Skip to main content

Posts

ஒரு பருந்தும் பாவப்பட்ட ஜென்மமும்.

      நோக்கம்:          ஜூலை 28 காலை 9.25க்கெல்லாம் நான் வேலை செய்து ஓய்வு பெற்ற கணேசர் கலாசாலையில் இருந்தேன். அதிகாலை என்னுடைய மாமுல் மருத்துவ பரிசோதனையைச் சுங்கைப்பட்டாணி மருத்துவ மனையில் முடித்துக்கொண்டு, பசி எடுத்ததால் காலை உணவை வந்தான் மீயை சீனர் உணவகத்தில் முடித்துக்கொண்டு மனைவியை மீண்டும் வீட்டில் விட்டு விட்டு பள்ளியை நோக்கி பயணமானேன். நான் காண்ட்ரக்ட் ஆசிரியர் வேலைக்கு மனு போடுவதால் என்னுடைய கடைசி கியூ 8 பெறுவதற்கு அங்கே சென்றேன். வருகைப்பொருள்          நான் ஓய்வு பெற்று ஐந்தரை ஆண்டுகள் ஆகிவிட்டபடியால் கோப்புகளைத் தேடி கியூ எட்டை உருவி எடுக்க குமாஸ்தாவுக்கு அவகாசம் கொடுத்து மறுநாள்  அங்கு பிரசன்னமானேன். அப்பள்ளியின் அப்போதைய தலைமை ஆசிரியர் கனகம் என்னைப் பார்க்கவேண்டும் என்று குமஸ்தாவிடம் தகவல் சொல்லியிருந்ததால் கியூ எட்டைப் பெற்றுக்கொண்டு தலைமை ஆசிரியர் அறைக்கதவைத் தட்டினேன். இதற்கு முன்னர் தலைமை ஆசிரியரைப்பற்றி அங்கு பணிபுரியும் (என்னிடமும் பணி புரிந்த) ஆசிரியர்க...

மலேசிய எழுத்தாளர் சங்கத்தின் சமீபத்திய பயிலரங்கும் ,அதன் தூர நோக்கும்

படத்தில் எஸ்ரா, கோ.புண்ணியவான், முனைவர் முல்லை, சங்கத் தலைவர் பெ.ராஜேந்திரன்           ஆகஸ்ட் மாதம் 19ம் தேதி தொடங்கி 21ம் தேதிவரை மலேசிய எழுத்தாளர் சங்கம் மீண்டும் ஒரு சிறுகதைப் பயிலரங்கை முன்னெடுத்தது. முனைவர் முல்லை ராமையாவிடம் இதன் பொறுப்பு ஒப்படைக்கப் பட்டிருந்ததானது இது வழக்கத்துக்கு மாறான  பயிலரங்காகத்தான் இருக்கப்போகிறது என்ற எண்ணத்தோன்றியது. மனிதர்கள் எப்போதுமே ஒரே மாதிரியாகச் சிந்திப்பவர்கள் அல்ல. ஒரு நடவடிக்கையை ஒரே மனிதரிடம் ஒப்படைக்கும்போது அதன் நடவடிக்கைகளின் ,திட்ட வரையறை பெரும்பாலும் முன்னது போலவே பின்னதும் இருக்கும். இம்முறை மலேசிய எழுத்தாளர் சங்கத் தலைவர் ராஜேந்திரன் கருத்தரங்கின் சிந்தனையாளராகப் பேராசிரியர் முல்லையிடம் ஒப்படைத்ததன் வழி அதன் போக்கு வேறு மாதிரிதான் இருக்கவேண்டும் என்று யூகித்தது, தடம் மாறாமல் இருந்தது. எனக்கான பொறுப்பை விளக்கும்போதே அவரின் நோக்கம் நான் நினைத்தது போலவே அமந்திருந்தது. நீங்கள் சிறுகதை துவக்கம் பற்றி மட்டும் பேசுங்கள். நீங்கள் பேச வேண்டிய தலைப்பு ‘வாசிப்போரின் கருத்தைக் கவரும் சிறுகதை...

