு ஒப்பந்தம்’ கையெழுத்திடப் பட்டிருக்கிறது. 2007 ஆண்டு லட்சகனக்கான இந்தியர்கள அணி திரட்டி, ஓரங்கட்டப்பட்ட தென்னிந்தியருக்காக நீதி கேட்டுப் வீதிப் போராட்டம் நடத்திய ஹிண்ட் ராப், ஆறு ஆண்டுகளாகப்  போராடிய பிறகு தன் கோரிக்கைகளை ஆளுங்கட்சியை ஏற்றுக்கொள்ள வைத்திருக்கிறது. எதிர்கட்சி நாளுக்கு நாள் வலுபெற்று ஆளுங்கட்சியை வீழ்த்தும்...

சொல்றத சொல்லிப்புடுறேன்

ஐநூறு கொடுத்தான்னு  அவனுக்கே ஓட்டுன்னா? ஆயுள் முழுக்க ஒதுக்கனானே  அதுக்கென்ன அர்த்தம்ன்னேன்? நம்மல ஓரங்கட்டி  ஒசத்திப்புட்டான் தஞ்சனத்த  சும்மா தூசுதட்டி போட்டாப்புல  மறந்துப்புட்டான் என் எனத்த  கோயிலுக்கு கொடுத்தான்னு  கையெடுத்து கும்பிடுறியே  சாமியெல்லாம் ஒடச்சப்ப்போ  கைபெசஞ்சி நின்னேல்லா  பள்ளிக்கு தந்தான்னு  பல்லிளிச்சு நிக்கிறியே  இப்பமட்டும் செய்றியேன்னு  எப்பியாவது கேட்டியா? கைக்கட்டி கைகட்டி  காலத்த ஓட்டாத  டைகட்டி மெடுக்கா  இருக்கத்தான் வேணுங்கிறேன்  கொடுத்த தெல்லாம் வாங்கிக்கோ  வேணான்னு தடுக்கல  கோடு போட்ட வாழ்க்கத்தான்  வாழனுந்தான் கேட்டுக்கோ  நம்ம புள்ள நாளைக்கு  நல்லாத்தான் இருக்கனும்னா  நாயக் கட்டி இழுத்தாந்து  நடு வூட்ல வைக்காத  கூழாங்கல்ல தங்கம்ன்னு  கும்பிட்டு ஏற்காத  வைரத்த சோரம்ன்னும்  வந்த வழி அனுப்பாத  எப்பியோ நடந்திடுச்சு  இப்போ அதுக்கென்னாங்கிற  அப்போ செஞ்சதெல்லாம்  இப்பியுமில்ல பாதிக்...

மலேசிய அரசியலில் ஒரு அதிரடி மாற்றம்

Mahathir                                                             Abthullaa Badawi                                                        Anwar Ibrahim ( அடுத்த பிரதமராகும் முகம்)                                        ...

தெய்வம் தாய்க்கு ஈடாகுமா?

இலக்கிய நண்பர்கள் ஆறேழு பேர் கூலிம் தியான ஆசிரமத்தில மாதமொருமுறை கூடி இலக்கியம் சார்ந்த உரையாடல்களை  நடத்தி வருகிறோம். இரவு 7.30 மணிக்கு உரையாட ஆரம்பித்தால் நள்ளிரவு நெருங்கும் வரை தொடரும். அது எங்கள் வாழ்நாளில் பதிவாகும் இனிமையான அனுபவப் பொழுதுகள். நன்கைந்து மணி நேரம் அப்படி என்னதான் பேசுகிறீர்கள் என்று நக்கலோடு பிற நண்பர்கள் கேட்கும்போது  இலக்கியத்திலிருந்து அந்நியமானவர்களின் கேட்கின்ற நியாமான கேள்வியென்றே எடுத்துக் கொள்வோம்.  இலக்கிய நூல்கள் பக்கம் வராதவர்களிடம் சொல்லி விளக்குவதில் பயனில்லை . எங்களை வழி மாறிப்போன ஆடுகள் என்று அவர்கள் கருதுகிறார்கள் பாவம். ஆனால் அவர்கள்தான் வழி தவறிப் போனவர்கள் என்று கருதவேண்டியுள்ளது. உரையாடல்கள் மூலமே படைப்பின் ஆழ அகலத்தை உழ முடியும் என அறிந்திருந்தோம். படைப்பாளருக்குக் கிட்டாத ஆழம் பலசமயங்களில் எங்களின் உரையாடல்கள் மூலம் தட்டுப்பட்டிருக்கிறது! எனவே இதுபோன்ற  எங்கள் சந்திப்புகள் ஆத்மார்த்தமானது ; காதலைப் போல. காதலிப்பவர்கள் தங்களை மறந்து வெகு நேரம் பேசிக்கொண்டிருப்பார்கள். ஏன் விடிய விடியக் கூட உரையாடிக் கொண்டிருப்பார்கள். அப்பட...

