Skip to main content

Posts

எதிர்வினைகள் - பிறிதொருவர் பார்வையில்

கோ . புண்ணியவானின் சமீபத்திய சிறுகதைத் தொகுப்பிலுள்ள கதைகளிப்பற்றிய ஒரு பார்வை . புண்ணியவானுக்கு நன்றாகக் கதைச் சொல்ல வருகிறது . இவரது கதைகளுடன் எனக்குள்ள இருபது வருடப் பரீட்சயத்தில் கண்டடைந்த முடிவு   இது . ஒரு கதைச் சொல்லிக்கு சரியான விஷயத்தை தேர்வு செய்வது மட்டும் போதாது ; சரியாக அதைச் சொல்லவும் தெரிந்திருக்க வேண்டும் . அவன் எழுத்தாளனாகப் பரிணமளிப்பது அப்போதுதான் சாத்தியமாகிறது . கோ . புவுக்கு இந்தச் சமுதாயத்தைப் பற்றிய ஒரு தீர்க்கமான பார்வை உள்ளது . அதன் இறுக்கங்களையும் , உள்ளடுக்குகளில்   மறைந்து கொண்டு மனதை ரணப்படுத்தும்   சமூகப் பலவீனங்களை வெளிச்சம் போட்டுக் காட்டும் தெளிவான சிந்தனையும் , அதற்கு ஈடான படைப்பூக்கமும் , மொழி ஆளுமையும் ஒருங்கே அமைந்துள்ளது .             எழுத்தாளன் சாதாரண விஷயங்களில்   பதுங்கிச் சொல்லும் அசாதாரணமான கணங்களை படைப்பினுள் கொண்டுவருகிறான் . இத்தொகுப்பில் உள்ள பல கதைகள்   சாதாரணமான...

நூல் விமர்சனம்: கோ.புண்ணியவானின் சமீபத்திய சிறுகதை நூலான 'எதிர்வினைகள்'

        அழியாமல் ஆடிக்கொண்டிருக்கும்  தடித்த வடுக்கள்      பல தருணங்களில்  மனம் எதற்கெதற்கோ கடந்து தவியாய்த் தவிக்கும். கோ. புண்ணியவானின் மனமும் அப்படித் தவித்துதான் பல எதிர்வலைகளை எழுப்பியுள்ளது. சமுதாயத்தில் புரையோடியிருக்கும் புண்களைத்தான் எல்லா படைப்பாளனும் நமக்குக் காட்டிக்கொண்டிருப்பார்கள். இதைத்தான் இவரும் செய்திருக்கிறார். இருப்பினும் தன் எளிய நடையில் தன்னைப் பாதித்தப் பதிவுகளை மிக நேர்த்தியாக எதிர்வினைகளாக்கியிருப்பதுவே அவருக்குள்ள தனித்துவமாகும். இத்தொகுப்பின் தலைப்பும் எதிர்வினைகள் என்றிடப்பட்டிருப்பதுவும் சிறப்பு அம்சமும்கூட. சாமிக்கண்ணு தூக்குபோட்டுக்கொள்வதும் அதனால் அவனுடைய மனைவி சாரதா அடையும் விடுதலையும்தான் கதையின் போக்கு. அவன் கொடுத்த ஆறாத் துயரங்களைக் கதையோட்டத்தினூடே அடுக்கிக்கொண்டே போகிறார். புறவாழ் மக்களின் எண்ணப் பகிர்வுகளும் புலம்பல்களும் சாவு வீட்டில் சிதறிக் கிடக்கின்றன. இதேப் போன்றுதான் ஆறுமுகம், ‘இறந்தவன் பற்றிய வாக்குமூலமும்’ கதையில் தூக்குமாட்டிக்கொள்கிறான். இருவர் பிழைப்பும் நாறிப்போனதுதான்...

ஒரு பருந்தும் பாவப்பட்ட ஜென்மமும்.

      நோக்கம்:          ஜூலை 28 காலை 9.25க்கெல்லாம் நான் வேலை செய்து ஓய்வு பெற்ற கணேசர் கலாசாலையில் இருந்தேன். அதிகாலை என்னுடைய மாமுல் மருத்துவ பரிசோதனையைச் சுங்கைப்பட்டாணி மருத்துவ மனையில் முடித்துக்கொண்டு, பசி எடுத்ததால் காலை உணவை வந்தான் மீயை சீனர் உணவகத்தில் முடித்துக்கொண்டு மனைவியை மீண்டும் வீட்டில் விட்டு விட்டு பள்ளியை நோக்கி பயணமானேன். நான் காண்ட்ரக்ட் ஆசிரியர் வேலைக்கு மனு போடுவதால் என்னுடைய கடைசி கியூ 8 பெறுவதற்கு அங்கே சென்றேன். வருகைப்பொருள்          நான் ஓய்வு பெற்று ஐந்தரை ஆண்டுகள் ஆகிவிட்டபடியால் கோப்புகளைத் தேடி கியூ எட்டை உருவி எடுக்க குமாஸ்தாவுக்கு அவகாசம் கொடுத்து மறுநாள்  அங்கு பிரசன்னமானேன். அப்பள்ளியின் அப்போதைய தலைமை ஆசிரியர் கனகம் என்னைப் பார்க்கவேண்டும் என்று குமஸ்தாவிடம் தகவல் சொல்லியிருந்ததால் கியூ எட்டைப் பெற்றுக்கொண்டு தலைமை ஆசிரியர் அறைக்கதவைத் தட்டினேன். இதற்கு முன்னர் தலைமை ஆசிரியரைப்பற்றி அங்கு பணிபுரியும் (என்னிடமும் பணி புரிந்த) ஆசிரியர்க...