Skip to main content

Posts

ரெ.காவின் ‘செல்வி இனி திரும்ப மாட்டாள்’- விடாது விரட்டும் காமம்.

ரெ.கார்த்திகேசு இலக்கிய அரங்கம் 20.3.16ல் மலாயா பல்கலையில் ஒரு நாள் நிகழ்ச்சியாக நடைபெறவிருக்கிறது. அதனை முன்னிட்டு அவர் கதைகளின் ஊடாக ஒரு பயணம்.) கதை 3 ரெ.காவின் ‘செல்வி இனி திரும்ப மாட்டாள்’- விடாது விரட்டும் காமம்.  நான் முன்னர் சொந்த வீடு கட்டி வாழ்ந்த இடத்தில் மூன்று நான்கு வீடுகள் இருந்தன. புற நகர்ப்பகுதியிலிருந்து தள்ளி இருந்த ஒரு தனித்த நிலப்பகுதி அது. என் அண்டை வீட்டில் குடியிருந்த என் மகன் வயதையொத்த ஒரு பையன் எங்களோடு நட்பானான். மெல்ல  நெருக்கமாகி, குடும்பத்தில் இன்னொரு உறுப்பினனானான். அவன் படித்து முடித்து கோலாலம்பூரில் வேலைக்கான பிறகும், தொடர்பு அறுந்து விடவில்லை.  அவ்வப்பொது திரும்பும்போது, தவறாமல் நலம் வசாரித்துவிட்டுத்தான் போவான். பெரு நகர வாசம் அவனை வெகுவாக மாற்றியிருந்தது. ஒருமுறை வரும்போது  அவன் காதல் முறிந்து கனத்த சோகத்தோடு இருந்தான். என்ன ஆச்சு? என்று விசாரித்தேன். விசாரிக்க வேண்டிய அவசியமே இல்லாமல் தானாக உடைந்து கொட்டித்தீர்க்கும் தன்மை கொண்டததுதானே காதல் சோகம்.  காதல் தோல்விகள் அதீத சோகத்தைத் தனக்குள் பிதுங்கப் பிதுங்க அமுக்கி வைத்த...

ரெ.காவின் ‘கொப்புளங்கள்’- சிறு தவறுகளை ஊதிப் பெரிதாக்கி ஊழித் தீயில் விழுதல்

ரெ.கா கதை மூன்று 20.3.16ல் மலாயா பல்கலையில் ரே.கார்த்திகேசு இலக்கிய அரங்கம் நடைபெறவிருக்கிறது. அதனை முன்னிட்டு அவரின் சிறுகதைகளின் ஊடாக ஒரு பயணம்                                                      ரெ.காவின் ‘கொப்புளங்கள்’-                        சிறு தவறுகளை ஊதிப் பெரிதாக்கி ஊழித் தீயில் விழுதல் ஒருநாள் பள்ளி மாணவி ஒருவரை அழைத்துக்கொண்டு என் அறைக்குள் நுழைந்தாள் ஒரு வகுப்பாசிரியை. மாணவியின் வலது கையைப் பிடித்து என்னிடம் காட்டினாள். அவள் வலது உள்ளங்கை முழுதும் கொப்பளித்துப் புண்ணாக இருந்தது. பிஞ்சுக் கையின் வெள்ளைச் சதை வெடித்து நீர் வடிந்து கொண்டிருந்தது. என் கண்கள் காயத்தின் மேல் நிலைக்க மறுத்தன. நான் ஆசிரியை முகத்தைப் பார்த்தேன். “அவளால எதுவும் எழுத முடியாம இருந்தத கவனிச்சப்போ தான் இந்தக் காயத்தப் பாத்து, துடிச்சுப் போய்ட்டேன் சார் !” என்றாள். நான் மாணவியை என்ன நடந்தது என்று கேட்டே...

ரெ.காவின் வெள்ளைப் பூனையும் கருப்புக் குட்டிகளும்- ஆணாதிக்க வன்மம்

                         கதை இரண்டு ரெ . காவின் வெள்ளைப் பூனையும் கருப்புக் குட்டிகளும் -   ஆணாதிக்க                                வன்மம் சமீபத்தில் வேலை தேடி அலையும் ஒரு வயதுப் பெண்ணை   எதேச்சையாக சந்திக்க வேண்டியிருந்தது . என்ன வேலையாக இருந்தாலும் பரவாயில்லை என்று கீழிறங்கி வந்தாள் . அவளின் தோற்றம் கரிசனத்தை உருவாக்கிய வண்ணம் இருந்தது . அவளைச் சந்திக்கும் யாருக்கும் கழிவிரக்கம் பிறக்காமல் இருக்காது . அவளை மேற்கொண்டு விசாரித்த்தில் ஒரு மூன்று வயது குழந்தை இருப்பதாகச் சொன்னாள் . வயதான அம்மாவையும் பார்த்துக்கொள்ள வேண்டும் . ஆனால் கணவனோ பாதைமாறி குற்றச்செயலில் ஈடுபட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறான் . எனவே வயிற்றுப் பிழைப்புக்காவது அவளுக்கு வேலை அவசியத் தேவையாகிறது . பெரும் பெரும் பட்டணங்களில் இவ்வாறான அபலைப் பெண்களை அதிகமாகவே எதிர்கொள்ள முடியும் . இவர்கள் ஒரு வகையில் ஏமாற்றப்பட்டவர்கள் . கனவுப் பருவத்தி l காதலுக்கு ஒரு த...

