Skip to main content

ஜோர்ஜ் டௌன் அனைத்துலக இலக்கிய விழாவும், கரிகாற்சோழன் விருதும்.

 3. ஜோர்ஜ் டௌன் அனைத்துலக இலக்கிய விழாவும், கரிகாற்சோழன் விருதும்.



  ஜோர்ஜ்டௌன் இலக்கிய விழாவில் இரவு விருந்து முடிந்து நான் விக்டோரியா இன் ஓட்டலில் தங்கிவிட்டேன். நல்ல வசதிகள் கொண்ட அறை.குறைந்தது 4 நட்சத்திர தகுதிகொண்ட விடுதி அது. விருந்தின்போது என்னிடம் இரண்டு  உரைகள் கொடுக்கப்பட்டன. திறந்துபார்த்தால் இரண்டிலும் பண நோட்டுகள். நான் கலந்துகொள்ளப்போகும் இலக்கிய உரையாடலுக்கு வழங்கப்பட்ட சன்மானம்.  தொகை சற்றே அதிகமானது. எழுத்தாளர்கள் கூடி இருந்ததால் அந்தப்புராதன வளாகம் வனப்பு கூடி இருந்ததாக இரவு உணவின் போது உணர்ந்தேன்.இப்போது அதன் அழகு‌மேலும் ஒருபடி கூடி இருப்பதாக உணரவைக்கிறது.

24.11.22 இரவு விருந்தில் ஜோர்ஜ்டௌன் இலக்கிய விழாத் தலைவர் போலினோடு

 மணி 12 வாக்கில் ஜெயமோகனையும் அருண்மகிழ்நனையும் )என்ன அழகான பெயர்) ஏற்றிக்கொண்டு பிரம்ம வித்யாரண்யம் பயணமானேன்.  பாண்டியன் அருண்மொழியையும், லதாவையும், லோஷினியையும் ஏற்றிக்கொண்டார், மதிய உணவை பட்டர்வர்த்தில் சாப்பிடலாம் என்றே திட்டம் (எப்போதுமே உணவு விஷயத்தில் மட்டும் முன்திட்டம் போடுவதில் கவனமாகத்தான் இருக்கிறோம்).மதிய உணவு 12.00 க்குள் சாப்பிடுவது உசிதமாகாது. விடுதியில் 10 மணிக்குத்தான் காலை உணவை முடித்திருந்தோம். என்வே கூலிமில் சாப்பிடலாம் என்று எண்ணியிருந்தேன். கூலிமில் சிறந்த கடையென்றால் அது ஆனந்த பவன்தான். ஆனால் அக்கடை மூடப்பட்டுவிட்டது என்று எனக்குப் பாண்டியன் சொல்லித்தான் தெரியும். குமாரசாமியை அழைத்துக் கேட்டதற்கு பாயாபெசாரில் உள்ள தாமரை உணவகத்தைச் சொன்னார். தாமரை உணவகத்தைப் பார்த்து உண்டான  முதல்  அபிப்பிராயமே உவப்பானதாக் இல்லை. கடை சுத்தமில்லை.மேசை நாற்காலிகள் அழகாகப் போடப்படவில்லை. அவரவர் உணவை அவரே தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும் . விருந்தினரை அழைத்துவந்து இப்படியா உபசரிப்பது. எனினும் அவர்கள் இயல்பாகவே இருந்தார்கள். உணவு அசாதரணமான சுவையோடு இருந்தது. Dont judge a book by its cover. நாங்களெல்லாம் புத்தகம் எழுதுபவர்கள். அந்தப் பழமொழிதானே வரும்!


தொடர்ந்து பயணம் பிரம்ம வித்யாரண்யத்துக்கு. 

