Skip to main content

Posts

புதுக்கவிதை ஆழமான தடம் பதிக்க மிக முக்கியமான காலக்கட்டமாக இதனைக்கருதலாம். புதுக்கவிதையை முன்னெடுத்துச்செல்வதற்கும், பல புதுக்கவிஞர்களை உருவாக்குவதற்கும் இந்தச் சர்ச்சை வழி அமைத்துக்கொடுத்தது. அவர்களின் எதிர்ப்பே இந்த வடிவம் தழைப்பதற்கான பலத்தைக்கொடுத்துக்கொண்டிருந்தது. ஒரு நீண்ட,செறிவான இலக்கண இலக்கிய மரபு சார்ந்த தமிழுக்குப் புதுக்கவிதை என்ற இறக்குமதி வடிவம் தேவையில்லை என்று யாப்பில் கரைகண்டவர்கள் மிகுந்த கோபத்தோடு தங்களின் வசவுகளால் புதுக்கவிதையாளர்களைத் திட்டித்தீர்த்தனர். தாயுமின்றி தந்தையுமின்றித் தப்பால் பிறக்கும் ஒரு கவிதை தாளமுமின்றிக் கோலமுமின்றித் தவறால் பிறப்பது புதுக்கவிதை சாலை விதியை சமிக்ஞை விளக்கை சாராதோடும் புதுக்கவிதை நாலும் செறிந்த நமக்குள் வழக்கை நாசமாக்கட்டும் புதுக்கவிதை (தீப்பொறி) புதுக்கவிதை வடிவத்தை ஏற்றுக்கொள்ளாத வகையில் பற்பல கவிதைகளும் கட்டுரைகளும் அப்போது எழுதப்பட்டன. அன்றைய வாசகனுக்கும், யாப்பிலக்கணத்தைக்கற்றுத்தேர்ந்த பிறகுதான் கவிதை எழுத வரவேண்டும் என்ற பிடிக்குள் சிக்கிகொண்டு எழுத முடியாமல் தவிப்பவனுக்கும் புதுக்கவிதை புதிய படை...
மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும் கோ.புண்ணியவான். பகுதி 1 மலேசிய படைப்பிலக்கியத்தின் வரலாறு 1876 லேயே தொடங்கிவிட்டதாக ஆய்வாளர்கள் தக்க சான்றுகளோடு முன்வைக்கிறார்கள். பினாங்கில் 1876 ல் தங்கை நேசன் என்ற தலைப்பில் மலேசியாவின் முதல் பத்திரிகை அச்சாகி வருகிறது.மலேசியாவில் புனையப்பட்ட முதல் இலக்கிய வடிவம் மரபுக்கவிதைதான்.ஆனால் முதல் புதுக்கவிதை பிறந்தது 1964 ஆம் ஆண்டுதான். மலேசியாவில் புதுக்கவிதை விதை நடப்பட்டு இன்றைக்கு கிட்டதட்ட அரை நூற்றாண்டை எட்டிப்பிடிக்கவிருக்கிறது. முதல் மரபு மீறிய கவிதை கள்ளப்பார்ட்டுகள் என்ற தலைப்பில் சி.கமலநாதனால் எழுதப்பட்டு தமிழ் முரசு ஞாயிறு பதிப்பில் வெளியானது.இது பிரசுரமான ஆண்டு 1964. மதியின்றிப் பிதற்றுவதும் இங்கு உள்ளதைத்தின்று, ஊதிப்பெருப்பதல்லால் உருப்படியாய் செய்வதென்ன? என்று அடியெடுத்துக்கொடுக்கிறார் சி. கமலநாதன். இவரே மலேசிப்புதுக்கவிதைகளின் முன்னோடி என்று தயங்காமல் குறிப்பிடலாம்.இவரைத் தொடர்ந்து பைரோஜி நாராயணன், எம்.துரைராஜ், அக்கினி, ராஜகுமாரன், ஆதிகுமணன், எம்.ஏ. இளஞ்செல்வன் என புதுக்கவிதைக்கான ம...
இறுக்கமாக பூட்டப்பட்ட எல்லாகதவுகளின்\ எல்லாச்சாவியையும் அவனே வைத்துக்கொள்கிறான் துவாரத்தின் வழியே சிறியா கீற்றிலிருந்தாவது கவிதை கசிகிறதா என்ற நப்பாசையில் நம்பிக்கயான தருணத்தில் பூட்டுகள் தெறிக்கின்றன இன்பம் சுகித்தவாறு.