இனப்படுகொலையும் அரசை நம்பாத மாணவர்களும்

( முகநூலிலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்டது)   மாணவர்களே, எவரையும் நம்பாதீர்கள்! ம.செந்தமிழன் மாணவப் போராளிகளே, 2009, மார்ச் மாதம் நடந்திருக்க வேண்டிய போராட்டங்கள், இப்போது நடக்கின்றன. அந்தக் காலத்தில்தான், புலிகளின் படையை இந்தியச் சதி சுற்றி வளைக்கத் தொடங்கியிருந்தது. இந்தியக் கடற்படை, இலங்கைத் தீவைச் சுற்றி நின்று அரண் அமைத்து கடற்புலிகளைக் காவு வாங்கியது. கடல் வழியே தப்பிச் செல்ல முனைந்த பொதுமக்களுக்கும் கடல் வழியை மறுத்தது இந்தியக் கடற்படை. நிலப்பகுதிகளோ, சிங்களப் படையின் பெரும் எண்ணிக்கையினால் சுற்றி வளைத்து மூடப்பட்டது. வீரம் செறிந்த தாக்குதல்களைப் புலிகள் நடத்தியபோதும், வான்வழியே பறந்து கொத்துக் குண்டுகள் வீசி, புலிகளின் அனைத்து நிலைகளும் அழிக்கப்பட்டன. ஒருபுறம் கிளிநொச்சியிலிருந்து மாதக் கணக்கில் நடந்தே வந்து சேர்ந்த பொதுமக்கள், மறுபுறம் இந்தியா, சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளின் முற்றுகை. புலிகளின் அப்போதைய நிலையை உலகின் எந்த மனிதனாலும் கற்பனையிலும் காண இயலாது. உணவுப் பஞ்சம், தண்ணீர் பஞ்சம், மருந்துகள் இல்லை, கை கால்கள் முறிந்தவர்க...

மரணம் குறித்த முன் சமிக்ஞைகள்

                                                         கவிஞர் பா.அ.சிவம்             பா. அ. சிவம் எனக்கு அறிமுகமானது தொலைபேசி வழியே. குரலை வைத்து அவர் முகம் இன்னெதென்று அனுமானிக்க முடியாததாக இருந்தது. ஆனாலும் மனம் அவர்க்கொரு முகத்தை வரைந்தபடி இருந்தது. அவர் பெயரை வைத்து , குரலை வைத்து அந்த ஓவியம் உருவாகிக்கொண்டிருந்தது. நமக்குப் பிரியமானவரின் முகத்தைப் பார்க்கும் ஆவலில் இப்படியான சித்திரங்கள் நம் மனம் வரைந்துகொள்வது இயல்புதானே! “மலாயாப் பல்கலைக் கழக பேரவைச் சிறுகதைப் போட்டிக்கு நீங்கள் எழுதிய சிறுகதை  பரிசுக்குத் தேர்வு பெற்றிருக்கிறது, நீங்கள் நிகழ்ச்சியில் அவசியம் கலந்துகொள்ள வேண்டும்” என்று அழைத்துச் சொல்லியிருந்தார். அந்த ஆண்டு அவர் பேரவையின்...

வேட்பாளர்கள் வீ.ஆ.வேவும் சிக்ஸ் ஸ்டாரும்

                                (3.3.2013 ஞாயிறு குரலில் வெளியானது) உள்ள படியே அவர் பெயர் அதுவல்ல. பிறப்புப் பத்திரத்தில் செங்கல்ராயன் என்ற கல்வெட்டு போல பத்திரமாகவே  பதிவாகியிருக்கிறது. கடந்த தேர்தலில் வீசிய அரசியல் புயலில் ஆளுங்கட்சி, வயசான கிழவனின் பல் ஆட்டங்கண்டது போல தேர்தல் முடிவுகள் அதிர்ச்சி வைத்திய வாக்களிப்பில் கொஞ்சம்.. கொஞ்சமென்ன ? அடித்தலமே ஆடித்தான் போனது.    மனிதன் இறந்தும் சீக்கிரத்தில் அழியாத ஒரே உறுப்பு பல் தானாம். அதுவே ஆட்டங்காணும் போது அல்லக்கை அகந்தை  நிலைகுலையாதா என்ன?    ஒரு அரை நூற்றாண்டாக ஆட்சி பீடத்தைச் சக்கரவர்த்தியின்  அகந்தையோடு பரிபாலனம் செய்ததற்கு  அது நல்ல பாடமென்றே பரவலாகப் பேசப்பட்டது. அந்தத் தேர்தல்தான் தமிழர்கள் நிறைய பேர் களமிறக்கி கரை சேர்ந்திருந்தது. அந்த அலையில்தான் செங்கல் ராயன் தன் பேரை மாற்றி வீர ஆவேச வேங்கை என்ற மறு அவதாரம் எடுத்திருந்தார்....