நன்றி (படங்கள் வ. முனியன்) (சிங்கப்பூரில் கடந்த 28,29.30 அக்டோபரில்(2011) நடந்த உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டை முன்வைத்து) இலக்கிய வளர்ச்சியின் அடுத்த கட்ட பரிமாணத்தை அடையவும், தமிழர் புலம் பெயர்ந்த இடங்களில் இலக்கியம் சார்ந்து நடக்கும் வளர்ச்சியை அல்லது மாற்றங்களைப் பற்றித் தெரிந்துகொள்ளவும் சமீபத்தில் சிங்பப்பூர்த்தமிழ் எழுத்தாளர் சங்கம் ‘தாயகம் கடந்த தமிழ் கூட்டியது. கனடா, சிரிலங்கா, ஆஸ்திரேலியா,ஜெர்மனி,பிரான்ஸ், அமெரிக்கா பிரிட்டன் இந்தியா, சிஙக்ப்பூர், மலேசிய போன்ற நாடுகளிலிருந்து பேராளர்கள் கலந்துகொண்டனர். கட்டுரையாளர்கள் மேற்குறிப்பிட்ட நாடுகளின் இலக்கிய , வளர்ச்சியும் அதன் போரட்டங்கள் குறித்தும் கட்டுரைகள் படைத்தனர். தமிழர்களின் தாயகம் என்பதற்கான பொருள் இந்தியாவாகவே இருக்கிறது என்பதாகவே கருப்பொருள் ...