Skip to main content

Posts

Cry... my beloved country! Down with bullies & cowards!

The heart of a gentle person - Dr Jeyakumar   I am writing this urgent letter to all Malaysians to be aware of the suffering that all the 6 PSM members are going thru. Isolated from loved ones and family they will have to beg to go to Toilet, or shave or bathe and hence the mental torture starts .I am writing on behalf of Dr Jeyakumar as I am a part of his family. I hope and trust that the family members of the others will start writing too to urge people not to stand for the utterly stupid charges against the 6 .If in fact there was a T shirt or poster of " former " CPM leader Chin Peng , how is it wrong . ??? The National Libraries and most libraries in Universities have many books on communism for reference and reading. There are even books with his pictures as well as other involved in the struggle at that time. Is Hishamuddin going to remove all reference books in all the libraries?? Is he going to have all the Librarians arrested or having reference material on c...

7.ஆக்டோபஸ் கவிதைகளும் அடர்ந்த கவித்துவமும்

 நிழலாய்ப் பின்தொடரும் சாதிமை என்ற பேய் மூன்றாண்டுகளுக்கு முன்னர் என் நண்பனின் மகனுக்குத் திருமணம் நிச்சயமாகியிருந்தது. காதல் திருமணம். எல்லாருக்கும் அழைப்பிதழ் கொடுத்து முடித்திருந்தான். அப்போது அவன் முகம் அன்றலர்ந்த தாமரையாய் பூத்திருந்தது. தான் விரும்பிய பெண்ணே தன் மணவாழ்க்கையை அலங்கரிக்கப்போகிறாள் என்ற மகிழ்ச்சியில் அவன் உச்சாணிக்கொம்பில் இருந்தான். நான் மட்டும் சிங்கப்பூரில் நடக்கும் திருமணத்துப் போவதற்குப் பேருந்து டிக்கெட் எடுத்து வைத்துக்கொண்டேன். திருமணத்துக்கு இன்னும் இரண்டு நாட்களே எஞ்சியிருந்த ஒரு இரவுப்பொழுதில் எங்களுக்கு மாப்பிள்ளையின் தந்தையிடமிருந்து ஒரு அழைப்பு வந்திருந்தது. அன்று அவர் கூறிய தகவல் தந்த அதிர்ச்சியிலிருந்து வெகு நாட்கள் என்னால் மீள முடியவில்லை. திருமணம் நிறுத்தப்பட்டுவிட்டது என்ற செய்திதான் அது. என்ன காரணம் என்று வினவினேன். பெண் தாழ்ந்த சாதியைச் சேர்ந்தவள் என்றார். “இதற்குப் பையன் என்ன சொன்னான், காதல் திருமணம்தானே?” என்று கேட்டேன். “பையன் மனச அப்படி இப்படின்னு மாத்திட்டோம்,” என்றார். “பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவிக்கிலியா?” என்றேன். “என்ன எதிர்ப...

பிசு பிசுத்துப் போகும் வெற்றுப் போராட்டம்!

                                  13 வது மௌன வெளியீட்டுக்காக  மலாக்கா வரை சென்று வந்ததில் களைப்பு இன்னும் தீரவில்லை. பயணக் களைப்பு தூங்கி எழுந்தால் போய்விடும். இது தூங்கி எழுந்தால் கலைந்து போகும் களைப்பல்ல. நவீனக் கவிதைகள் பல கவிஞர்களிடமே போய்ச் சேராத களைப்பு. கவிதை ஆளுமைகளை அடையாளம் காணமுடியாத களைப்பு , போட்டிகளினால் நல்ல கவிதைகளைத் தேர்வு செய்ய முடியாத ஆதங்கக் குரலில் எழுந்த களைப்பு என ஏகப்பட்ட களைப்புகளின் ஒட்டுமொத்த fatique (அதீத களைப்பு) இது.        நவீனக் கவிதை எழுதுபவர்களில் பா. அ. சிவம் , பாலமுருகன் , தேவராஜன், ரிவேகா இருந்தது ஆறுதலாக இருந்தது. நான் நவீனக் கவிஞனா (கவிஞர் என்ற சொல்லே எனக்குப் பிடிக்கல!) என்பதில் எனக்கு எப்போதுமே பலத்த சந்தேகம் உண்டு. சை. பீரையும், பச்சை பாலனையும் நான் கண்டிப்பாக நவீன கவிஞர் லிஸ்டில் சேர்க்க மாட்டேன். (நன்றாக கவிதை யாப்பது வேறு விஷயம்). இவர்களோடு மரபுக் கவிதை...