மாலை 5 மணி வாக்கில் தமிழ் விக்கி அறிமுகவிழா காணவிருந்தது. விக்கி தமிழ் ஏற்கனவே பல ஆயிரம் பதிவுகளைப் பதிவேற்றம் செய்திருந்தது.தமிழ் விக்கியும் விக்கி தமிழும் முற்றிலும் வெவ்வேறு தளங்கள். விக்கி தமிழில் உள்ள பதிவுகளை யாரும் திருத்தலாம். கூடுதல் செய்திகளைச் சேர்க்கலாம். குறைக்கலாம். எனவே அதன் வரலாற்று பதிவுகளில் நம்பகத்தன்மை கேள்விக்குரியாதாகியது. விக்கி தமிழில் தொடக்கத்தில் என்ன பதிவு செய்யப்பட்டதோ அதேதான் இன்றுவரை நிலைக்கிறது. கால மாற்றத்திற்கேற்பு வரலாறு புதிய விடயங்களை தன்னகத்தே தகவமைத்துக்கொள்கிறது. ஆனால் விக்கி தமிழ் அந்த வரலாற்றுக்கேற்ப்  பதிவுகளில் கூடுதல் விடயங்களைச் சேர்ப்பதில்லை. எனவேதான் தமிழ் விக்கியை ஜெயமோகன் தொடங்கினார். தமிழ் விக்கியில் யாரும் விருப்பப்படி கைவைக்க முடியாது. ஒரு சிறப்புக் குழுவுக்கு மட்டுமே அந்த அதிகாரம் உண்டு.அவ்வாறுதான் கட்டுரைகளில் நம்பகத்தன்மையை உண்டாக்க முடியும். 

எழுத்தாளர் ம .நவீனிடம் மலேசியா சார்ந்து தமிழ் விக்கி பதிவுப் பணிகள் ஒப்படைப்பட்டன. அவர் ஒரு சிறிய குழுவை அமைத்துக்கொண்டு இதுவரை 200 பதிவுகளை தமிழ் விக்கி தளத்தில் வலையேற்றி இருக்கிறார். என்னால் முடிந்ததை நானும் எழுதித் தந்திருக்கிறேன். குழு அங்கத்தினர் மிகச் சிறிய எண்ணிக்கையிலானது. பதிவுகள் எண்ணிக்கையோ முடிவே இல்லாதது. இருந்தாலும் சிறு துளிகள்தான் வெள்ளம் பெருக்கெடுக்கக் காரணமாகிறது. மெல்ல மெல்ல நகர்ந்தாலும் ஒரு குறிப்பிட்ட எல்லையை எட்டிப்பிடித்துவிட முடியும் என்ற தூர நோக்கில் மலேசியத் தமிழ் விக்கி நோக்கம் கொண்டுள்ளது.

ஜெயமோகன் தமிழ் விக்கி தொடக்கப்பட்டதன் காரணத்தை தன் உரையில் விருத்துரைத்தார். அது ஒரு பிருமாண்டப் பணி. ஆனால் ஜெவுக்கு பிருமாண்டம் என்பதெல்லாம் பெரிய விஷயமே இல்லை. அவருடைய வெண்முரசு நாவல் உலகத்திலேயே மிகப்பெரியது. 26 நூல்கள்.பல்லாயிரம் பக்கங்கள் கொண்டது.

மலேசியக் குழு 200 கட்டுரைகளை பதிவு செய்திருந்தது. அந்த 200 பதிவுகள் தொடர்பான விவாதத்தை முன்னெடுப்பதன்வழி அதனை மேலும் சிறப்பாகச் செய்யவும் ஒரு உரையாடல் நிகழ்ச்சி முன்னெடுக்கப்பட்டது. தமிழ்விக்கியின் நிறுவனர் ஜெயமோகன் முன்னிலையில் இதனை முன்னெடுப்பது சாலப்பொருத்தமாக இருந்தது. தமிழ் விக்கியின் தரத்தை மேம்படுத்த பெரிதும் வழிவகை செய்யவும் இந்த விவாதம் உதவும்..

முன்னாள் ஆசிரியர் பயிற்சிகல்லூரி விரிவுரைஞர் தமிழ்மாறன். உப்சி பக்லையின் பேராசிரியர்கள் முனீஸ்வரன்,கிங்ஸ்டன், துங்கு பைனுன் விரிவுரைஞர் சாமிநாதன் இந்த உரையாடலில் பங்கெடுத்தனர். அ. பாண்டியன் இதனை முன்னின்று வழிநடத்தினார்.தமிழ் விக்கியில் உள்ள குறைபாடுகளும் நிறைகளும் விவாதிக்கப்பட்டன. நால்வரும் வீட்டுப்பாடத்தை நிறைவாகவே செய்திருந்தனர். குறிப்பாக முனைவர் முனீஸ்வரன் தமிழ் விக்கி கட்டுரைகளை மலாய் ஆங்கில மொழியிலும் மொழியாக்கம் செய்வது பற்றியும் ஒரு கருத்தை முன்வைத்தார். அது இன்னொரு பிரும்மாண்ட வேலை! சாத்தியப்படுமா என்று தெரியவில்லை! 

