Skip to main content

Posts

யாருமற்றவர்களின் மறைவு

  உடன் யாருமற்றவர்கள் யாருமற்றவர்களாகவே இறந்துபோகிறார்கள்   உள் தாழ்ப்பாளின் முழு பாதுகாப்புடன் நடந்தேறுகிறது அவர்கள் இறப்பு   திரும்ப அழைக்கக்கூடுமென்றே நம்பித் தொலைக்கிறது பதிலற்ற தொலைபேசி அழைப்புகள்   சேர்ந்தும் சேராது நிரம்பி மினுக்கிட்டபடியே காத்திருக்கின்றன குறுந்தகவல்கள்   வேலையிடத்தின் பதிலற்ற அழைப்புகள் பொறுப்பற்றவன் என்ற நிர்வாகக் கோபத்தில் கனன்றுவிடுகிறது   பிள்ளைகள் தொடர்புகள் எரிச்சலூட்டி அடங்கும்போது அப்பா எப்போதும் போலவே வெளிநாடு சென்றிருக்கலாமென ஆசுவாசப்படுகின்றன     தொந்தரவாகுமென்ற மருகலே கதவு தட்டல்கள் இரண்டு முறைக்குபிறகு நிராகரித்துவிடுகின்றன   பதிலற்றபோது கடன் கொடுத்தவன் மனம் இவன் இறந்திருக்ககூடாதென்றே வேண்டிக்கொள்கிறது   இறந்த பின்னும் நீடிக்கிறது உயிரோடிருந்தபோது நிலை கொண்ட வீட்டின் மௌனம்   இருட்டிலிருந்து மீண்ட மின்விசிரி வெளிச்சத்தில் மேலும் இரைந்து சுழன்றுகொண்டிர...

பேரமைதியைக் கொல்லும் பெருங்குரல்

                                                             கவிஞர் பாலு மணிமாறன் சிங்கப்பூர் பாலு மணிமாறனின் காதல் கவிதைகளை முகநூலில் படிக்கும் போதெல்லாம் எனக்கு வயதானதே ஒரு கணம் மறந்துபோகிறது. என்னை மட்டுமல்ல காதல் எல்லாருக்குமே இளமையை நினைவு படுத்துகிறது- ஆமாம் படுத்துகிறது. நான் நினைப்பேன் காதல் தோல்வி காணும்போதுதான் அது சாகாவரம் பெறுகிறது என்று. காதலில் ‘வென்றவர்கள்’ பாவம் கல்யாணம் ,  குடும்பம் என்ற சாகரத்தில் போய் விழுந்து எதிர் நீச்சல் போட முடியாமல் சிக்கித் தவிக்கிறார்கள். அதனால்தான் காதல் , கால்யாண ஆப்கானிஸ்தான் எல்லையைத் தொடக்கூடாது என்று சொல்கிறேன். கல்யாணம் செய்யாமல் வாழ முடியாதே என்று யாரோ சிலர் எதிர்வினையாற்றுகிறார்கள். காதலர்களாக இருந்தவர்கள் கல்யாணத்துக்குப் பிறகு அதிகாரமும் அகம்பாவமும் பிட...

கர்ண மோட்சம்

கலை சார்ந்து இயங்குபவர்கள் எப்போதுமே  ஒரு பித்த நிலையில் இருப்பார்கள். குறிப்பாக அதற்குள் அவர்கள் ஒரு தீவீரத் தன்மையை வளர்த்துக் கொண்டு, சதா அதனைப் பற்றிய சிந்தனையிலேயே லயித்துக் கிடப்பார்கள்.  அதனுள் உள்ளிறங்கிவிட்டவர்கள் ஒரு ஞானியைவிடவும் அற்புதமான கலையாற்றலை வெளிக்கொணரும் அபூர்வமான சாத்தியங்களையும்  பெற்றிருப்பர். இது கலையில் தோய்ந்த முயக்கத்தின் உண்டான முக்தி நிலை. இதற்கு வேறெங்கும் உதாரணம் தேட வேண்டாம். பாரதி ஒருவனே போதும். கலைகளில் சினிமாதான் காந்தம் கொண்டு ஈர்க்கும் விநோதச் சக்தியைக் கொண்டது. சினிமா பித்து பிடித்த பலரை நான் சந்தித்திருக்கிறேன். கலைகளில் சினிமா சார்ந்து செயல்படத்துடிக்கும் ஒருவனை ஆமைத் தன் தலையை உள்ளிழுத்துக் கொள்வதுபோல கவ்வி இழுத்துக் கொள்ளும். சதா சினிமாதான் அவன் உயிர் மூச்சாக இருக்கும். அவன் பேச்சில், அவன் உடல்மொழியில் சினிமாதான் ஆக்ரமித்து நிற்கும். “என் வேலையை விட்டுவிட்டு, நான் சினிமா இயக்குனராகப் போகிறேன்,” என்று சொன்ன ஒரு நண்பர் சொன்னபடியே நாலு இலக்க சம்பளத்தை உதறிவிட்டு சினிமாவுக்குள் நுழைந்து விட்டார். எழுபதுகளில் ஒரு பிரபல மரபுக் கவ...