அறிவுக்கு எட்டா ஆழிக்கூத்து

                            2004 டிசம்பர் 26ஆம் நாள் யாரும் எளிதில் மறந்துவிட முடியாத ஒருநாள். ஆழிக்கூத்து அரங்கேறி ஆயிராமாயிரம் உயிரைக் காவு கொண்ட கருப்புநாள். நான் மயிரிழையில் தப்பிப்பிழைத்த நாள். அன்று நானும் மனைவியும் மலேசிய எழுத்தாளர் சங்கத்தின் சுற்றுலா நண்பர்கள் 38 பேரும் சென்னையிலிருந்து ஊர் திரும்ப ஆயத்திமாகிக்கொண்டிருக்கிறோம். டிசம்பர் 25ஆம் நாளை முடிவுக்குக் கொண்டுவரும் முன்னர் கடைசி கடைசி என்று பொருட்கள் வாங்க பாண்டி பஜாரில் இருக்கும்போதே மறுநாள் நிகழவிருக்கும் ஊழிக்கூத்து அசம்பவிதத்துக்கான அறிகுறிகள் அப்பொழுது  நிகழ்ந்தது. என் மனைவி சேலை துணிமணிகள் வாங்க வேறு திசைக்கு போய்விட்டிருந்தாள். நானும் சில நண்பர்களும் நூல்கள் வாங்கக் கிளம்பிவிட்டிருந்தோம். இப்படி ஆளாளுக்கு ஒரு திசையில் பிரிந்து கிடக்கிறோம். கடையைத் தேடி அலைந்த நேரத்தில் நாங்கள் அலைந்து திரிந்துகொண்டிருக்கும் சாலையில் கிட்டதட்ட இரண்டாயிரம் எண்ணிக்கைக்கு மேலான மனிதக்கூட்டம் திம...

அக்டோபஸ் கவிதைகளும் அடர்ந்த கவித்துவமும்

13. நிழலாய்ப் பின்தொடரும் சாதிமை என்ற பேய்        மூன்றாண்டுகளுக்கு முன்னர் என் நண்பனின் மகனுக்குத் திருமணம் நிச்சயமாகியிருந்தது. காதல் திருமணம். எல்லாருக்கும் அழைப்பிதழ் கொடுத்து முடித்திருந்தான். அப்போது அவன் முகம் அன்றலர்ந்த தாமரையாய் பூத்திருந்தது. தான் விரும்பிய பெண்ணே தன் மணவாழ்க்கையை அலங்கரிக்கப்போகிறாள் என்ற  மகிழ்ச்சியில் அவன் உச்சாணிக்கொம்பில் இருந்தான். நான் மட்டும் சிங்கப்பூரில் நடக்கும் திருமணத்துப் போவதற்குப் பேருந்து டிக்கெட் எடுத்து வைத்துக்கொண்டேன். திருமணத்துக்கு இன்னும் இரண்டு நாட்களே எஞ்சியிருந்த ஒரு இரவுப்பொழுதில் எங்களுக்கு  மாப்பிள்ளையின் தந்தையிடமிருந்து ஒரு அழைப்பு வந்திருந்தது. அன்று அவர் கூறிய தகவல் தந்த அதிர்ச்சியிலிருந்து வெகு நாட்கள் என்னால் மீள முடியவில்லை. திருமணம் நிறுத்தப்பட்டுவிட்டது என்ற செய்திதான் அது. என்ன காரணம் என்று வினவினேன். பெண் தாழ்ந்த சாதியைச் சேர்ந்தவள் என்றார். “இதற்குப் பையன் என்ன சொன்னான், காதல் திருமணம்தானே?” என்று கேட்டேன். “பையன் மனச அப்படி இப்படின்னு மாத்திட்டோம்,” என்றார். “பெண் வீட்டார் எதிர்ப்ப...

உடைந்து உருப்பெறும் சொற்களும் , அது தரும் சுகானுபவமும்.

                 இவன்தான் ஆக இளையவன் -சூர்யா           என் வீடு குழந்தைகள் நிறைந்த வீடு. என் மகள் என் மகன் வழிப்பிள்ளைகள் மொத்தம் ஐவர். 'நாம் அறுவரானோம்'  எனும் பிரகடனத்தோடு என் இளைய மகன் குழந்தை இந்த டிசம்பரில் இவ்வுலகம் காண வருகிறது. வருக வருகவென வரவேற்கக் காத்திருக்கிறோம் எல்லாரும். குழந்தைகள் இருக்கும் உலகம் குடும்பங்களுக்குப் புதிதல்ல என்றாலும் ஒவ்வொரு குடும்பத்திலும் குழந்தைகள் ப்ற்றிச் சொல்வதற்கு எண்ணிக்கையற்ற கதைகள் வற்றாத நதிபோல சம்பவங்களால் நிறைந்து  கொண்டேதான் இருக்கின்றது. அவை சுவையானவை- சுகமானவை . திகட்டத் திகட்ட  உண்ணச்சொல்லும் சொல் உணவு நிறைந்தவை. ஆகக் கடைசி பேரனுக்கு இப்போதுதான் இரண்டு வயதைத் தாண்டுகிறது. அவன் இரண்டு வயதுக்குள் சில சொற்களை சொல்ல ஆரம்பித்துவிட்டான்.குழந்தைகளற்ற வீட்டை விட , அவை இருக்கும் வீட்டில் பேச்சு சீக்கிரம் பிடிபட்டு விடும்  மழலைகளுக்கு. காதுகள்தான் சொற்களை உள்வாங்கி சேகரம் செய்து மூளை முதிர்ச்சி பெறும...

