Skip to main content

Posts

கால எறும்பு அரிக்கமுடியாத சீனி

மாபெரும் ஆளுமைக்கு என் அஞ்சலி அமரர் கவிஞர் சீனி நைனா முகம்மது மலேசிய அறிவுலகம் எளிதில் மறக்கமுடியாத ஆளுமை கவிஞர் சீனி நைனா அவர்கள். அரை நூற்றாண்டுக்கும் மேலாக தன்  வாழ்க்கையை  இலக்கியத்துகே அர்ப்பணித்தவர். தன் இலக்கிய ஆற்றலை தொடர் வாசிப்பின்மூலம் வளர்த்துக்கொண்டே இருந்தார். அவருக்கு இங்கே வேறொருவர்  ஈடில்லாத மேதைமையை அவரின் எழுத்தும் பேச்சும் பறைசாற்றிய வண்ணம் இருந்தது. அவரின் அறிவார்ந்த இயக்கத்தை அந்நாந்து பார்த்து வியந்தோதிய பேராசிரியர்களையும், கல்விமான்களையும், படைப்பாளிகளையும் என் இலக்கிய வாழ்வில் அவதானித்தே வந்திருக்கிறேன். கவிஞர் பல தருணங்களில் அவர்களின் மரபிலக்கிய சந்தேகங்களையும் வினாக்களுக்கம் ஐயமின்றி தீர்த்து வைத்திலிருந்தே  அவரின் ஆளுமை எவ்வளவு பெரியது என்ற எண்ணவைத்தது. நாம் சிந்தித்து வைத்திருப்பதற்கும் மிக மேலாகவே அவரின் ஆளுமை பரிமளித்திருக்கிறது. அவருக்கும் எனக்குமான ஒரு பிணக்கிலிருந்தே எங்களின் தொடர்பும் நட்பும் துவங்கியதுதான் ஒரு முரண்நகை. என் முதல் சிறுகதைத் தொகுதி வெளியான தருணம். சுங்கைப்பட்டாணியில் நூலை வெளியிட்ட பிறகு, பினாங்கு தமிழ் எழ...

முத்தங்களால் நிறைந்த தேசம் . முத்தம் 3

 முத்தம் 3 அபு டாபி விமான நிலையத்தை அடைந்தபோது உடல் சோர்ந்திருந்தது. என்னதான் விழித்து விழித்து கண்ணயர்ந்தாலும்  மூன்று மணி நேரத்துக்கு மேல் தூங்கியிருக்கமாட்டேன். ஒரு பெக் விஸ்கி அரைமணி நேரம் கூட உடன் இருப்பதில்லை. மெல்லிய போதை உண்டாகும் நேரம் தூக்கம் பிடிக்கத் தொடங்குகிறது. போதை உடலை விட்டு விலகியவுடன்  தூக்கம் கலைந்துவிடுகிறது. இரண்டு பெக் போட்டால் தூக்கம் நன்றாக வரும் என்பதையெல்லாம் நம்ப முடியவில்லை. அது வெறும் முயக்கம். அதனைத் தூக்கமென்றா நினைத்துக்கொள்வது? உடல் வலுவற்றிருந்தது. சோர்வு நீங்குவதற்கு நீண்ட தூக்கம் போடவேண்டும். அபு டாபி விமான நிலையத்தில் அதற்கு வழியே இல்லை. உடலைச் சாய்த்து உட்காரும் அளவுக்குக் கூட இருக்கைகள் வசதியாக இல்லை. பயணிகள் ஆயிரக்கணக்கில் தொடர்புப் பயணத்துக்குக் காத்திருந்தனர். அபுடாபி அரபு நாட்டின் மிக முக்கிய நகரம். அசுர வேகத்தில் மெட்ரோபோலிட்டன் நகரமாக வளர்ந்து செழித்துக் கொழுத்த நகரம். பெட்ரோல் வற்றாமல் ஊறிக்கொண்டே இருக்கிறது. பெருத்த ஒட்டக வயிற்றைப் போலவே ஷேக்குகள் கொழுத்து இருக்கிறார்கள். அரபு நாட்டின் நகர மேம்பாட்டு கட்டுமான...

