Skip to main content

Posts

முத்தங்களால் நிறைந்த தேசம்..முத்தம் 23

 பனிவிழும் மலர் வனம்- ரிஹானா நீர்வீழ்ச்சி டில்டிஸ் மலியுச்சியின் குளிர் கோடைகாலத்திலும் மைனஸ் பாகைக்குப் போகிறது. மலையுச்சியில் ஒரு சுரங்கம். மைனஸ் பாகை செல்சியஸ் எப்படியிருக்கும் என்பதைச் சுற்றுப்பயணிகளுக்கு உணர்த்த உண்டாக்கப்பட்ட சுரங்கம். இதனை மெல்லதான் நடந்து கடந்து வரமுடியும், தரையுயிலும் ஐஸ்கட்டிதான். சுற்றிலும் ஐஸ் கெட்டிதட்டிப்போய்க்கிடக்கிறது. 15 நிமிடம் ஆகிறது 150 மீட்டர் தூரத்தைக்கடக்க. உள்ளே புகுந்துவிட்டால் எப்போது வெளியே வருவோம் என்று பீதியடைந்துவிடுகிறோம்.. கடுங்குளிர். பலமுறை வழுக்கி விழுந்தவர்களைக் காணமுடிகிறது. நானும் கிடதட்ட விழுந்து விட்டேன். சமாளித்துக் கொண்டேன். பாதுகாப்பானதுதான் என்ற உணர்வு வெளியே வந்தவுடந்தான்  ஏற்படுகிறது. மலையுச்சியிலிருந்து கீழே இறங்கி சூரிச் பட்டணத்தை அடைகிறோம். அங்கிருந்து றிஹானா நீர் வீழ்ச்சிக்குக் காரைச் செலுத்தினோம். உயரமான மலையும் காடும் உள்ள இடங்களில் நீர்வீழ்ச்சி இருப்பது சகஜம்தான். ஆனால் அது எவ்வளவு உயரத்திலிருந்து கொட்டுகிறது என்பதை மனம் கணக்குப் போட்டபடி இருந்தது. மருமகன் கூகலைப் பார்த்து  ரிஹானா இது மிக...

முத்தங்களால் நிறைந்த தேசம்- முத்தம் 22

சாருக்கானையும் கஜோலையும் டிடல்டிஸ் மலை உச்சியில் பார்த்தோம். தில்த்திஸ் மலையின்  உயரம் 10,000 அடி. நான் கேபல் காரில் பயணம் செய்த அனுபத்தில் இதுதான் ஆக உயர்ந்த இடம். லங்காவித்தீவில் தொங்கும் பாலத்தில் நடப்பது விநோத அனுவம் என்றால், இந்த மலையுச்சியில் உறை பனிமலைகளைப் பார்ப்பது இன்னொரு அனுபவம். சுவிட்சர்லாந்தில் இந்த டில்ட்டிஸ் மலை மிகப் பிரபலமானது.  ஏஞ்ஜல்  பெர்ட் கேபில் கார் என்று இதனை அழைக்கிறார்கள். இதுதான் உலகத்திலேயே முதன் முதலாக  நிர்மானிக்கப்ப்பட்ட கேபில் கார் சுற்றுலாத்தளம். கோடை காலத்திலும் டில்டிஸ் மலை உச்சி  சைபர் டிகிரி செல்சியஸ் வரை இறங்கி இருக்கிறது. குளிர்காலத்தில அநேகமாக இங்கே யாரும் போக மாட்டார்கள் என்றே சொல்கிறார்கள். கேபில் கார் இரண்டு இடங்களில் நிற்கிறது. முதல் இடம் 6000 அடி உயரத்தில் நிற்கிறது. இங்கே இந்திய உணவு வகையான பிரியாணி உணவகம் பார்த்தோம். வெள்ளையர்கள் இன்றைக்கு பிரியாணி வகை உணவை விரும்பு உண்கிறார்கள் என்பது பல இடங்களில் பார்க்கமுடிகிறது. அடுத்த கேபில் கார் 10000 அடி உயரத்தில் நம்மை இறக்கிவிடுகிறது. 6000 அடி உயரத்தில...