Skip to main content
புதுக்கவிதை ஆழமான தடம் பதிக்க மிக முக்கியமான காலக்கட்டமாக இதனைக்கருதலாம். புதுக்கவிதையை முன்னெடுத்துச்செல்வதற்கும், பல புதுக்கவிஞர்களை உருவாக்குவதற்கும் இந்தச் சர்ச்சை வழி அமைத்துக்கொடுத்தது. அவர்களின் எதிர்ப்பே இந்த வடிவம் தழைப்பதற்கான பலத்தைக்கொடுத்துக்கொண்டிருந்தது.


ஒரு நீண்ட,செறிவான இலக்கண இலக்கிய மரபு சார்ந்த தமிழுக்குப் புதுக்கவிதை என்ற இறக்குமதி வடிவம் தேவையில்லை என்று யாப்பில் கரைகண்டவர்கள் மிகுந்த கோபத்தோடு தங்களின் வசவுகளால் புதுக்கவிதையாளர்களைத் திட்டித்தீர்த்தனர்.



தாயுமின்றி தந்தையுமின்றித்

தப்பால் பிறக்கும் ஒரு கவிதை

தாளமுமின்றிக் கோலமுமின்றித்

தவறால் பிறப்பது புதுக்கவிதை

சாலை விதியை சமிக்ஞை விளக்கை

சாராதோடும் புதுக்கவிதை

நாலும் செறிந்த நமக்குள் வழக்கை

நாசமாக்கட்டும் புதுக்கவிதை (தீப்பொறி)



புதுக்கவிதை வடிவத்தை ஏற்றுக்கொள்ளாத வகையில் பற்பல கவிதைகளும் கட்டுரைகளும் அப்போது எழுதப்பட்டன.

அன்றைய வாசகனுக்கும், யாப்பிலக்கணத்தைக்கற்றுத்தேர்ந்த பிறகுதான் கவிதை எழுத வரவேண்டும் என்ற பிடிக்குள் சிக்கிகொண்டு எழுத முடியாமல் தவிப்பவனுக்கும் புதுக்கவிதை புதிய படைபிலக்கியத்தளத்தை வழியமைத்துக்கொடுக்கிறது என்று எதிர்வாதம் செய்த விடாகொண்டன்கள் இருக்கத்தான் செய்தார்கள்.



இலக்கியக்காவலர்களாய்

எக்காளமிடும்

ஓ.......கிளிப்பிள்ளைகளே

நீங்கள் வேலி போட்டுத்தான்

மஞ்சத்தில் குலவுகின்றீர்கள்

ஆனால்

உணர்ச்சியற்ற சொல்லடுக்குகளில்

மஞ்சங்கள் பாடைகளாக மாறுகின்றன

நீங்கள் பினத்தைப்பெற்றுத்தள்ளுகிறீர்கள்

உங்கள் சாலைவிதிகள்

எங்கள் புத்துணர்ச்சிகளை

முடமாக்கிப்போட

உண்டாக்கப்பட்ட

சர்வாதிக்காரக்கூச்சல்

உங்கள் சமிக்ஞை விளக்குகள்

எங்கள் நவீனக்கார்களுக்குப்

போடப்பட்டதல்ல

இருளில் சுழலும்

செக்கு மாடுகளுக்காகப் போடப்பட்ட

சிம்னி விளக்குகள் (எம். ஏ. இளஞ்செல்வன்)

என புதுக்கவிதையின் வளர்சிக்காக எதிர்வாதம் செய்கிறார்.



கவிதையை வாசகனிடம் கொண்டு சேர்ப்பதில் கருவி, கருப்பொருள் இதில் எது மிகப்பெரிய பங்களிப்பு செய்கிறது என்பதற்கான விவாதத்துக்கு இன்றைக்குப் பதில் கிடைத்துவிட்ட நிலையிலும் இன்னும் ஓரிருவர் புதுக்கவிதை, கவிதை இனத்தைச்சாராது என்று தள்ளிவைத்து, மல்லுக்கு நிற்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். ...... தொடரும்