ஆக்டோபஸ் கவிதைகளும் , அடர்ந்த கவித்துவமும்

5. நினைவைத் தொடரும் தீராத நிழல்          நான் பள்ளியில் இருந்த சமயம் ஒரு முறை எனக்கொரு அபூர்வமான தொலை பேசி அழைப்பு வந்தது. அலுவலகத்தில் எனக்கு வரும் அழைப்புகள்  அநேகமாக வேலை சம்பந்தப்படதாகவே இருக்கும். மேலதிகாரிகள், சக தலைமை ஆசிரியர்கள் , பெற்றோர்கள் என இப்படிப்பட்ட வாடிக்கையாளர்களிடமிருந்தே  பள்ளி தொலைபேசியை ரீங்காரமிடச் செய்யும்  . ஆனால் , அன்று என்னைத் திகைப்புற வைத்த அழைப்பு ஒரு பெண்ணினுடையது. என் பதின்ம வயதில் என்னைக்கிரங்கடித்து , என்னை திக்குமுக்காடச்செய்து , என்னை நடைப்பிணமாக உலவவிட்டு , பின்னர் என் கைக்குக் கிட்டாது போன அதே பெண்ணினுடைய அழைப்பு. அவள் தன் பெயரைச் சொன்ன மாத்திரத்தில் என் ஞாபகக்கிடங்கு எங்கும் அலைந்து தேடாமல் பட்டென்று அவளை என் மனக்கண்முன்  கொண்டு வந்து நிறுத்தியிருந்தது. இத்தனைக்கும் அவளைப்பார்த்து 30 ஆண்டுகளுக்கு மேல் கடந்திருந்தது. முப்பது ஆண்டுகள் கடந்தாலும் அவளை அதிசயாமாய் அதே பதின்மவயதுப்  தோற்றத்தையே காட்சிப்படுதிக்கொண்டிருந்தது நினைவு! அவளின் அப்போதைய ஐம்பது வயது மதிக்கத்தக்க பிம்பத்தைக்கூ...

ஆக்டோபஸ் கவிதைகளும் அடர்ந்த கவித்துவமும்

5. மனிதரை நாணிக்குறுக வைக்கும் மரங்கள்             என் ஒன்றரை வயதுப்பேரன் நடக்கப் பழகியதிலிருந்து என்னை வீட்டுக்கு வெளியே இழுக்கும் தந்திரம் தெரிந்திருந்தான். அந்தத் தந்திரம் எனக்குச் சுகமானது. முதலில் அவன் வாசலுக்கு வெளியே போய் நின்றுகொண்டு என்னை தாத்தா தாத்தா என்று உரக்கக்கூவி அழைப்பான். இரண்டு முறைக்கப்புறம் அவன் குரலில் காத்திரம் இருக்கும். அவன் அழைப்பில் வசீகரிக்கப்பட்டவனாய் மெல்ல வாசலுக்குச் செல்வேன். வீட்டில் அத்தனை பேர் இரூக்க என்னைத் தேர்வு செய்யும் காரணம் என்ன? குழந்தைகள் எந்தக் கல்லூரியில் கற்றுக்கொள்கின்றன உளவியலை? நான் அவனை அழைத்துச்செல்வதில் முன்னோடியாக இருந்திருக்கிறேன். பரந்த வெளி ஊட்டும் சுகந்தம் அவனையும் ஆட்கொண்டிருக்கிறது.        நான் வெளியே சென்றதும், என் செருப்பைக்கொண்டுவந்து, அதனைச் சேர்த்து வைத்து , அதை காட்டிப் போடச் சொல்வான். அத்தனை பேரின் செருப்பும் கலந்திருக்க , ஒரு முறைகூட தவறுதலாக எடுக்காமல் என்னுடையதைத் தேர்வு செய்யும் அறிவு அவனுக்குக் கிட்டியதன் மர்மம் புரியவில்லை. குழ...