வீண் விவாதங்கள் நம் அறிவீனத்தின் புகலிடமோ?

                                          வாழ்வில் நடக்கும் சம்பவங்கள் நிழல் போல நம்முடன் நடந்து வருபவை. நண்பர்களோடு பேசிக்கொண்டிருக்கும்போது முன்னர் எப்போதோ பதிந்து கிடந்த சம்பவங்களை, மூளை சட்டென இழுத்து வந்து நினைவுப்பட்டியலின் வரிசையில் முதல் ஆளாக நிற்க வைத்துவிடும். குறிப்பாக நண்பர்களுடனான உரையாடலில்போது நமக்கு ஏற்பட்ட நிகழ்வுகளுக்கு ஈடான பேச்சு எழுந்தால் இதுபோன்ற அதிசயங்கள் நடந்துவிடும். நாம் படித்து சேமித்து வைத்ததை விடவும், அனுபவித்தவைதான் அதிக அளவில் பதிவாகி வைத்திருக்கும் மூளை. எழுத்துக்களைவிட மனித பிம்பங்களும், அவர்கள் ஏற்படுத்தித்தந்த அனுவங்களும் தாமாகவே மச்சங்கள்போல் அழுத்தமான இடத்தைப்பிடித்து வைத்துக்கொள்கின்றன மூலையின் எங்கோ ஒரு மூலையில். பின்னர் சந்தர்ப்பம் பார்த்து வெளியாகின்றன போலும். நான் தலைமை ஆசிரியராகப் பணியாற்றிய காலத்தில் நடந்த சம்பவம் இது. மாணவர்கள் பள்ளியில்...

கடைசி சந்திப்புக்குப்பிறகான நினைவுக்குறிப்புகள்

கோ.புண்ணியவான் ஜனவரி 28. மாலை மணி 6.25. ராணி கடைசியாக வீட்டுக்கு வந்தபோதுகூட இழை சந்தேகங்கூட உதிராமல் தன்னைப்பற்றிய அந்தரங்கத்தைத் தன் பிடியிலேயே பதுக்கி வைத்திருந்திருக்கிறாள். ராணி தாதிமைப்பயிற்சியின் விடுமுறை காலத்தில் வரும்போதெல்லாம் முக்கால் வாசி இயல்பு மாறாத, பழைய ராணியாகவே இருந்திருக்கிறாள். கோலாலம்பூரின் நவநாகரிகப்போக்கு, கலாச்சார அதிர்ச்சி, மொழி எதுவும் அவளிடம் பெரிதான மாற்றங்களைப்பதிவு செய்திருக்கவில்லை. உடையில் ஒப்பனையில் அவ்வப்போது சின்னச் சின்ன மாறுதல்கள் ஊடுருவியிருந்தன. அதிலும் ஒரு கட்டுக்கோப்பு, தன்னடக்கம் என சிறு வயது முதலே பெற்றோர் கட்டமைத்துக்கொடுத்த ஒழுங்கோடு-எல்லையைத்தாண்டாமல், சுயத்தோடு அவள் அவளாகவே இருந்திருக்கிறாள். தன்னை அழகுபடுத்திக்கொள்வதில் எல்லாப்பருவப் பெண்களிடம் இருக்கும் விருப்பம் அவளிடமும் இருந்ததை எப்படி சந்தேகப்பிரதேசத்துக்குள் நுழைப்பது? ராணி மீண்டும் பயிற்சிக்கு வீட்டை விட்டுக்கிளம்பி அன்றிரவு அவள் போய்ச்சேர்ந்துவிட்டாளா என்று உறுதிப்படுத்திக்கொள்ள தொடர்பு கொண்ட போது தொலைப்பேசி அம்மாவின் தகவலைப் பதிவு செய்துகொண்டதே தவிர, வெகு நேரம் நீண...

நேற்றைய தொடர்ச்சி.........