சிங்கை எழுத்தாளர் அருண் மகிழ்நனின் தமிழ் விக்கி பற்றிய உரை ஆய்ந்தாராய்ந்து தயாரிக்கப்பட்டிருந்தது. தமிழ்விக்கி தொடர்ந்து மேம்படுவதற்கான வழிவகைகளை வழி மொழிந்திருந்தது அவருடைய கட்டுரை. 

மலேசியத் தமிழ் விக்குக்கு கட்டுரை எழுதிக்கொடுத்தவர்கள் சபையில் கௌரவிக்கப்பட்டார்கள். மேற்சொன்ன உரையாடலில் பங்கெடுத்தவர்களையும் ஜெயமோகன் கௌரவித்தார். 










மாலை ஏழுக்கு  சிங்கை மூத்த எழுத்தாளர் கிருஷ்ணன் மொழிபெயர்த்த ஷேக்ஸ்பியர் நாடகங்களின் திருப்பம் நிறைந்த இறுதிக் காட்சிகளை மைஸ்கில் மாணவர்கள் நடித்துக் காட்டினார்கள். இயக்குனர் விஸ்வநாதன் மேற்பார்வையில் நாடகக் காட்சிகள் நிறைவாக வடிவமைக்கப்பட்டிருந்தன. விஸ்வநாதன் மாணவர்களுக்கு தேர்ந்த பயிற்சியை அளித்திருக்கிறார். மொத்தம் மூன்று நாடகங்கள். ளொரு நாடகத்தில் வந்த முதன்மை நடிகர்கள் மற்ற இரண்டிலும் பங்கெடுக்கவில்லை. அவரவர்களுக்கான பணிகளை செவ்வனே செய்யவேண்டும் என்பதற்காக அவர்வர் பணிகளில் முழுமுற்றான கவனம் செலுத்தவே பணிகளைப் பிரித்துக் கொடுத்திருக்கிறார். நடிப்பில் குறை சொல்ல முடியவில்லை. பார்வையாளர்கள் இருக்கையை விட்டு அகலவில்லை. இரவு உணவு நேரம் கடந்த நிலையிலும் பார்வையாளர்களின் உடல் மொழியில் புகார் தென்படவில்லை. ஒரு நாடக இடைவேளையில் நான் முத்து நெடுமாறனிடம் சொன்னேன் மாண்வர்கள் ஒலிப்பதிவுக்கு வாயசைக்கிறார்கள் என்று. அவர் முதலில் இருக்காது என்றார். பின்னர் நான்  வாசைப்பு ஒலிப்பதிவுக்கு நிகராக இல்லை என்பதைச் சில அடங்களைச் சுட்டிக் காட்டினேன். அவர் உடன் பட்டார். பின்னர் ஜெயமோகனிடமும் சொன்னேன். அவர் மிகுந்த வியப்போடு அப்படியா என்றார். அந்த அளவுக்கு வாயசைப்பு பாவனை ஏற்ற இறக்கம் சரியாக அமைந்திருந்தது.

