Skip to main content

Posts

தாயுமான மண்

குழந்தைகளுடனான ஓர் உல்லாசப்பயணத்தில் கே.எல்.ஐ.ஏ விமான நிலைய வழவழப்பான மொசைக் தரையில் கால் நனைத்து ஈரக்காற்றின் இதம் சுமந்து புத்ரா ஜயா பிரம்மாண்ட புராதனப்புதுமையில் சுயம் மறந்து பெட்றோனாஸ் இரட்டைக் கோபுரத்தை அண்ணாந்து பார்த்து அதிசயத்துப் பொங்கி பிரவாகித்து ஏறி வானத்தைத்தொட்டு விதான விசித்திரத்தை முகத்தில் பூசி எல் ஆர் டி விரைவு ரயில் தலயுரசி ஊர்ந்து அதனுடன் பார்வையை நகர்த்தி ஆகாயமாய் உயர்ந்துபோன தாய்மண்ணை வியந்து பின்னர் சீக்ரட் ரெசப்பியில் ஐஸ் கிரீமில் நா குளித்து வெளியேறியதும் பாழடைந்த சேலையில் காதும் கழுத்தும் வெறிச்சோடி முகத்தில் களைப்புச்சோகையுடனான அடி வயிறு மீண்டுமொருமுறை கனத்துத்தொங்க இடுப்பில் இன்னொன்றுடன் சரிந்து பால்வற்றிய புட்டியை உறிஞ்சும் குழந்தையோடு எதற்காகவோ யாருக்காகவோ வெகுநேரம் காத்திருக்கும் அந்தத்தாயின் நினைவே மிஞ்சித்தேங்கியது உல்லாசப்பயணத்தில் Ko.punniavan@gmail.com ஒரு ஏழை புத்தக வியாபாரிக்குக் கடன் தராமல் அலைக்கழிக்க வைத்த முன்னால் கெடா மாநில எழுத்தாளர் சங்கத்தலைவர் பற்றிய தில்லு முல்லு தகவல் விரைவில் இடம் பெறும் எதிர்பாருங்கள...

புலவர் வேந்தர்கோனின் வரலாற்றிலிருந்து பிரிக்க முடியாத மேலும் சில பக்கங்கள் கதை 2

கோ.புண்ணியவான் கவிதை யாப்பதில் மட்டுமல்ல இன்னொரு வேலையிலும் திறமை மிக்கவர் புலவர் வேந்தர்கோன். கவிதை யாத்தலிலும் அதனைச் சந்தைப்படுத்தலிலும் உண்டாகும் பின்னடைகளைச் சமாளிக்க அவர் மீண்டும் தனது பிறப்பூருக்கே குடி பெயர்ந்து விடுவார். அவரைப் பிறப்பூரிலே பார்க்கும் நண்பர்கள் “ இது 1001வதா” என்பர். அங்கே எப்போதும் அவருக்கான வேலை காத்திருக்கும். அவருக்கு மட்டுமல்ல தொழில் நுட்பம் தெரிந்த மற்றெல்லாருக்கும் அங்கே வேலை உண்டு. நெல் மூட்டைகளை ஆலையிலிருந்து வெயிலில் காய வைக்கும் களத்துக்கும், களத்திலிருந்து மீண்டும் ஆலைக்கும், ஆலையிலிருந்து ஏற்றுமதி லாரிக்கும் சுமந்து கொண்டு போவதுதான் அந்த வேலை. நெல் மூட்டைகளை சுமப்பது எளிதானதுதான் ஆனால் நெல் மூடைகளைவிட அரிசி மூடைகளைச்சுமப்பதுதான் சிரமம். இரட்டிப்பு பாரம். 60 கிலோ வரை மிரட்டும். அறுபது கிலோவுக்கும் குறைவான எடையுள்ள மனிதர்கள், அதனை லாவகமாக தோளில் ஏற்றி சுமை அழுத்தாத வண்ணம் தூக்கி நடப்பதன் தொழில் நுட்பம் தெரிந்தால்மட்டுமே அது எளிதானதாகத்தெரியும். என்னாலும் இந்தச் சுமையை தோளில் ஏற்றி சுமந்து நடக்க முடியும் என்று ஆழமறியாமல் காலை விட்டவர்கள், முதுகெ...

