என் மனைவி தமிழ் நாட்டு சுற்றுப் பயணத்துக்கு அனுப்பியிருந்தேன். எனக்கு சேலை கடையென்றால் அலர்ஜி. இரண்டு மூன்று நாட்கள் முழுக்க கால்கடுக்க சேலைக்கடையிலும் , கடைத்தெருவில் அலைவதை நினைத்தாலே கால்கள் கடுக்கத் தொடங்கிவிடும். மகள் குடும்பத்தோடு அவள் ஜூலை 29ல் போய்விட்டிருந்தாள். கிட்டதட்ட 11 நாட்களை எப்படிக் கழிப்பது என்ற பிரச்னை. நீண்ட நாட்களாவே பானு விடுமுறையைக் கழிக்க சொங்க்லாக்-தாய்லாந்து போகலாம் என்று அழைத்துக் கொண்டிருந்தார். நான் நாலைந்து முறை பார்த்த ஊர்தான். மிகுந்த ஆரவ்மில்லை. காரில் போய்விட்டு வருவதற்கு உசிதாமான இடம். இரண்டரை மணி நேரப் பயணம்தான். எனக்கும் போரடித்துக் கொண்டிருந்தது. சரியென்று பானுவோடு கிளம்பிவிட்டேன். மனைவி இல்லாத வேளையில் பானுவோடா? அதுவும் தாய்லாந்துக்கா? என்ற உங்கள் எண்ணம் கோணாலாவது தெரிகிறது. பானு என் நடைப் பயிற்சி நண்பர். ஆடவர். பானு நாயர். போதுமா? 2 ஜூலை காலை 7.30க்கெல்லாம் என்னை என் வீட்டில் ஏற்றிக்கொண்டு கிளம்பி விட்டார். மணி 10 வாக்கில் புக்கிட் காயு ஹீத்தாம் எல்லையை அடைந்தோம். சனிக்கிழமைய...
ஒவ்வொருமுறையும் நூல்கள் திறக்கப்படும்போது- நன்றிக் கடனாக அவை உங்களை அகலத் திறந்துவிடுகினறன. (ko.punniavan@gmail.com)