Skip to main content

Posts

எழுத்தாளராய் இருப்பதில்......

எழுத்தாளராய் இருப்பதில்...... பலருக்கு அறிமுகமான எழுத்தாளராய் இருப்பதில் வில்லங்கமும் பல வடிவத்தில் வந்து சேரும். கலை சார்ந்து இயங்கக்கூடியவர்களில் எழுத்தியக்கத்தில் இயங்குபவர்களுக்குத்தான் ஆகக் குறைந்த ரசிகர்கள் இருப்பார்கள். இவர்களுள் பலர் நம் எழுத்தைப் படித்திருக்கமாட்டார்கள் ஆனால் ஊடக விளம்பரங்கள் மூலம் நாம் அவர்களுக்கு அறிமுகமாகி இருப்போம். “சார் நேத்து ஒங்கள டிவில பாத்தேன்,  பேப்பர்ல போட்டோ பாத்தேன், ரேடியோவில பேர் சொன்னாங்க,” என்றெல்லாம் முகமன் பேசுவார்கள். வில்லங்கம் இவர்களிடமிருந்தே பெரும்பாலும் வந்து சேரும். இரண்டு வாரங்களுக்கு முன் என் மகள் எனக்கு குறுந்தகவல் அனுப்பி ஒருவருடைய தொடர்பு எண்ணையும் கொடுத்து “அவர் உங்களிடம் பேசணுமாம்” என்றார். அடடே இன்னொரு வாசகர் கிடைத்துவிட்டார் என்று நான் தொடர்பு கொண்டேன். “ஐயோ சார்.. நான் உங்கள அவசியமா சந்திக்கணுமே?” என்று தொடங்கினார். “சந்திக்கலாமே,” என்றேன். எனக்கும் பெருமிதம் உச்சியைத் தொட்டது. “ரொம்ப நன்றிங்க சார், ரொம்ப நாளா உங்கள் சந்திக்கணும்னு காத்துக்கிட்டிருக்கேன் சார், எப்போ சந்திக்கலாம் சார்...? வாசகரைச் சந்திக்க நே...

ஜெயமோகனும் நாஞ்சில் நாடனும் முன்னெடுத்த கூலிம் இலக்கிய முகாமும், கலையின் மகத்துவமும்

          ஜெயமோகனைச் சந்திக்கும் தருணம் வாய்க்கும் போதெல்லாம் மெல்லிய பதற்றம்  ஏறி விடுகிறது எனக்கு. அவர் எழுத்து உருவாக்கிய பிரம்மாணடம் அவர் உரையாடலில் பொங்கி  எழும் அறிவார்த்தம், இடைவிடாது அசுரத்தனமாக் எழுதும் ஆற்றல்,. நான் ரொம்ப பின்னால் இருக்கிறேன் என்ற தாழ்மை உணர்வு காரணமாக இருக்கலாம். இம்முறை மலேசியாவில் நான்காவது முறையாக சந்திக்கிறேன். அவரிடம் எப்படி உரையாடலைத் துவக்குவது என்ற முன்யோசனையோடு நான் என் ஊரான சுங்கைப் பட்டாணியிலிருந்து , கூலிம் தியான ஆஸ்ரமத்துக்குச் செல்கிறேன். கோலாலம்பூர் வல்லினம் நடத்திய குறுநாவல் சிறுகதைப் பயிலரங்கை முடித்துக்கொண்டு , ஜூலை 2 ம் தேதி சுங்கை கோப் பிரம்ம வித்யாரணயத்தில் நடைபெறும் இலக்கிய முகாமுக்கு, இன்னொரு இலக்கியப் பயிலரஙக்கை நடத்த வந்திருந்தார்  ஜெ. வல்லின நிகழ்ச்சியில் கலந்துகொள்ள நான் பதிவு செய்திருந்தேன். ஆனால் எங்கள் வீடமைப்புப் பகுதியில் கடுமையாக பரவி வந்த சிக்குன்குன்யா காய்ச்சலுக்கு நானும் பலியாவேன் என்று எதிர்பார்க்கவில்லை. சக மனிதர்களுக்கே நான் படைப்பாளன் என்று அறிமுகமாகாதபோது வெள்ளந்தி மனம் கொ...

