Skip to main content

Posts

தமிழ்ப்பெண்களின் ரத்தத்தை உறிஞ்சும் டிராக்குலாக்கள்

கடந்த மாதம் 3 நாள் விடுமுறையைக்கழிக்க மலேசிய திரங்கானு மாநிலக்கடற்கரைக்கு அப்பால் அமைந்துள்ள லாங் தெங்ஙா தீவுக்கு குடும்பதோடு சென்றிருந்தோம். முதல் நாள் நள்ளிரவு சுங்கைப்பட்டாணியிருந்து புறப்பட்டோம். நள்ளிரவு கார் பயணத்தில் எனக்கு மிகுந்த ஒவ்வாமை உண்டு. தூக்க நேரத்தில் விடிய விடிய கார் ஓட்டுவது எவ்வளவு ஆபத்தானது என்று நினைக்கும்போது ஒவ்வாமை கூடுதலாகிவிடும்.அதிலும் கைக்குழந்தைளோடு பயணத்தை மேற்கொள்வது மனதை கலங்கடித்துவிடும். என் ஊர் சுங்கைப்பட்டாணி, மலாயா தீபகற்பத்தின் மேற்கு கடற்கரையில் அமைந்துள்ளது.திரங்காணு நேரெதிர் முனையில் கிழக்குக்கடற்கரையில் அமைந்துள்ளது. குறுக்குவெட்டாக பயணிக்கத்தோதுவாக மலைத்தொடர்களை ஊடுறுத்துச்செல்லும் அழகிய சாலைகள் போடப்பட்டுள்ளன. ஏழு மணி நேரப்பயணம். நடுவே நீண்ட தூரத்துக்கு அடர்ந்த ரம்மியமான காடுகள். காடுகளை இருப்பிடமாகக்கொண்ட பலவகை மிருகங்களையும் பார்த்துக்கொண்டே பயணிக்கும் பீதி கலந்த இன்ப அதிர்ச்சிகளோடு பயணிக்கும் அனுபவத்தை சொல்லில் அடக்க முடியாது. ஒருமுறை ஊட்டியிலிருந்து பெங்களூருக்குப்பயணம் மேற்கொள்ளும்போதும் இதுபோன்ற அனுபவம் உ...

பலிபீடம்

இந்த மனப் பேயை என்ன செய்யலாம் ஒரு எதிரியையாய் முரண்படுகிறது மனைவியாய் பிடுங்குகிறது வாலியாய் ஏழு ஆள் பலம்கொண்டு ஏதிர்க்கிறது ஆதிக்கச்சக்தியென அடிமைத்தளைகொண்டு கீழ்பணியச் செய்கிறது தழும்புகளை வருடியவாறே முயற்சியிலிருந்து சற்றும் மனம் தளராத விக்ரமாதித்தனாய் வேதாளத்தோடு மல்லுக்கு நிற்கிறது உண்மைகளை உள்ளிழுத்தவாறே உலக வங்கியென மலையாய் நிமிர்கிறது வட்டிக்காரனாய் சேகரமான பழைய பாக்கியை கேட்டுத்தொலைக்கிறது கடவுளாய் சாம்பலாய் பீனிக்ஸ் பறவையாய் காணாமற்போகாமல் குறுக்கே நடந்து நடந்து மிரட்டுகிறது கிள்ளி எரியலாமென்றால் குழந்தையாய் அலருகிறது புதைத்து கதையை முடித்துவிடலாமென்றல் கமுக்கமாய் இருந்து வேராய் கிளைபிடிக்கிறது உருவமென்றிருந்தால் கழுத்தை நெறித்து கொன்று தொலைக்கலாம் அருவமாய் அசரீரியாய் உயிர்பிடுங்கியாய் உடனிருந்தே கொன்றுகொண்டே இருக்க்கிறது. கோ.புண்ணியவான்.