Comments

Popular posts from this blog

கவிதைக்குள் பாதாம்பருப்பு

                                                                                                  நா ன் பணியாற்றிய ஒரு பள்ளியில் ஓர்இளைஞர் தற்காலி ஆசிரியராக வந்து சேர்ந்தார். தொடக்கத்தில் அவர் சாமான்ய இளைஞரைப்போலத்தான் தோன்றினார்.  ஆனால் அவரிடம் சில கோளாறுகள் இருப்பது சற்றுத் தாமதமாகத்தான் தெரிய வந்தது. உடன் வேலை செய்யும் ஆசிரியர்கள் கொடுத்த புகார்களின் பேரிலும் நானே நேரடியாக அனுபவித்ததின் பேரிலும் . அவரை தொடர்ந்து பள்ளியில் வைத்திருப்பது ஆபத்தானது என்று முடிவெடுத்து மாவட்டக் கல்வி இலாகாவின் கட்டளையின் பேரில் அவரை வேலையிலிருந்து உடனே நிறுத்திவிட்டேன். பள்ளியில் படிக்கும்போது அவர் மிகவும் கெட்டிக்கார மாணவராக இருந்திருக்கிறார்.  அசாதாரண அறிவாளி தரத்தில் வைத்துப் பார்க்கவேண்டியவர் என்று அவரோடு படித்து இன்றைக்குப் பல்கலைப் பேராசிரியாரா...

யானையின் பாதத்தடம்

                                         இ ம்முறை வல்லினம் விருது பி.எம் மூர்த்திக்கு வழங்கப்படுகிறது. அதனை முன்னிட்டு மூர்த்தியையுடனான என் அனுபவப் பகிர்வு இக்கட்டுரை.           மூர்த்தியை நான் முதன் முதலில் ஜித்ரா ஐ ஏ பி கல்விக் கழகத்தில்தான்   சந்தித்தேன். இது நடந்து கிட்டதட்ட 35/40 ஆண்டுகள் கடந்துவிட்டன. எங்கள் இருவருக்கும் ஒரே அறை ஒதுக்கப்பட்டிருந்தது ஒரு தற்செயல் அல்ல அது ஏதோ ஓர் ஏற்பாடு என்று முதலில் நான் அறிந்திருக்கவில்லை. குளிர்சாதன வசதி இல்லாத அறை அது. இரவில்கூட வெக்கை உக்கிரமாகத் தாக்கும். 30 மைல்கள் ஓடிவிட்டது போல வியர்த்துக் கொட்டும். இரு முறை மும்முறை இரவில் குளித்தவுடனும் வியர்க்கும். இவ்வாறான கையறு நிலையில் உஷ்ணத்தைக் குறைக்க சில அசட்டுத்தனமான யோசனைகள் தோன்றுவது இயல்பு. உறக்கம் வராமல் தவித்துபோது , சிமிந்துத் தரையில் வாலி வாலியாக தண்ண...

சீ.முத்துசாமி தேர்ந்தெடுத்த எழுத்திலக்கு வெல்லும் இலக்கு.

 சீ.முத்துசாமி தேர்ந்தெடுத்த எழுத்திலக்கு வெல்லும் இலக்கு.   சீ.முத்துசாமி அறிமுகமான தொடக்க காலம்தொட்டே எனக்கும் அவருக்குமான விலகல் தொடங்கிவிட்டிருந்தது .அது என்ன காரணத்தினால் என்று என்னால் அருதியிட்டுச் சொல்லத் தெரியவில்லை. சம வயது கலைஞர்களுக்கே உரித்தான காழ்ப்பு மன இயல்பாகக் கூட இருக்கலாம். அவர் யாரிடமும் நெருக்கமாக பழகும் குணமுடையவர் அல்ல. எம் ஏ இளஞ்செல்வனும் அவரும் சமகாலக் கலைஞர்களாக இருந்தாலும் அவர்களிடையேகூட விலகல் இருந்துகொண்டே இருந்ததை நான் அவதானித்தேன். சீ.முத்துசாமி ஒரு தனிமை விரும்பி. சொற்களை அளந்து பேசுபவர். சக நண்பர்கள் விரும்பாத தொனியில் சொற்களை உபயோகிப்பவர். இந்தக் காரணங்களின் பொருட்டே அவர் தனித்த பாதையைத் தேர்ந்தெடுத்திருக்கலாம்..அது சில தனிமனிதர்களின் இயல்பு என்று பின்னாளில் புரிந்துகொண்டேன்.  எனக்கும் அவருக்குமான விரிசல் ஒரு சந்தர்ப்பத்தில் விஸ்வரூபம் எடுத்தது. நான் 1995 முதல் 2005 வரையில் கெடா மாநில எழுத்தாளர் சங்கத் தலைவராக இருந்தேன். நான் விரும்பி ஏற்றுக்கொண்ட பதவி அல்ல அது. என்னிடம் வற்புறுத்தி கொடுக்கப்பட்ட ஒரு பணி. லாங்காவியில் ஐந்து ஆண்டுகால ...