கமிட்டட்

கமிட்டட். இன்று என் 16 வயது பேத்தியை அவள் பள்ளிக்குப் போய் ஏற்றிவரச் சென்றிருந்தேன். சற்று தாமதமாகி விட்டது. அரை மணி நேரம். நிறுத்தத்தில் அவளோடு அதே வயது கொண்ட  பையன் காத்திருந்தான். இருவர் மட்டுமே அங்கே. என் கார் வருவதைப்        பார்த்துக்    கொண்டிருந்தவள்  சுணக்கமின்றி  வந்து ஏறிக்கொண்டாள். அந்தப் பையன் யாரென்று கேட்டேன். என் பேத்தி கொஞ்சம் துடுக்குக்காரி. “அவனுக்குக் கேல் பிரண்டு இருக்கு,” என்றாள். "அந்தப் பையன் யாருன்னுதான கேட்டேன்?: என்றேன். “எல்லாரும் சந்தேகக்  கண்ணோடையே பாக்குறீங்க,” என்றாள். “உன் வயது அப்படி!” என்றேன். “அவனுக்கு ஒரு கேல் பிரண்டு இருக்கு, எனக்காக  எப்போதும் காத்திருந்து அனுபிட்டுத்தான் அவன் வீட்டுக்குப் போவான், அவங்கிட்ட மோட்டார் சைக்கில் இருக்கு,” என்றாள். “எனக்கு அந்த எண்ணமெல்லாம் இல்ல. நான் படிக்கணும்,” என்றாள். அவள் வார்த்தையில் பொய்யில்லை. படிவத்திலேயே முதல் மதிப்பெண் எடுக்கக் கூடியவள். சதா படிப்புதான். தொடர்ந்து  4 மணி நேரம் அசையாமல் படிக்கக் கூடியவள். அதனால் எனக்கு  அவள் மீது...

விசில் - சிறுகதை

                                               விசில்                             கூர்மையான விசில் சப்தம் மீண்டும் என் காதுகளை மோதியது.  அதிர்ந்து விழிக்கச் செய்த ஒலி. காதி ஜவ்வை    ஊசியில் குத்தப்பட்டது போல துடித்து எழுந்தேன்.  அண்டை வீட்டு படுக்கையறை வெளிச்சம் கண்ணாடி சன்னலையும் , திரையின் சிறிய திறப்பையும் தேடி ஊடுருவி உள்ளே நுழைந்திருந்தது.  கண்கள் மீண்டும் மூடித், துயிலுக்குள்  ஒன்றிணைவதென்பது சிரமமான காரியம்.  தூக்கத்தைக் கலைத்து, மூளையின் இயக்கத்தை முடுக்கிவிட்ட சப்தம், இமைகளை மூட வெகு நேரத்தை எடுத்துக்கொள்ளும். அண்டை வீட்டின் நிலை சரியாகும் வரை வெளியே காற்றாட நடக்கலாமா என்று மனம் அழைத்தது. பின்னிரவைத் தாண்டிய பொழுதில் காற்று சிலு சிலுவென வீசும். காற்றின் ஈரச் சில்லிடல் உவகையை உண்டு பண்ணும். நடந்துவிட்டு  வந்து படுத்தால் தேவலாமெனத் தோணியது. இரவின் சல...