கண்டடைதலின் குரூரங்களும் - கட்டுமான உடைப்புகளும்

கோ.புண்ணியவான் சமீபத்திய மலேசியக் கவிதைகளை முன்வைத்து தன்னிச்சையாய் முகப்பருக்களைப் தேடிப்போகும் கைவிரல்களைப்போல கவிதாமனங்களிலிருந்து வெளியேற வழி தேடிக்கொண்டே இருக்கிறது கவிதை. இது ஒரு இனிய நோய் காதலைப்போல. மௌனம் ஏழாவது இதழ் கைகளில் விழுந்து மனத்தை தாலாட்டியபோது அதன் பிரசவ வலியின் ரத்த வாடையிலிருந்து எளிதில் தப்பித்துவிட முடியவில்லை. என்ன தான் தேவா அதன் தாயாக இருந்தாலும், கவிதை தாய்மார்களுக்கும் அதன் வலி நீட்சிகாண்கிறது. இயல்பாகவே ஒரு சிற்றிதழ் பிறக்கிறதென்றால் அதன் ஆயுட்காலம் அப்போதே நிர்ணயிக்கப்பட்டுவிடுகிறது. பரந்த வாசக பரப்பைக்கொண்ட தமிழ் நாட்டிலேயே சிற்றிதழ்களின் வாழ்நாட்கள் குறை ஆயுளை எதிர்நோக்கும்போது, இங்கே சொல்லவே வேண்டியதில்லை. சொற்ப வாசகர்களிலும் சில அற்ப வாசகர்களிடம் எப்படித் தாக்குப்பிடிக்கும் என்பது மனதை நெருடியாவாறு இருக்கிறது. கவிதைகள் வாங்கும் சக்தி அருகிப்போய்க்கொண்டிருக்கும் நிலப்பகுதியில் -கவிதையென்றால் கசப்பானது என்று பதிவான பொதுப்புத்திக்கு இதனை பந்தி வைப்பது எவ்வளவு பைத்தியக்காரத்தனம் என்று மௌனம் கைகளில் வந்து விழுந்தோறும் கவலையில் மனம் தோய்ந்துவிடுகிறது. பணமோ...

கதவுகள் தாழிடப்பட்டிருக்கின்றன

கோ.புண்ணியவான் ராணியின் அப்பா ஆலமர முனீஸ்வரர் ஆலயத்துக்கு நேந்துவிட்ட கடா ஆடு, முனியம்மா வீட்டுக்கு கொல்லைப்புறம் மேய்ந்து கொண்டிருந்தது.போன டிஸம்பர் மாதம் எங்கோ மலாய் கம்பத்திலிருந்து, அதன் சொந்தக்காரன் சொன்ன கிரயத்துக்கே வாங்கிவந்து, இப்போது கொழு கொழுவென்று வளர்ந்து சாமிக்கு விட்டது என்ற பெருமையோடு, ‘சாமி குத்தமாகிவிடுமே’ என்று,யார் தொந்தரவுக்கும் ஆளாகாமல் சாவகாசமாய் சுற்றிக்கொண்டிருந்தது.ராணி ஆறாம் ஆண்டு அரசாங்க சோதனையில் ஏழு ஏ பெற முனீஸ்வரரின் கிருபை கிட்ட, நெருங்கிய உற்றார் உறவினரை அழைத்து, நல்ல நேரம் பார்த்து, மருதமுத்து பூசாரியை வைத்து, செய்ய வேண்டிய சடங்கு பூஜை புனஸ்காரமெல்லாம் செய்து, அதனை முனீஸ்வரனுக்கே தண்ணீர் தெளித்து விடப்பட்டது.அன்றிலிருந்து அந்த ஆடு தன்னிஷ்டம்போல் சுற்றிக்கொண்டிருந்தது. ....................................................... ஓய்வு நேரம் முடிய இன்னும் பத்து நிமிடங்களே பாக்கியிருந்தன.கொடுத்த இருபது நிமிடத்தில் கென்டினில் வரிசைப்பிடித்து நின்று வாங்கிச்சாப்பிடுவதற்குள் பத்து பதினோரு நிமிடங்கள் கடந்துபோய்விடுகின்றது.எஞ்சிய நேரத்தில்தான் கிளித்...

