Skip to main content

Posts

ஆணாதிக்கம் பெண்ணடிமை என்ற மாயை

                                 ஜெயமோகனோடு சுவாமி பிரம்மானந்தா அவர்கள் (அச்சில் இருக்கும் என் சிறுகதைத் தொகுப்புக்கு சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி வழங்கிய முன்னுரை இது.) உலகில் இருவர் சேர்ந்திருப்பது மிகச்சிரமமான காரியம். ஏனெனில் அடிப்பபடையில் மனிதன் தனித்தன்மை வாய்ந்தவன். உலகிலேயே சுதந்திர இச்சையுடன் பரிணாம வளர்ச்சி பெற்றவன் மனிதன் மட்டுமே. அவன் மற்றவர்களோடு பொருந்தி வாழ முடியாததற்கு காரணமே அவன் பகுத்தறிவு உள்ளவன் என்பதாலேயே. என்னதான் இயற்கையான உடற் தேவை காரணமாக அவன் கூடி வாழ விரும்பினாலும் ஏதோ ஒன்று அவனுக்குள்ளே இருந்து அவனை அந்நியப்படுத்திக்கொண்டே இருக்கிறது. தன் உணர்ச்சியின் உச்ச நிலையைப் பகிர்ந்துகொள்ள உறவுகள் தேவைப்பட்டாலும் அந்த உறவுகளால் ஏற்படும் உரசல்களால் மீண்டும் மீண்டும் அந்நியபட்டே போகிறான். கொந்தளிப்புக்களையும் மனவலியையும் பகிர்ந்துகொள்ள சக மனிதர்கள் தேவைபட்டாலும் அவர்கள் மேல் உள்ள ஆழ்ந்த அவநம்பிக்கை மீண்டும் மீண்...

தொடர் 6. பனிப்பொழிவில் 10 நாட்கள்

        சண்டிகார் ஜாஹிர் ஹுசின் ரோஜா நந்தவனத்தில்  6.       மறுநாள் காலையில் சண்டிகாரில் பிரசித்திபெற்ற ரோஜா நந்தவனத்துக்கு அழைத்துச்சென்றார். அது ஒரு உல்லாசப் பூங்கா. முன்னால் இந்திய அதிபர் சாஹிர் உசேன் நினைவாக எழுப்பப்பட்ட பூந்தோட்டம் அது. மலர்களில் ரோஜாவுக்கு எப்போதுமே மாறாத மௌசு உண்டு. ரோஜாத்தோட்டம் தானே என்று சாதாரணமாக எடுத்துக்கொண்ட எனக்கு ஒரு பிரமிப்பு காத்திருந்தது. ஏறத்தாழ நாற்பத்திரண்டு ஏக்கர் நிலத்தில் வெறும் ரோஜா வகைகளே நடப்பட்டிருந்தன. 1700 வகை ரோஜாப்பூக்கள் என்று விளக்கப்பலகையில் எழுதியிருந்தது. 1700 வகையில் நான் ஒரு மூன்று வகை ரோஜாவைக்கூட என் வாழ்நாளில்  பார்த்திருக்கமாட்டேன். பல வண்ணங்களில் பூத்துக்கிடந்தன. சிவப்பில் , இளஞ்சிவப்பில், ரத்தச்சிவப்பில். ஊதாவில் மஞ்சளில் வெள்ளையில், பழுப்பில் என் சொல்லி விளக்க முடியாத பல வண்ணத்தில் பல வடிவத்திலும் நம்மை ஈர்த்தன. சில நம் இரண்டு கைகளையும் விரித்தால் வரும் அளவில் பூக்கள் விரிந்து சிரித்தன. அதனைக் காவல்காக்க பராமறிக்க சில பணியாட்கள...