மாலதி தர்மலிங்கம் said

மாலதி தர்மலிங்கம் said பேரங்காடிகள் களவாடிவிட்ட நோட்டுக்களைப்போல..... இந்த வரிகளுக்கு விளக்கம் தந்தால் சிறப்பாக இருக்கும். நன்றி.
என் வலைப்பூவுக்கு வந்தமைக்கு நன்றி, கவிதையைப் புரிந்துகொள்ள்ளும் சிரமத்தால் பெரும்பாலான வாசகர்கள் கவிதைப்பக்கத்தைக் கடந்துவிடுகின்றனர். நீங்கள் ஆர்வம் காட்டியமை ஆறுதல் அளிக்கிறது. கவிதைக்கு வருவோம். பேரங்காடிகளில் நமக்குத்தேவையான பொருட்களை விற்பதோடு நில்லாமல் நமக்குத்தேவையற்ற பொருட்களையும் கவர்ச்சியாக காட்சிப்படுத்துகின்றன. அந்த கவர்ச்சியில் ஈர்க்கப்பட்ட நாம் நமக்குத் தேவையற்றது என்பதை கவனத்தில் கொள்ளாமல். புறக்கவர்ச்சியால் ஈர்க்கப்பட்டு பணம் செலவு செய்து அவற்றை வாங்கிவிடுகிறோம். நம்மை வாங்கவைக்கவே அவை கவர்ச்சியாக காட்சிப்படுத்தப்படுகின்றன. இது ஒரு வகையில் பகற்கொள்ளைதான். கவிஞன் அன்றைய அனுபவ நீட்சியைக் கவிதையாக எழுதவேண்டுமென்று நினைக்கிறான். ஆனால் வீட்டில் தன் குழந்தைகள் அவனை ஆர்வத்தோடு வரவேற்கும்போது அவன் எழுத நினைத்த கவிதை வரிகள் குழந்தைகளின் வரவேற்பால் மறந்தே போகிறான். பேரங்காடிப்பொருட்கள் அவன் பணத்தைக் களவாடிவிட்டதுபோல குழந்தைகளின் ஆர்வ நிலை அவன் கவிதையைக் ‘களவாடிவிடுகிறது’ என் வலைப்பூவை உங்கள் ஆசிரியர்களிடம் அறிமுகம் செய்யுங்கள். எழுத்தாளர் ஒருவர் ஒரு ஏழை புத்தக வியா...

களவாடப்பட்டுவிட்டன கவிதைகளும்

இலக்கை நோக்கிய நெடுஞ்சாலை பயணத்தில் கைக்குழந்தையுடன் காத்திருந்து பின்னுக்கு ஓடி மறைந்தும் கவிதையாய் மீள்பிரசன்னமாகிறாள் பேருந்துக்காக காத்திருக்கும் தருணத்திலும் இரு கால்களையும் விபத்தாலோ வியாதியாலோ இழந்த முகத்தோடு அன்னாந்து கையேந்தும் அவன் இடுப்புக்குக்கீழ் கால்களாய் கவிதைகள் முளைத்தன வியிற்றை நிரப்பிக்கொண்ட புத்தி சுவாதீனமற்ற இளம் தாயொருத்தி சிக்குப்பிடித்த தலையோடும் புராதன உடையோடும் தன்னிலை மறந்து திரிகிறாள் வாகனங்கள் சரசரக்கும் மேய்ன் சாலையில் அப்போதும் ஒர் கவிதை குழந்தையை மையமிட்டிருந்தது பள்ளிச்சீருடையோடு பையன் ஒருவன் தள்ளிக்கொண்டுவந்த மாணவி ஒலித்து வைத்திருந்த புத்தகப்பையைத்தேடி அலைந்தது இன்னுமொரு கவிதை பேரங்காடிப்பையோடு வாசலைதொட்ட வேளையில் ஓடிவந்த குழந்தை முகம்பார்த்ததும் மையமிட்டிருந்த கவிதைகள் சப்தமின்றி கசிந்து போய்விட்டன பேரங்காடிகள் களவாடிவிட்ட நோட்டுக்களைப்போல. கோ.புண்ணியவான். Ko.punniavan@gmail.com

பொறுமையாக இருங்கள்

நீங்கள் எதிர்பார்க்கும் என் பதில்கள் விரைவில் அரங்கேறும் தவணை முறையில் மகனின் திருமண வேலையாக இருக்கிறேன் முடிந்ததும் சந்திப்பேன்

புதிர்

எப்போதுமே பிறகு சொல்கிறேன் என்ற தலைப்புச்செய்தியின் புதிர்த்தன்மையோடு புறப்பட்டுவிடுகிறார் ஊகித்தறியா ஆர்வத்தில் கோடிட்ட இடங்களை நிரப்பிய வண்ணம் கழிகிறது பொழுது அவரின் பிறகு சொல்கிறேன் ஒற்றைசெய்தியைத்தாண்டி என்னிடம் நிறையவே சேர்ந்துவிடுகின்றன புதிர்கள். கோ.புண்ணியவான். மலேசியா Ko.punniavan@gmail.com