இன்றைக்கு மலேசியக் கல்விச் சான்றிதழில் (ம.க.சா) (SPM) மாணவர்கள் தமிழ் இலக்கியப்பாடத்தைச் சோதனையில் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 2012ல் பத்து பாடங்களுக்கு மேல் எடுக்கக்கூடாது என்ற அரசின் புதிய ஆணை தமிழ் இலக்கியப்பாடத்துக்கு வேட்டு வைத்திருக்கிறது. இதற்கு முன்னர் ஒரு மாணவர் எத்தனை பாடம் வேண்டுமானாலும் எடுக்கலாம் என்றிருந்தது. அத்திட்டத்தின் வழி இலக்கியபாடத்தைச் சோதனையில் எடுக்க பல ஆயிரம் மாணவர்கள் முன்வந்தார்கள். ஆசியர்களும் பொது இயக்கங்களும் அதற்காகப்பாடுபட்டன. இன்றைக்கு அமல்படுத்தப்பட்டுவரும் சட்டம், முன்பு இல்லாத நிலையில் தமிழ் இலக்கியம் எடுப்பது சாத்தியமானது. இதற்கு முன்னர் இருந்த திட்டத்தின்படி பெருவாரியான சீன இன மாணவர்கள் மலாய்க்கார மாணவர்களைவிட அதிகப்படியான மதிப்பெண்கள் பெற்று தங்கள் மேதைமையை நிரூபித்திருக்கிறார்கள். பின்தங்கி இருக்கும் மலாய்க்காரச் சமூகத்தைக்கைதூக்கிவிட அவர்களுக்குத்தரப்படும் பிரத்தியேக கல்விமுறைக்கு சவால்விடும் வண்ணம் சீன இன மாணவர்களில் சோதனை முடிவுகள் அமைந்துவிடுகின்றன. பெரும்பான்மையில் இருக்கும் மலாய்க்கார மாணவர்களைவிட எண்ணிக்கையில் அடுத்த நிலையில் இ...

எல்லாவற்றையும்விட தமிழனுக்குத் தமிழ்மொழிதான் ஆகக்கடைசித்தேர்வு

சம்பவம் 1 ஒரு நாள் தேனீர்கடையில் இருவர் உரையாடலைச் செவிமடுத்தபடி அமர்ந்திருந்தாராம் நண்பர் ஒருவர். அவர்களின் போதாத காலம் செவிமடுத்துக்கொண்டிருந்த நண்பர் தமிழ்ப்பற்று(வெறி) உள்ளவர். தமிழ் மொழியால் ஏற்படும் பின்னடைவுகள் பற்றிப்பேசப்படும் தருணங்கள் வெகுண்டெழுந்துவிடுவார். யார் பேசுகிறார் எங்கே பேசுகிறார் என்றெல்லாம் பார்க்கமாட்டார். கடையில் பேசிக்கொண்டிருந்தவர்களில் ஒருவர் தமிழ்மொழி கற்பதால் உண்டாகும் நன்மைகள் பற்றிப்பேச, பிறிதொருவர் அதனால் உண்டாகும் தேக்கங்கள் , வனிக ரீதியிலான பின்னடைவுகள் பற்றிய தன் கருத்துக்களை முன்வைத்திருக்கிறார். தர்க்கங்கள் வெப்பமேறிக் கொண்டிருந்த வேளையில்,”தமிழ் சோறு போடுமா?” என்ற தமிழ்மொழியைக் கேவலப்படுத்தும் வினாவை முன் வைக்க உரையாடலைக் கேட்டுக்கொண்டிருந்தவர் தடாலடியாகப்பாய்ந்து,” உனக்குச் சோறுதான வேணும் இந்தா தின்ரா” என்று தன் மேசையில் உள்ளதை எடுத்துக்கொடுத்திருக்கிறார். “ன்னும் வேணும்னா சொல்லு ஆர்டர் பண்றேன்,” என்று காத்திரமான முறையில் யானை பாத்திரக்கடையில் புகுந்ததுபோல உரையாடலின் இடையில் புகுந்தாராம். ஒரு அறிஞர் இதே வினாவுக்கு அறிவார்ந்த முறையில் பதில் கூற...