ஆணாதிக்கக் குரலும், பெண்ணிய சிந்தனையும்

                             கடந்த ஞாயிற்றுக்கிழமை என் நண்பர் எனக்குச்சொன்ன ஒரு அபலைப் பெண்ணின் கதையை உங்களுக்கும் சொல்கிறேன். இந்த ஒரு வாரமாய் என்னை நிலைகொள்ளாமலாக்கிய கதை. நம் வாழ்வில் அடிக்கடி சந்திக்கும் சம்பவங்களில் ஒன்று இது என்றாலும், இது பெண்களின் கதையென்பதால்தான் சோகம் ஒவ்வொரு முறையும் பழையதை வென்று புதிய துயரத்தைப் பெயர்த்து கொண்டுவந்து அலைக்கழிக்க வைத்துவிடுகிறது.     அவள் வீட்டை விட்டு ஓடி வந்தவள். அதற்குப் பெரும்பாலும் காதலன்றி, வேறு காரணமாக இருக்க முடியாது. தன் காதலின் பிடிப்பால் அம்மாவின் அறிவுரையை தூக்கியெறிந்தவள். அண்ணன் அடியையும் வாங்கிக்கொண்டு காதலே பெரிதென தாங்கிக்கொண்டவள். குறுக்கே நின்றை அத்தனைத் தடைகளையும் உடைத்து நொறுக்கிவிட்டு சுவரேறிக் குதித்தவள்.    ஓடிவந்தவள் அந்தப் பட்டணத்தில் குறைந்த சம்பளத்தில் வேலைக்கு அமர்ந்தாள். ஆரம்பத்தில் எல்லாம் நன்றாக நகர்ந்து கொண்டிருப்தாய்த்தான் பட்டது. வானத்தில் எப்போதுமே மு...

காதல் போயின், காதல் போயின் சாதல்

                                                                 ஓ ஹென்ரி         அவள் எனக்கு முகநூலில் அறிமுகமான பெண் என்றே முதலில் நினைத்தேன். ஆனால் என்னிடம் படித்த மாணவி என்பதை அப்பெண் தன்னை அறிமுகப் படுத்திய பின்னர்தான் தான் தெரியும். மொட்டுக்களாகவே இருந்துவிடுவதில்லை பெண்கள், சீக்கிரம் மலர்ந்துவிடுகிறார்கள். பின்னர் முற்றிலும் வேறான தனி அடையாளம் வந்துவிடுகிறது  அவர்களுக்கு. ஆண்களைவிட பெண்கள் சீக்கிரம் வயதுக்கு வந்துவிடுவதால் அவர்களின் அறிவு வளர்ச்சியும் ஆண்களை மிஞ்சியதாகவே இருக்கிறது. இதை அனுபவப்பூர்வமாகப் பார்க்கவேண்டும். அவர்களின் அகம் சார்ந்த முதிர்ச்சியும் புலனாகும்.  அறிவு வளர்ச்சியின் உண்மை நிலை மனதில் ஏறும். இப்பெண்ணின்...

காதலியின் காதே அதிக சுவையானது!

                                                               அண்டன் ஷெக்கவ் சமீபத்தில் சவூதியில் ரிசானா என்ற இலங்கைப் பணிப்பெண்ணுக்கு இஸ்லாம் சமயத்தின் ஷர்ரியா சட்ட அடிப்படையில் மரண தண்டனை வழங்கப் பட்டது என்னை உலுக்கியது. சவூதியில் ஷர்ரியா சட்டம் ரிசானாவுக்கு வழங்கிய மரண தண்டனை முறையை யார் வாசித்திருந்தாலும் எனக்கு நேர்ந்த அதே திகிலும் பீதியும் அவர்களுக்கும் ஏற்பட்டிருக்கும். இலங்கையைச் சேர்ந்த ரிசானா என்ற இளம் பணிப்பெண் சாவுதியில் வீட்டு வேலைக்காகப் போயிருக்கிறாள். அவள் பராமறிப்பில் இருந்த குழந்தை புட்டிப்பால் அருந்தும் தருணத்தில் பால் மூக்கிலேறி மூச்சுத்திணறி இறந்துவிட்டிருக்கிறது. ரிசானாதான் குழந்தையைக் கழுத்து நெரித்து கொன்றிருக்கிறாள் என்ற ஆதாரப் பூர்வமான சாட்சியங்களின...

எதிர்ப்பாரா திருப்பங்கள் சிறுகதை வாசிப்பின் ஆவலைத் தூண்டின

                வாராந்திர இதழாக குமுதம் இதழ்களின் வழியேதான் நான் கதை வாசிக்கத் துவங்கினேன். குமுதம் இதழ்களை நான் கடையில் வாங்கியது மிகக்குறைவு . ஏனெனில் நான் வளர்ந்த தோட்டத்தில் ஜனரஞ்சக வாசகர் ஒருவரிடமிருந்தே குமுதமும் ஆனந்தவிகடனும் கல்கண்டையும் பெற்றுக்கொண்டு வாசித்தேன். இப்படி ஓசியில் வாசிப்பது எனக்கு மிகச் சுவாரஸ்யமான அனுபவமாகும்.  தமிழகத்திலிருந்து  கிட்டதட்ட இரண்டு வாரம் கழித்தே அவருக்குக் குமுதம்  கிடைக்கும். அவர் படித்து முடிக்க மூன்று நான்கு நாட்கள் ஆகிவிடும். அதை நான் போய் அவரிடம் இரவல் பெறக் காத்திருக்கும் தருணத்தைத்தான் கொஞ்சம் படபடப்பானது என்று சொல்வேன். இதழை அவரிடமிருந்து இரவல் வாங்குவதிலிருக்கும் படபடப்பைவிட அதில் இருக்கும் சிறுகதைகளும் அது என்னை அலைக்கழிக்கப்போகும் திடீர் திருப்பங்களுமே என்னை நிலைகொள்ளாமல் செய்துவிடும். அங்கிருந்துதான் எனக்கு வாசிப்புப் பழக்கம் உருவானது என்று சொல்லலாம். கையில் காசில்லாதவர்கள் ஓசியில் படிப்பது தப்பில்லை என்றே வாதிடுவேன். கற்கை நன்றே..பிச்சைப் புகினும்!...