தொடர் 5. பனிப்பொழிவில் 10 நாட்கள்

     in Chandigar hotel, and in simla 5.     இங்குள்ள இயற்கை வளத்துக்காகவும், கனி வளத்துக்காகவும்தான் , இந்தியாவை வளைத்துப்போட அரசு நிர்மாணித்து மக்களை அடிமைப் படுத்தினான். எவ்வளவு போராட்டம். ? எத்தனை மரணம்? எவ்வளவு துப்பாக்கிப் பிரயோகம்? நாட்டை ஒரே ரத்தக்களரியாக்கிவிட்டுத்தான் சென்றான். வெள்ளைக்காரனுக்கு அஞ்சாமல் நிமிர்ந்து திமிறோடு சண்டை யிட்ட பஞ்சாப் பகத் சிங்கை மறக்கமுடியுமா? அவர் பிறந்த மாநிலத்தில் அப்போது நான் இருக்கிறேன் என்பதே உடல், உள்ளம் சிலிர்க்கும் தருணம். அவர் போரிட்ட இடங்களை என் கால்களும் மிதிக்கப் போகிறது என்பதில்  என் நீண்ட நாள் கனவு. அவர் வெள்ளையர்களால் தூக்கிலடப்படுவதைப் பற்றி காந்தி வாய்த்திறக்கவில்லை, என்ற செய்தியை நான் ஜெயமோகனின் ‘இன்றைய காந்தி’ யைப்படித்த போது சற்று கோபம் வந்தது. காந்தி பிரிட்டிசாருக்கு எதிராக ரத்தம் சிந்தாத அகிம்சை வழியை பின்பற்றி யிருந்தவர். தன் கொள்கைக்குச் சவால் வரும்போதெல்லாம் சத்யாகிரகத்தைக் கடைபிடித்து   மக்களை தன் வழிக்குக்கொண்டு வந்தார். ஆனால் பகத் சிங்குக்கு அதில் விருப்பமில்லை....

பதின்மத்தில்

                                            Dr.puspha -president of EWRF SUNGAI PETANI    கடந்த 17ம் தேதி வெள்ளிக்கிழமை காலை ஏழு மணிக்கே என் உடல வறுத்தி தூக்கத்தைக் கலைத்துக்கொள்ள வேண்டியதாயிற்று. பணி ஓய்வு பெற்றதிலிருந்து தாமதமாக எழுவது பழக்கமாகிப்போக நிர்ப்பந்தங்களின் நெருக்குதலில் வழக்கத்துக்கு மாறாக அதிகாலை துயிலெழல் நிகழ்ந்துவிட்டிருந்தது. எனக்கு மணி பின்னிரவு மூன்றிலிருந்துதான் தூக்கமே பிடிக்க ஆரம்பிக்கும். வாசித்துவிட்டு இணைய உலகில் அலைந்து திரிந்துவிட்டுப் போய்ப்படுக்கும்போது மணி இரண்டரையாகிவிடுகிறது. என்ன செய்வது உடலின் தேவை உடலே பூர்த்திசெய்துகொள்கிறது.. காலை 7.00 மணிக்கு எழுந்து 7.45க்கெல்லாம் பெர்பாடானான் தமிழ்ப்பள்ளியை அடைந்தேன். டாக்டர் புஷ்பா என்னை காலை வணக்கத்தோடு கைகுலுக்கி வரவேற்றார். என்னை அவரும் அவரை நானும் முதல் முதலாகச் சந்திக்கிற அந்தக்கா...

பனிப்பொழிவில் 10 நாட்கள்

சிம்லா மலை உச்சி குப்ரி மஹாசு மலை உச்சி இது . மேலே பஞ்சாப் போகும் பாதை நெடிகிலும் உள்ள் விக்ஸ் மரங்கள். ஆக மேலே குப்ரியின் சிவன் கோயில்.குடும்ப சகிதமாய் காட்சி தருகிறார்.  சிம்லா மலை உச்சி குப்ரியில், பின்னால் தெரிவது இமய மலைத்தொடர் 4.      ஓரிடத்தில் இறங்கி கொறிப்பதற்கு கடலைப் வாஙகப்போனேன். கடலையோடு பொறி, தக்காலித்துண்டு, பெப்பர் மிளகாய்த்துண்டு, பருப்பு கலந்து மிளகுத்தூளையும் மிளகாய்த்தூளையும் கலந்து கொடுத்தார்கள். சாப்பிட்டுப்பார்த்தேன். அப்படியொன்றும் அலாதி சுவையில்லை. சுங்கைபட்டாணி துளசி ராமன் மிக்சருக்கு ஈடாகாது. குளிருக்குப் பொருத்தமான உணவாகிறது அங்குள்ள மக்களுக்கு. நிறைய பேர் நின்றுகொண்டு அங்கேயே சுவைத்துக்கொண்டிருந்தனர்.        உறை பனி காலம் தொடங்கப் போவதை ஒரிரு தடயங்களைக் காண முடிந்தது. ஓரிடத்தில் கொட்டியிருந்த  ஒரு பிடி ஐஸ் துகல்களைக் மருமகன் கொண்டு வந்தார். இன்னும் ஓரிரு தினங்களில் உறை பனியைக் காணமுடியும் போலும். உறை பனியைக்கான நாம் மன்னாடி போகலாமென்றார் தோமஸ்.      ...