முத்தங்களால் நிறைந்த தேசம் . முத்தம் 2

முத்தம் 2 ஜூலை 22 இரவு 6.30க்கு கே ஏல் ஐ ஏ  '2 விமானத் தளத்தில் இருக்கவேண்டும். எத்திஹாட் விமானம் மூலம் 8.30 க்கு பயணம் தொடங்கும். கிள்ளானில் தெலுக் பங்லிமா காராங்கிலுள்ள என் மைத்துனர்  எங்களை விமானத் தளத்தில் விடவேண்டும். நாங்கள் வீட்டிலிருந்து  கிளம்பும்போது மணி 11.30. இடையில் எங்கும் நிற்கக்கூடாது என்பதற்காக உணவைச்சமைத்து பொட்டலம் செய்து எடுத்துக்கொண்டு காரிலிலேயே சாப்பிட்டாக வேண்டும். நெடுஞ்சாலை பயணம் என்றாலும் எங்கேயும் பயண இடையூறு நேர்ந்தால் குறிப்பிட்ட நேரத்தில் போய்ச்சேர முடியாது. குறைந்தது மூன்று மணி நேரத்துக்கு முன்னரே விமானத் தளத்தில் இருக்கவேண்டும் என்று தீர்மானித்திருந்தோம். 110 கிலோ மீட்டர் வேகக் கட்டுப்பாட்டை கடைபிடிக்கவும் வேண்டும். ஏற்கனவே ஆளாலுக்கு நான்கைந்து வேகம் மீறல் தண்டங்களை அரசாங்கத்துக்கு பாக்கி வைத்திருந்தோம். என் மருமகன் அரசாங்கம் செழிப்பாக இருக்கவேன்டும் என்பதில் அளவுக்கு மீறிய அக்கறையுள்ளவர். அவர் ஒரு கட்டு சமன்கள் வைத்திருப்பார். அபுடாபி விமான நிலையம் குடிமக்களிடமிருந்து  வரியை எப்படிப் பறிப்பது என்று மலேசியாவிலிருந்து பிற...

முத்தங்களால் நிறைந்த தேசம்

முத்தம் 1. என் மருமகனும் மகளும் ஐரோப்பிய பயணம் தொடர்பாக எங்களுக்கு எந்த முன் திட்டமும் இல்லை. விமான டிக்கெட்டுகளை மட்டும் முன் பதிவு செய்திருந்தார் என் மருமகனார்.(ஐரோப்பிய பயணத்தை நேர்த்தியாக செய்து முடித்திருந்ததால் இநத 'னார்'.) மற்றபடி அங்கே போனதும்தான் மற்ற ஏற்பாடுகள் எல்லாம். ஆண்டு தொடக்கத்தில் பஹாருடின் பயண நிறுவனத்தோடு போகலாம் என்றே குடும்பத்தில் அறுவர் முன்பணம் செலுத்தியிருந்தோம். என் மகன், மருமகள், என் மகள், என் மருமகனார், என் தர்ம பத்தினி, நான் ஆகியோர் அந்த அறுவர். பஹாருடின் பயண நிறுவனம், பயணிகள் போதாமையால் அந்தப் பயணத்தை ரத்து செய்துவிட்டதாக அறிவித்து விட்டார்கள். ஆனாலும் என் மகள் விடுவதாயில்லை. பயணம் செய்யலாம் என்ற மனநிலையிலேயே நிலைத்துவிட்டிருந்தாள். நாம் சொந்தமாக ஏற்பாடு செய்யலாம் என்றே வலியுறுத்து வந்தார். எனக்கு அவ்வளவு விருப்பமில்லை. பஹாருதின் விதித்த அதே தொகையில் போய்வர ஏற்பாடு செய்கிறேன் என்றார். ஐரோப்பாவில் எல்லாமே நேரப்படி நடந்தேறும். தொல்லைகள் இல்லாத நாடு, அங்கே பொதுப் போக்குவரத்து குறையில்லாமல் நடக்கும்., என்றெல்லாம் என்னைக்  கவரப் பார்த்தார்கள். ...

வைரமுத்துவின் காலத்தால் அரிக்கப்படாத பாடல்கள்

கவிஞர் வைரமுத்து இந்த ஜூலை 13ல் மணிவிழா  கொண்டாடினார். மணி விழா எடுக்க எல்லாத் தகுதியும் கொண்டவர் கவிஞர். புதுக்கவிதை தமிழ்ப் படைப்புலகுக்கு அறிமுகமான  காலத்தில்   மரபிலிருந்து  புதுக்கவிதைக்குப் பெரும்  பாய்ச்சலை  நிகழ்த்தியவர்களில் மிக முக்கியமானவர்.  மரபுக்கவிதை காலமாற்றத்தால் கனிந்து உதிர்ந்து விழுந்து கொண்டிருக்கும் வேளையில் கவிதை இலக்கியம் தன்னை புதிய தோற்றத்துக்குத் தோலிருத்துக் கொண்டு புதிய சட்டையை மேலணிந்து கொள்ளத்துவங்கியது. இலக்கணச் சங்கிலியால் படைப்புச் சுதந்திரத்தை கட்டிப்போட்டிருந்த படைப்புத் தமிழ் மெல்லத் தளர்ந்து பின்னர் கட்டவிழ்த்து இலக்கணப் பிடியற்ற புதிய விடுதலைக்குத் தயாரானது. புதிய பரிமாணத்தில் புதிய கவிதை யுகத்தைப் படைக்க தொடங்கியிருந்தது. இது காலம் கொண்டுவந்த மாற்றம். மனிதர்களின் முன்தீர்மானம், திட்டமிட்ட செயல் என்றெல்லாம் சொல்வது காலம் வகுத்த விதிக்கு முரணாக சொல்லப்படும் கருத்தாக்கம். புதுக்கவிதை  மரபை பதியம்போட்டு வளர்த்த அப்போதிருந்த வானம்பாடிக் கவிஞர்களே புதுக்கவிதை இலக்கியத்தை ஒரு இயக்கமாக முன்னெடுத்தார்கள். கவிதை ...