ஆக்டோபஸ் கவிதைகளும் அடர்ந்த கவித்துவமும்

4. உயிரினங்களுடனான  உன்னதத் தருணங்கள்.                   நான் லங்காவியில் இருந்த சமயம் என் மகன் நான்காம் ஆண்டில் என் பள்ளியிலேயே படித்து வந்தான். எல்லாச் சிறார்களுக்கும் இருக்கும் பிராணிகளின் மேலான ஈர்ப்பு இவனுக்கும் இருந்தது. ஒரு முறை ஒரு மணிப்புறாவைப்பிடித்து வந்து ஒரு கூட்டில் அடைத்துவைத்து பாதுகாக்க ஆரம்பித்தான். வானாளவிப்பறந்த பறவைகளை அடைத்துவைப்பது பாவச்செயல். அது அடிமைப் படுத்துவதற்கு ஈடானது என்று சொன்னேன். “இல்லாப்பா, கொஞ்ச நாள் வெளிய விட்ருவன், “ என்று எனக்குச் சமாதானம் சொல்லி வந்தான். கொஞ்ச நாள் கழித்து விடுவதற்குப் பதில் இப்போதே விட்ரலாம்ல’” என்றேன். அவனுக்கு அதில் திருப்தி இல்லை. அதனை மிக அருகில் இருந்து பார்க்கும் பரவசத்தில் அவன் இருந்தான். அகன்ற வெளியில் கைக்குக்கிடைக்காமல் பறந்து திறிந்ததை அருகில் வைத்துப் பார்க்கும் அவன் விருப்பத்துக்கு இணங்கினேன். கொஞ்ச நாள் அது வெளியில் பறந்து செல்லும் முயற்சியில் இறக்கை¨யைப் படபடத்துக்கொண்டிருந்தது. ஓரிரு வாரங்களுக்குப்பிறகு கொஞ்சம் அடங்கப் பழகிக்கொண்ட...

அக்டோபஸ் கவிதைகளும் அடர்ந்த கவித்துவமும்

3. ஆயுதங்கள் தின்று விட்ட ஆல்பங்கள்         போர்கள் விவரிக்க முடியாத சோதனைகள் நிறைந்தது. சங்கப்பாடலொன்றில் போர் நியாய முறைகளை எடுத்துச்சொல்கிறது. போரில் சம்பந்தபடாதவர்களைப் பாதிக்கக்கூடாது என்பதைக் கறாரான கொள்கையாகவே முன்வைக்கிறது. பெண்டிர் , குழந்தைகள், வாழ்வு தரும் மாடுகள், கோயில்கள் இவற்றுக்குப் போரால் சேதம் நேர்ந்துவிடக்கூடாது என்ற கரிசனத்தை முன்வைக்கிறது. அன்று அவர்கள் அதனைக்கடைபிடித்தார்கள். போரானலும் மனிதாபிமானப் பண்புகளைக் காட்டினார்கள். இன்று என்ன நடக்கிறது. எம் 16 ரக தானியங்கி (ஆட்டோமேட்டிக்) துப்பாக்கிகள் சகட்டு மேனிக்கு பொதுமக்களை சுட்டுத் தள்ளுகிறது. பள்ளிகள் கோயில்கள் எதையும் விட்டு வைப்பதில்லை. ஏவுகனைகள் மக்கள் குடியிருப்புப்பகுதிகளை குறிவைத்து தாக்குகிறது. கையெறிகுண்டுகள் கைக்குழந்தைகளையும் விடுவதில்லை. கன்னிவெடிகள் கால்களைபறித்து வாழ்நாளை முடமாக்கிவிடுகிறது. போர் விமானத்திலிருந்து வீசப்படும் குண்டுகள் விவசாய நிலத்தை ஊணமாக்குகிறது. ஹிரோசிமா நாகசாக்கி மீது வீசப்பட்ட ரசாயண குண்டு செய்த வரலாறு பதிவு செய்துவைத்த பிழையை இன்று படிப்பவர்களிடமும்...