பனிப்பொழிவில் 10 நாட்கள்

சிம்லா விடுதியில், சிமலா மலை உச்சியில் 3.    எங்களுக்கு மணி 11க்குதான் விடிந்தது.      லோபியில் கிடந்த ஆங்கிலப் பத்திரிகையில் சிம்லாவில் குளிர் ஐந்து செல்சியஸ் என்று போட்டிருந்தது. இத்தவனையில் இது குறைந்தபட்ச குளிர் என்று எழ்தியிருந்தது. இன்னும் சில தினங்களில் குளிர் மைனஸ் செல்சியஸைத்தொடும் என்றும் கணித்திருந்தது. தடித்த குளிராடை அணிந்தால் மட்டுமே குளிரைச் சாமளிக்க முடியும். எங்களை சிம்லா குளிர் ஒன்றும் செய்து விட முடியாது. நாங்கள் இன்று சாயங்காலம் சிம்லாவை விட்டு இறங்கி விடுவோமே!      அன்று காலை பசியாறிக்கொண்டிருக்கும்போது இருவர் உள்ளே நுழைந்தனர். பார்ப்பதற்குத் தமிழர் போலவே இருந்தனர். வடநாட்டுக்காரர்களாக இருக்குமோ என்று பேசத் தயங்கினேன். பின்னர் அவர்கள் உரையாடியதைக் கேட்டதும்தான் தெரிந்தது அது மலேசியத் தமிழ் என்று. மலேசியத் தமிழ் என்று எப்படிக்கண்டுபிடிப்பது? பேச்சின் ஊடே மலாய் வார்த்தை புகுந்துவிடும். உச்சரிப்பு அழுத்தமாய் இருக்காது. தமிழ் நாட்டில் காணப்படும் வட்டார வழக்கு இருக்காது. ஒரே மாதிரித் தமிழ் பேசுகிறோம். thr...

2.பனிப்பொழிவில் 10 நாட்கள்

சிம்லாவுக்குப் போகும் வழியிலும் சிம்லா விடுதியிலும், சிம்லா   மலையுச்சியிலும் 2.  மருமகன் முன்சீட்டில் இடம்பிடித்து அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தார். இந்த சாலையில் அவருக்கு தூக்கம் எப்படித்தான் வருகிறது என்று தெரியவில்லை. கொடுத்து வைத்த மனிதன். சாய்ந்தவுடன் தூக்கம் பிடித்துவிடுகிறது. என்னைச் சொல்லுங்கள் தூக்கத்து முன்னால் பயணத் துக்கம் முந்திக்கொள்கிறது. மருமகன் தூங்கட்டும் எழுந்ததும் காரை ஓட்டசொல்லலாம் என்று முடிவெடுத்திருந்தேன்.    தோமஸ் இறங்கி தேநீர் அருந்தச் சென்றார். சாலை ஒரக் கடை. கடை நிறைய பயணிகள் இருந்தனர். சூடான தேனீர், நான், சப்பாத்தி எனப் பலவகைப் பலகாரங்கள் இருந்தன. எனக்கு எதையும் சாப்பிடத் தோணவில்லை.    அதற்குள் மருமகன் தூக்கம் கலைந்து வெளியே வந்தார். தேநீர் சாப்பிடலாமென்றார். “நீங்கள் தேநீர் குடிச்சிட்டு வந்து கார ஒட்டுங்க. தோமஸால முடியாது. பயமா இருக்கு என்றேன்”     “ஓட்டலாமே அதுக்கென்ன? தோமஸ் ஒத்துக்கணுமே!” என்றார்.     தோமஸ் வந்ததும் கேட்டேன்.     “என் லைஸன்ஸ பிடிங்கிடுவாணுங்க,” என்றார்...