சிதையும் முன் அபிப்பராயங்கள் ( டாக்டர் ரெ.கார்த்திகேசு)

சிதையும் முன் அபிப்பராயங்கள் ‘ டாக்டர் ரெ . காவின் ‘ கொல்லவரும் புலி ’. கோ . புண்ணியவான் இந்த மார்ச் மாத ம் 20 ல் மலாயா பல்கலைக் கழகத்தில் நடக்கவிருக்கும் டாக்டர் ரெ . கா படைப்பின் மீதான இலக்கிய கருத்தங்குக்கு அவரின் சிறுகதைகள் குறித்தான கட்டுரை எழுத , ‘ இன்னொரு தடவை ’ சிறுகதைத் தொகுப்பைப் பலமுறை தேடியும் என் வீட்டு நூலகம் தேடிக் கொடுக்க மறுத்தது . வேலைக் காரியின் மேலும் வீட்டுக்காரியின் மேலும் கோபம் வந்தது . நூல்களைத் தூசு தட்டி அடுக்க வேண்டும் என்ற கட்டளைக்கு நூல்களை அடுக்களைப் பாத்திரங்கள் போல அடுக்கிவைத்து நல்ல பேர் வாங்கிக்கொண்டாள் வேலைக்காரி . பிற நூல்கள் கிடைத்துவிட்டன . ‘ இன்னொரு தடவையைப் ’ பல தடவை தேடியும் கிடைக்கவில்லை . சலித்து கைவிட்டுவிட்டேன் . கிடைத்த நான்கு தொகுப்புகளை வைத்து கட்டுரையை முடித்தேன் . ஆனால் எனக்கு நிறைவளிக்கவில்லை . எல்லாக் கதைகளையும் அலசி ஆராய வாய்ப்பில்லையே என்ற ஆதங்கம்தான் காரணம் . கட்டுரையையும் அனுப்பியாயிற்று . ஒரு மாதம் கழித்து ஒரு நண்பர் பேரவைக் கதைகள் நூல் வேண்டுமென்று கேட்டார் . அதைத் தேடப் போய் ‘ இன்னொரு தடவை ’ சிக்கியது . இங்கேதான் ...

விருதுகள் கண நேர மகிழ்ச்சியே ( தமிழ் மலர் ஞாயிறு மலரில் என் நேர்காணல்)

விருதுகள் கண நேர மகிழ்ச்சியே கோ . புண்ணியவான் தமிழ் படைப்பிலக்கியத்துறையில் தவிர்க்க முடியாத ஆளுமை கோ . புண்ணியவான் . நாற்பதுக்கும் மேற்பட்ட ஆண்டுகளாக தொடர்ந்து இயங்கி வருபவர் . மூன்று சிறுகதைத் தொகுப்புகள் . இரண்டு நாவல்கள் , ஒரு கட்டுரைத் தொகுப்பு , ஒரு கவிதை நூல் , கெடா மாநில எழுத்தாளர்களை ஒன்றிணைத்துக் கொண்டு வெளிவந்த சிறுகதைத் தொகுப்பு என 7 நூல்களை இலக்கிய உலகுக்கு அளித்தவர் . இப்போது ஆகக் கடைசியாக சிறார் நாவலான ‘ வன தேவதை ’ யைக்   பதிப்பித்து எண்ணிக்கையை எட்டாக்கியிருக்கிறார் . தமிழ் படைப்புகளுக்கு மலேசிய வாசகர்களிடம் அபரிமித வரவேற்பு இல்லையென்றாலும் , எழுதுவதிலிருந்து அவர் ஒதுங்கிவிடவில்லை . எழுதுவதை ஒரு சமூகக் கடமையென   எண்ணுபவர்களில் கோ . புண்ணியவானும் ஒருவர் . அவரின் தொடர் இயக்கம் , எழுத்துக் கலையை அடுத்த தலைமுறைக்கும் கையளிப்பு செய்தாக வேண்டும்   என்ற நோக்கமுடையது . சமீப காலமாக எழுத்துலகில் அதிகம் விருதுகள் பெறுபராக ஊடகங்கள் அறிவிக்கின்றன . குறிப்பாக அவர் எழுதிய ‘ எதிர்வினைகள...