நாடகம் முடிந்து மைஸ்கில் நிறுவனர் வழக்கறிஞர் பசுபதி வறிய நிலையில் இருந்த மாணவர்களும் சமூகத்தால் கைவிடப்பட்டவர்களுமே மைஸ்கிலில் சேர்க்கப்படுவதாகவும் சொன்னார். அவர்களின் வளர்ச்சி அபரிமிதமாக இருக்கிறது என்பதை நானே பலமுறை அவதானித்திருக்கிறேன். அஸ்ட் றோ வானவில் நடத்திய நாடகப்போட்டியில் தொடர்ந்து முயற்சி செய்து நான்காவது முறையே குதல் பரிசான் 10000 ரிங்கிட் பரிசை வென்றதாகச் சொன்னார். பசுபதி நடத்திவரும் மைஸ்கில் நிறுவனம் கைவிடப்பட்ட மாணவர்களுக்குக் கைகொடுத்து மேலே தூக்கிவிடும் ஒரு அறநிறுவனம். அதனை முன்னின்று நடத்திவரும் பசுபதி சக வழக்கறிஞர்கள் போலல்லாமல் அற்வழியில் சிந்திப்பவர் செயல்படுபவர். அதற்காக இதுவரை வாழ்க்கைத் துணையைக் கூட தேர்ந்தெடுத்துக்கொள்ளவில்லை. அவர் பிறர் வாழ்க்கைக்குத்தான் உறுதுணையாக இருக்கிறார்.

நாடக இயக்குனர் விஸ்வநாதன் பேசும்போது மிகுந்த தன்னடக்கத்துடன் பேசினார். 

நான் இரவு மணி 10க்கு இல்லம் திரும்பினேன். நவம்பர் 22ம் 25ம் நான் ஒரு குறுக்குப் பாதையை தேர்ந்தெடுத்தேன். அப்பாதை சுமார் 10 கிலோ மீட்டர் பயண ஓட்டத்தை மிச்சப்படுத்தும். ஒரு காட்டுப்பாதை.ஒரு கார் போகும் அளவுக்கு மட்டுமே விரிவு கொண்டது. இரவு நேரம் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற பீதியில் காரைச் செலுத்தினேன். ஆனாலும் ஒரு படைப்பாளன் தன் வாழ்நாளில் சேகரம் செய்துகொள்ளும் பலவகை திகிலான அனுபவங்கள்தானே புனைவுக்கான உந்துதலைக் கொடுக்கும். எனவேதான் 'உயிரையும் பணையம்' வைத்து அந்த பகீரதப் பிரயத்தனம். 

ஆனால் என் அனுபவம் திரட்சியாகும் வகையில் அப்படி ஏதும் அசம்பாவிதம் நடந்துவிடவில்லை என்பது  எனக்கு அளப்பரிய ஏமாற்றம் .



Comments

Popular posts from this blog

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

கோ.புண்ணியவான். அதன் பிறகு இந்தப் புதிய வடிவத்துக்குப் பெரிதாய் வாசல் திறந்து வரவேற்பு நல்கியது புதிதாய்ச் சிறகு தரித்து நாடு முழுதும் பாட வந்த வானம்பாடி என்ற வார இதழ்.தமிழ் மலரில் ஒரு செய்தி ஆசிரியராகச்சேர்ந்த ஆதி.குமணன் என்ற இளம் பத்திரிகையாளர் பின்னாளில் வானம்பாடி வார இதழைத்தொடங்கி புதுக்கவிதையை வளர்த்தெடுப்பதில் பிரத்தியேகக் கவனத்தைச்செலுத்தினார் என்பதைச்சரித்திரம் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்து வைத்திருக்கிறது. இதில் மிக முக்கியமான செய்தி என்னவெனில் தமிழ் மலரில் பணியாற்றும்போதே புதுக்கவிதைக்குப் பதியம் போட்ட ஆதிகுமணன் பிற பத்திரிகைகள் கொடுக்கத்தயங்கிய அங்கீகாரத்தைத் தன் புதுப்பத்திரிகையான வானம்பாடியில் சிவப்புக்கம்பல வரவேற்பை நல்கினார்.அதன் பின்னர் வானம்பாடி புதுக்கவிதைக்கான இயக்கமாகவே மாறி அதனைத்தீவிரமாக வளர்த்தெடுக்க முயன்றது.புதுக்கவிதை வடிவம் பழைய மரபைக் கட்டுடைத்துத்தந்த சுதந்திரத்தைச் சாதகமாகப்பார்த்த பலர் இத்துறையில் தங்கள் எண்ணங்களை எழுத்துக்களாக வடித்தனர். சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, கு.கிருஷ்ணன், துரை.முனியாண்டி, பிரசன்னா, இளந்தமிழன், வே.ராஜேஸ்வரி, அருள்தாசன் போன

எத்தனை கதவுகளை அடைத்துவிட முடியும் உங்களால் ?

