Skip to main content

Posts

முத்தங்களால் நிறைந்த தேசம் - முத்தம் 15

முத்தம் 15 அன்பு வாசக நண்பர்களே, என்னுடைய நாவலான 'செலாஞ்சார் அம்பாட்' தேசிய நில நிதி கூட்டுறவு சங்க கலை இலக்கிய அறவாரியத்தின் 2012/13 ஆம் ஆண்டுக்கான சிறந்த புத்தகப் பரிசை ரி.ம.10000.00 வென்றதிலிருந்து அதன்  வேலை நிமித்தமாக இந்தத் தொடரை சில நாட்கள் எழுதமுடியாமல் போயிற்று. இருந்தாலும் இன்றிலிருந்து அதனைத் தொடர்கிறேன். இந்த நூலை கோலாலம்பூரில் வெளியிடும்படி என் வாசக நண்பர்கள் கேட்டுக்கொண்டபடியால் எதிர்வரும் 14.9.14 ஞாயிறன்று, மாலை 4.00க்கு ,கோலாலம்பூர் தே.நி.நிதி கூட்டுறவு சங்கக் கட்டடத்தில் , தான் ஶ்ரீ சோமா  அரங்கத்தில் நடைபெறவிருக்கிறது. இந்நிகழ்வுக்கு உங்களை அன்போடு அழைக்கிறேன். நூலின் விலை 15 ரிங்கிட் மட்டுமே. அந்தத் தொகையைக் கொடுத்து வாங்கினாலே நான் பெருமை அடைவேன். முத்தம் 15-  நீரின் சாரலில் வெனிஸ் நகரம் பின்னிரவு மணி 1.00க்கு வெய்ன்சா நகர ரயிவே ஸ்டேசனில் இறக்கிவிட்டது புல்லட் ரயில்.வெனிசைத்தான் வேய்ன்சா என்கிறார்கள். நீங்கள் வெனிஸ் என்று சொன்னால் உள்ளூர்க்காரர்களுக்குப் புரியாது. வெய்ண் என்றுதான் சொல்லவேண்டும். ஆனால் எப்படிச்சொன்னாலும் அது அழகு...

முத்தங்களால் நிறைந்த தேசம்- முத்தம் 14

  வெனிஸ் என்ற நீரூர் -முத்தம் 14 ப்ராண்சியாவில் காத்திருந்த தருணம் சாய்ந்த பைசா கோபுரத்தைச் சாய்ந்து சாய்ந்துதான் பதிவு செய்துகொண்டிருந்தோம். உலக அதிசயங்களைப் பார்க்கும் கூட்டம் குறையவே இல்லை. அதிலும் பைசா கோபுரம் மிக விநோதமான ஒன்று. சாய்ந்த எப்போதோ விழுந்திருக்க வேண்டிய ஒன்று. அதன் சாய்வை நிறுத்தி கட்டுமான தொழில்நுட்பத்தில் வரலாறு படைத்த விநோதம் நிகழ்ந்தது அங்கே.. அவ்வளவு சாய்ந்துதிருந்தும் வரலாற்று அடையாளத்தை  நிலை நிறுத்த வேண்டி எத்துனையோ சிரமத்துக்குப் பிறகு அதன் சாய்வை நிறுத்தி வைத்த மனித மூளையைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை. ஏ மானுடா, ஒரு பிரச்னை வந்ததும் துவண்டு  சாய்ந்துவிடாதே, சாய்ந்த இடத்திலிருந்தே உன் சாதனையைத் தொடங்கு என்ற குறியீடாக, படிமமாக, தொன்மமாக கல் கட்டடம் ஒன்று  உலக மாந்தருக்குப் பாடம் சொல்லிக்கொண்டிருக்கிறது பைசா கோபுரம். "இனி மேலும் சாய்வதாய் இல்லை, என்னைப்பார்," என்று நமபிக்கையின் உரத்த குரலாக ஒலித்துக் கொண்டே இருக்கிறது. பைசா கோபுரத்தைப் பார்த்துக்கொண்டிருக்கும்போதே மழை சட சடவென் இறங்கியது. குடை விற்பவர்கள் முகம் நம்பிக்கையோட...