ஜெயமோகனோடு மலேசியாவில் ஒரு இலக்கிய முகாம் (கன்னி முயற்சி)

முகாமின் முகங்கள் இலக்கிய முகாம் முழுக்க ஜெயமோகனைத்தான் பேச வைக்க வேண்டும் என்று பூர்வாங்க ஏற்பாடு செய்திருந்தோம். அவர் பேசிய பின்னர் அது தொடர்பான உரையாடலை மேற்கொள்ளலாம். அதுவே உசிதம் என்றே முடிவெடுத்திருந்தோம். ஆனால் பிற்பாடு, பேசியபின்னர்  அவர் களைத்துவிடுவார். அதனால் மலேசிய இலக்கியம் தொட்டும் கொஞ்சம் விவாதிக்கலாம் என்று மறு முடிவு செய்தோம். நான் மலேசிய சிறுகதை ஒன்றைத் தொட்டு உரையாடலை ஆரம்பிக்கும்படி முடிவெடுக்கப்பட்டது. நவீன், மலேசிய நாவல்கள் பற்றி பேசவைக்கலாம் என்றும், யுவராஜன் மலேசிய நவீன கவிதை தொடர்பான விவாதத்தை முன்வைத்து பேசவேண்டும் என்றும் முடிவு செய்தோம். ஜெயமோகனோடு இரு நண்பர்கள் வருகிறார்கள் அவர்களையும் ஏதாவது தலைப்பைக் கொடுத்து கலந்துகொள்ள வைத்தால் முகாம் சிறப்புறும் என்பதற்காக ராஜமாணிக்கத்தைத் தொடர்புகொண்டு அவர் கொடுத்த மூன்று தலைப்புகளில் 'விதி சமைப்பவர்கள்' தலைப்பில் பேசவைக்கலாம் என்று தோணியது. ஜெமோ எழுதிய ஒரு கட்டுரை அது. உரையாடலை விவாதமாக்கக் கூடிய மிக உற்சாகமான தலைப்பு அது. அவர் உடன்பட்டார். இப்போது ஜேமோ பேசப்போகும் ...

ஜெயமோகனோடு மலேசியாவில் ஒரு இலக்கிய முகாம் (கன்னி முயற்சி)

 8.குழப்பம் என்று தலைப்பிடல் சரியாக , அதனால் தெளிவு என்ற புதுத் தலைப்பு  மணிமொழி, பூங்குழலி. விஜயா                                          காலை 9.00 மணிக்கு பினாங்கு பொட்டேனிக்கல் பூங்காவிலிருந்து கொடிமலைக்குச் செல்வதற்கு நானும் பாலமுருகனும் முதலில் போய்ச் சேர்ந்தோம்.  நீண்ட நாட்களுக்குப் பிறகு மழைநீர் பூமியை நனைத்திருந்தது .முதுமை தட்டிய அகன்று விரிந்து மரங்கலிருந்து பூக்கள் காற்றில் உதிர்ந்து கொண்டிருந்தது. விஜயா கொடிமலை மலேசியாவின் மிக முக்கியமான சுற்றுலாத்தளம். முன்னர் சிலமுறை வந்திருக்கிறேன். மலை உச்சியை அடைவதற்கும் மின்சார ரயிலில் மலைப் பயணம் செய்ய வேண்டும். மலை உச்சியை நோக்கிச் செங்குத்தாக ஏறும். ரயில் அப்படியே மல்லாக்க கவிழ்ந்துவிடுமோ என்ற அச்சமேற்படும். கிட்டதட்ட மண்ணின் மீது பயணிக்கும் கேபல் கார் போல.ரயில் பாதி தொலைவில் நின்று இன்னொன்றில் ஏறித்...