.                      Mr Rama                             Mr.Velan  எத்தனை கதவுகளை அடைத்திவிட முடியும் உங்களால் ? என் கையறு நாவலை அச்சிடப்பட்ட புதிதில் யாவரும் பதிப்பாளரிடமிருந்து 600 பிரதிகள் தருவித்திருந்தேன். அந்த 600 பிரதிகளும் விற்றுத் தீர்ந்தன. அவற்றில் 400 பிரதிகள் நோய்த்தொற்று காலத்தில் தபால் வழிகாகவே அனுப்பவேண்டியிருந்தது.  by தொற்று நோய் பீடித்த காலத்தில் வீட்டுக்குள்ளேயே அடங்கிக் கிடந்தவர்களுக்குத் தொலைகாட்சி ஊடகம் போரடித்திருக்க வேண்டும். எனவேதான் அவர்கள் வாசிக்க நூல்களைத் தேடியிருக்கிறார்கள். கையறு நாவல் வரலாற்றுப் புனைவு என்பதாலும் அதில் கொத்தடிமைகளாக இருந்து வாழ்வின் அனைத்து துன்பங்களையும் அனுபவித்துவிட்ட தன் உறவுகள் கதை என்பதாலும்  அந்த எண்ணிக்கையை எட்டியிருந்தது.  நோய்த்தொற்று சரிந்து பழையபடி சீரான நிலைக்குத் திரும்பிக்கொண்டிருந்த  அடுத்த ஆண்டு இரண்டு இடங்களில் நூல் வெளியீடு செய்தேன். முதலில் நான் குடியிருக்கும் சுங்கைப் பட்டாணி நகரிலும் பின்னர் நான் படித்து வளர்ந்த கூலிம் நகரிலும் செய்தேன்.  நூல் வெளியீடு பெரும்பாலும் வாசகர்களே வரவேண்டும் என்று நினைப்பதால் இந்த இரு ந

வைரமுத்துவின் காலத்தால் அரிக்கப்படாத பாடல்கள்

கவிஞர் வைரமுத்து இந்த ஜூலை 13ல் மணிவிழா  கொண்டாடினார். மணி விழா எடுக்க எல்லாத் தகுதியும் கொண்டவர் கவிஞர். புதுக்கவிதை தமிழ்ப் படைப்புலகுக்கு அறிமுகமான  காலத்தில்   மரபிலிருந்து  புதுக்கவிதைக்குப் பெரும்  பாய்ச்சலை  நிகழ்த்தியவர்களில் மிக முக்கியமானவர்.  மரபுக்கவிதை காலமாற்றத்தால் கனிந்து உதிர்ந்து விழுந்து கொண்டிருக்கும் வேளையில் கவிதை இலக்கியம் தன்னை புதிய தோற்றத்துக்குத் தோலிருத்துக் கொண்டு புதிய சட்டையை மேலணிந்து கொள்ளத்துவங்கியது. இலக்கணச் சங்கிலியால் படைப்புச் சுதந்திரத்தை கட்டிப்போட்டிருந்த படைப்புத் தமிழ் மெல்லத் தளர்ந்து பின்னர் கட்டவிழ்த்து இலக்கணப் பிடியற்ற புதிய விடுதலைக்குத் தயாரானது. புதிய பரிமாணத்தில் புதிய கவிதை யுகத்தைப் படைக்க தொடங்கியிருந்தது. இது காலம் கொண்டுவந்த மாற்றம். மனிதர்களின் முன்தீர்மானம், திட்டமிட்ட செயல் என்றெல்லாம் சொல்வது காலம் வகுத்த விதிக்கு முரணாக சொல்லப்படும் கருத்தாக்கம். புதுக்கவிதை  மரபை பதியம்போட்டு வளர்த்த அப்போதிருந்த வானம்பாடிக் கவிஞர்களே புதுக்கவிதை இலக்கியத்தை ஒரு இயக்கமாக முன்னெடுத்தார்கள். கவிதை படைப்பிலக்கியத்துக்குப் புதிய தோற்றம் த