முத்தங்களால் நிறைந்த தேசம்- முத்தம் 13

சாய்ந்த கோபுரத்தை நிமிர்த்திக் காட்டும் முயற்சிக்கு எதிர்ப்பு-முத்தம் 13.  மிகச்சரியாக கணிக்காமல் செய்யப்பட்ட பிழை ஒன்று, இன்று உலக அதிசயமாக உருவெடுத்துள்ளது. இத்தாலியிலுள்ள பைசா நகர் மக்கள், தங்களது யுத்த வெற்றி ஒன்றைக் கொண்டாட, நிர்மாணித்த கோபுரம் நேராக நிற்காமல் ஒரு பக்கமாக சாயத்தொடங்கியதால் இன்று எல்லோரது கவனத்தையும் ஈர்த்துக்கொண்டிருக்கிறது.         பிசா நகர் அல்லது பைசா நகர் என்று பலவாறு உச்சரிக்கப்படும் ஊர் 1000 வருடங்களுக்கு முன் மிகச்சிறிய கிராமமே. இத்தாலியிலுள்ள மத்தியத் தரைக்கடல் பகுதியில், டஸ்கன் பிரதேசத்தில் ஃபுளோரிடா என்கிற பிரபலமான வணிக நகரிலிருந்து சுமார் 25 கி.மீ தொலைவில் பைசா நகரம் அமைந்துள்ளது.          கி.பி. 1068 ஆம் ஆண்டு பிசியன்கள் எனப்படும் இத்தாலிய இனக்குழு ஒன்று சிசிலித்தீவின் பாலெர்மோ நகரைத்தாக்கி அங்கிருந்த விலை உயர்ந்த செல்வங்களையும், ஆபரணங்கள், ஆயுதங்கள் ஆகியவற்றை கவர்ந்து வந்தனர். இந்த மாபெரும் வெற்றியைக்கொண்டாடவும், தங்களைப்பற்றி சரித்திரத்தில் ஒரு நிலையான இடத்தை குறிப்பிடும...

முத்தங்களால் நிறைந்த தேசம். முத்தம் 12

 புல்லட்  டிரேய்னில் பிரியாணி உணவு-  முத்தம் 12 காலையில் மாஸ்ல்லா விடுதியைக் காலி செய்துவிட்டு ரோமின் செண்டரல் நிலையத்துக்கு வருகிறோம். அதற்கு முன்னால் நாங்கள் முன்தினம் உணவுக்கடையில் சாப்பிட்ட பிரியாணி வாங்கிப் பொட்டலம் கட்டிக்கொள்ளலாம் என்று முடிவெடுத்தோம். மருமகன் இன்னும் கொஞ்சம் தள்ளி இன்னொரு பிரியாணி கடையிருப்பதாகச் சொல்லி அங்கே போய் நான்கு பொட்டலத்தைக் கட்டிக்கொண்டு வந்துவிட்டார். ரயிலிலேயே சாப்பிடுவதாகத் திட்டம். சாதாரண ரயில் அதிவேக புல்லட் ரயில் எப்போதும் போலவே கூட்டம் அலைமோதுகிறது. அதிவிரைவு ரயிலான புல்லட் டிரேய்ன படமெடுக்காமல் மண்ணில் முகம் சாய்த்து படுத்து க் கிடக்கும் பெரு நாகம்போல் காட்சி யளிக்கறது. அதில்தான் ஏறிப்' பியெரண்ஸ்' போகப்போகிறோம் என்று தெரிந்தும் அதன் முன்னால் நின்று படம் எடுத்துக்கொண்டோம். பயணிகளை சந்திக்க காத்திருக்கும் களவாணிப் பெண் காவல்துறையால் அழைத்துச்செல்லப்படும் களவாணி அந்த நிலையத்தில் பயணிகளுக்கு உதவுவதற்கென்றே சில பெண்கள் அங்குமிங்கும் அலைந்து பயணிகளிடம் பேச்சுக்கொடுத்துக் கொண்டிருந்தனர். எல்லாம் அழகிய இளம் ...

முத்தங்களால் நிறைந்த தேசம் --முத்தம் 11

முத்தம் 11- அனுபவித்தறியாத அந்தக் கால சக்ரவர்த்திகள். மூன்று நாட்களாக இந்தப் பயணம் பற்றி எழுத நேரமில்லை. தொலைகாட்சிப் பேட்டி, வானொலிப் பேட்டி என் அலைந்ததால் எழுத நேரம் கிடைக்கவில்லை.(பிசியாயிட்டம்ல) எங்கள் ஊரிலிருந்து கோலாலம்பூர் போய்வர முழுதாய் இரண்டு நாட்களை விழுங்கிவிடும். இப்போது தொடர்ந்து வாசிக்கலாம். நதிக்கரையோரம் நடந்தே உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றான, கொலிசியம் வந்து சேர்ந்தோம்.  சுற்றிப்பார்க்கும் நேரங்களில் நடந்தே காட்சியைப் பார்த்து வருவது இனிமையான அனுபவம். நாங்கள் அலைந்து திரியவில்லையென்றால் இந்த நதியைப் பார்த்து லயித்திருக்க முடியாது. மக்கள் கூடுமிடம் (கொலிசியத்தைச் சுற்றியுள்ள புராதன இடங்கள்.) ஐரோப்பிய நாடுகளில் ,குறிப்பாக நாங்கள் பார்த்த இந்த தேசங்களில் நீரின் தூய்மை பற்றிச்சொன்னேன். பயணிகளுக்கு அல்லது மக்கள் தாகத்துக்கு குடிக்க ஆங்காங்கே குழாய்கள் அமைத்திருக்கிறார்கள். இந்தக் குழாய் நீர் நேராக நதிகளிலிருந்தே  வருகிறது. நதி நீர் மலையிலிருந்து உற்பத்தியாவதால் இதன் தூய்மை பற்றி சந்தேகிக்க வேண்டியதில்லை என்கிறார்கள். நாங்கள் வாங்கி வைத்திருந்த தண்ணீர்ப் ப...