கரகம்~ சிறுகதை

                                                  கரகம் போன ஞாயிற்றுக்கிழமை கோயில் கூட்டத்தின்போது சலசலப்புக் கூடியிருந்தது. “நம்ம கோயில் கூட்டத்துல சலசலப்பும் கூச்சலும் இல்லேன்னா அப்புறம் எதுக்கு கோயிலுன்னும் கூட்டமுன்னும். கூட்டத்துல மட்டுமா? கும்பாபிஷேகத்துலயும், தீமிதியிலயும் களேபரங்கல்லாம் இல்லேன்னா அது கோயிலே இல்லேன்னு ஆயிப்போச்சுல்லே! தீமிதியை முன்னிட்டுக் கூட்டம் கூடும்போது தொடங்கும் சூடு முடியும்வரை தணியறதில்லை” கூட்டத்தில் யாரோ ஒருவர் உரக்கச் சொல்லிக்கொண்டிருந்தார். பதினெட்டாம் கட்டை கோய்ந்தசாமியை இந்தமுறை கரகப்பூசாரியாய்க் கூப்பிடலாமென்று தலைவர் சொன்னார். சேரா எஸ்டேட் மாரியம்மன் கோயில் தீமிதியை நல்லபடியா நடத்திக்கொடுத்தார். பேசிய தொகைக்கு மேல அஞ்சி காசுகூட வாங்கலன்னு சேரா கோயில் தலைவர் சொன்னதாகத் தலைவர் சிபாரிசு செய்தார். “கரைக்டா டயத்துக்கு வந்திடுவார், கொற வக்காம செஞ்சி முடிச்சிட்ட பிறகுதான் தொகையைக் கேப்பார், வாக்கு சுத்தமான மனுஷன், சக்தியுள்ள ...

சிறியோரை இகழ்தல் அதனிலும் இலமே -சிறுகதை

                     சிறியோரை இகழ்தல் அதனிலும் இலமே                                                   நான் வீட்டுக்கு வெளியே இருந்தேன். கொஞ்ச நாளாய் குளியலறை நீர் வடிந்து ஓடித் தெரு சாக்கடையில் விழாமல் எரிச்சலை உண்டு பண்ணியது. குளிலயறையிலேயே குளம் கட்டி  புரொஸ்டேட் நோயாளியின் சிறுநீர் போல மெல்ல மெல்லத்தான் வெளியானது. அது முற்றிலும் வடிந்த பின்னரும் அடித்தரையில் மெல்லிய  வழுக்குப் பாசி. சிறுநீர் வீச்சம் இலவச இணைப்பாக. தினமும் தேய்த்து கழுவேண்டியதாயிற்று. கழுவிய நீர் கறைந்தோட பலமணி நேரப்   பிடிவாதம். கணுக்கால் வரை அழுக்கேறித் தேங்கிய குளத்தில் நின்று குளிக்கும் நிலையைத் தவிர்க்கவியலாத போராட்டம். நான் அடைத்த சாக்கடையை  ஹோஸ் பைப்பால்  குத்தி தற்காலிக வடிகால் உண்டாக்கும் முயற்சிகள் பலனளிக்கவில்லை. குழாய் பொறுத்துனரை அழைத்தும் அவன் ‘தோ வரேன், நாளக்கி வரேன்’ என்று என் குளியளறை தரை போல வழு...

தொடுதூரம்- சிறுகதை

                                                                                        அவள் முகத்தைக் கண்ட மாத்திரத்திலேயே என் இயல்பு சரிந்துவிட்டிருந்தது. சோகம் ஒட்டுண்ணியோ? நாற்பதாண்டுகால தாம்பத்யம்.            அறுபதைக்கடந்து விட்டிருந்த  முகம் .அவளுக்கு மூப்பேறிக் கொண்டிருக்கிறது என்பது சோகசெய்திகளின் கிடங்கான இதயத்திலிருந்து இடம்பெயர்ந்ததால் உண்டாவது ! இதயம் எவ்வளவுதான் தாங்கும்? அதனை இடம் பெயர்த்த வேண்டாமா? அதற்காகத்தான் முகம் என்றாகிப்போனதோ!.காரை பெயர்ந்து வாட்டத்தில் மேலுமொரு சோகத்தைதப் புதிதாய் பதிவேற்றம் செய்து வைத்திருந்தது. அதனை வெளியேற்ற என் வருகைக்காகக் காத்திருந்தாள் போலும்!            “என்னாச்சு?’          சற்று நேர மௌனத்துக்குப் பிறகு-  “அவனுக்கு கொழந்த ப...