எனக்குத்தெரியாமலே எனக்குள்ளிருந்து என்னை

என்னை அடையாளப்படுத்தும் விதமாக என் இவன் நட்ட மரங்கள் நிமிர்ந்துவிட்டன இவன் நடும்போது குனிந்தவன் இன்னும் நிமிரவே இல்லை என்ற கவிதை எழுபதுகளின் இறுதியில் எழுதப்பட்ட கவிதை, முன்னிலும் உயிர்ப்போடு இயங்கி வருவது பெருமையின் நிழலாக பின்தெடர்ந்தாலும், அந்த நிழலே ஏதோ ஒர் உருவமாய் என்னைத்தொடர்வது போன்ற பிரம்மையால் நான் சிறுமையடையவும் செய்கிறேன். அக்கவிதை என்னுடைய ஐ டி என்கின்றனர் பலர். இது செவ்வியல் இலக்கியம் என்கிறார் டாக்டர் கார்த்திகேசு. முன்பின் அறியா ஒருவர் பினாங்கு பெர்ரியில் என்னைப்பார்த்தவாறு இருந்து பின்னர் தயங்கித்தயங்கி என்னை நெருங்கி, “நீங்கள் புண்ணியவானா? இவன் நட்ட மரங்கள் கவிதையை நீங்கள்தானே எழுதினீர்கள்,” என உணர்ச்சிவசத்தால் என் கைகளைப்பிடித்துக்கொண்டார்.(அப்போது அவர் பொன்னாடை வைத்திருக்கிறாரா என்று நோட்டமிட்டேன்) இப்படிச் சில நிகழ்வுகள். பல பிரபல எழுத்தாளர்களுக்கும் ஓரிரு படைப்புகள்தான் அவர்களை நினைவு கொள்ள வைக்கின்றன என்றார் பேராசிரியர், சாகித்திய அக்காதமி உச்சமன்ற உறுப்பினர் இரா மோகன். உதாரணத்துக்குக் கலாப்பிரியா எழுதிய நீ அழகாய் இல்லாததால் எனக்குத் தங்கையானாய் ...

மௌன வதம்

நான் வாங்கிய கடனிலிருந்தும் அவன் கொடுத்த கடனிலிருந்தும் நட்பை முறிக்க முனையாத காரணங்களால் வெற்று வார்த்தைகளின் கோலமாகிறது இருவர் சந்திப்பும் சொற்களின் இடைவெளியே விரிகிற மௌனம் அதனைப்பற்றியே சிந்தித்தவாறு

சாமி கண்ண குத்திடுச்சு

போன ஞாயிற்றுக்கிழமை கோயில் கூட்டத்தின் போது சலசலப்பு கூடியிருந்ததது. பதினெட்டாம் கட்டை கோய்ந்தசாமியைக் இந்தமுறை கரகப்பூசாரியாய் கூப்பிடலாமென்று தலைவர் சொன்னார். சேரா எஸ்டேட் மாரியம்மன் கோயில் தீமிதியை நல்லபடியா நடத்திக்கொடுத்தார்.பேசிய தொகைக்கு மேல அஞ்சி காசுகூட வாங்கலன்னு சேரா கோயில் தலைவர் சொன்னதாக தலைவர் சிபாரிசு செய்தார். “கரைக்டா டயத்துக்கு வந்திடுவார்,கொற வக்காம செஞ்சி முடிச்சிட்ட பிறகுதான் தொகையைக்கேப்பார்,” என்று மேலும் சொன்னார் தலைவர். “ வருஷா வருஷம் பாரிட் புந்தார்லேர்ந்து சாமிக்கண்ணு கரகப்பூசாரியத்தான கூப்பிடுவோம்.அவருக்கிட்ட என்னா கொறைய கண்டாரு தலைவரு? சொல்லட்டும்.ஏன் திடீர் பல்டி தலைவரே”.பக்கத்தில் அமர்ந்திருந்த காளிமுத்து அதற்கு ஆமோதிப்பதைப்போல் தலையை ஆட்டினார். “ மொத நாளு ஒபயம்,எல்லக்கட்டு,தீமிதி அன்னிக்குள்ள சாங்கியம் ,மறுநா சாமி ஊர்வலம், அப்புறம் மூனாநாளு இடும்பன் பூச எல்லாத்துக்கும் சேத்து அவரு பேசன தொக முன்னூத்து அம்பது வெள்ளி.அட்வான்ஸ் நூறு வெள்ளிய பேசி முடிக்கும்போது கண்டிசனா அதுக்கு மேக்கொண்டு காசு கொடுக்க முடியாது, கமிட்டியில முடிவெடுத்தாச்சின்னு சொல்லிட்டு...