விடுபட்ட நினைவுகள்-எஸ்ராவுடனான சந்திப்பில்

1. கோலாலம்பூரின் மஸ்ஜிட் இந்தியா பேரங்காடி ஒன்றில் இரண்டுமணி நேரத்துக்கு மேல் அலைந்து கொண்டிருந்தபோது களைப்பாய் இருந்தால் சொல்லுங்கள் ஓய்வெடுக்காலாம் என்றார். "நானும் ஒரு ஸ்போர்ட்ஸ் மேன்தான். இன்றைக்கும் மலை ஏறும் பயிற்சி செய்கிறேன்," என்றேன். பின்னர் தொடர்கிறது எங்கள் பேரங்காடித் தேடல். பல பொருட்களின் விலை இந்தியாவை விட இங்கே அதிகம் என்றார். சில பொருட்களின் விலை வேறுபாட்டை அவரால் சொல்ல முடிகிறது.  ஒரு காணொலி நாடா விற்கும் கடையில் நின்று காணொலி நாடாக்களை அலசினார். பின்னர் ஒன்றைத் தேர்ந்தெடுத்தார். அது யாஸ்மின் அஹமட்டின் செப்பிட் திரைப் படம். (யாஸ்மின் தன்னுடைய ஐம்பத்தோராவது வயதில் ஒருதிரைப்படம் குறித்து பேசிக்கொண்டிருந்தபோது மாரடைப்பால் மரணமுற்றார்). மாலேசியப் படங்களில் யாஸ்மினின் படங்கள் வித்தியாசமானவை என்றார். உலகத்திரைப்படங்கள் பார்ப்பதில் மிகுந்த ஆரவம் உள்ளவர் எஸ்ரா. நான் கடைசியாகப் படித்து முடித்த 'காற்றில் யாரோ நடக்கிறார்கள்" நூலில் உலகத்திரைப்படங்கள் குறித்து மிக விரிவாக பதிவு செய்துள்ளார். படிக்க வேண்டிய நூல். ஒரு நண்பர் யாசின் பற்றி என்னிடம் கூறியுள்ளார். ...

நள்ளிரவில் எஸ்ராவுடன் ஒரு கோப்பை தேநீர் (பாகம் 2)

           அந்த வெட்ட வெளிக்கடையில் வெகு நேரம் பேசிக்கொண்டிருந்தோம். பேச்சின் திசை எங்கெங்கோ போனாலும் திரும்ப இலக்கியத்தின் மீதுதான் மையமிட்டிருந்தது. கடையிலிருந்து வெளியாகும் போது மணி ஒன்றைத் தாண்டியிருக்கும்.மீண்டும் நடந்தே அறைக்குச் சென்றோம்.  எங்கள் பேச்சு மீண்டும் தொடர்ந்தது. "நீங்கள் எழுதிய புத்தகம் கொண்டு வந்தீர்களா" என்று வினவினேன். " ஒரு ஏழெட்டு வகையில் மூன்று நான்கு காப்பிகள் கொண்டு வந்தேன்" என்றார். அவற்றுள் பாதிக்குமேல் நான் படித்துவிட்டவை. அவர் வைத்திருந்ததில் 'மௌனியின் படைப்புகளும் அடங்கும். "மௌனியின் கதைகள் புரிந்து கொள்ள சிரமமாயிற்றே' என்றேன். "அப்படியெல்லாம் ஒன்றுமில்லை, நம்முடைய மன எப்பம்டி ஒரே சமயத்தில் பல இழைகளாக சிந்திக்கிறதோ, அதேபோலத்தான் அவர்கதைகளும் இயங்கும்" என்றார்."இப்போ நாம் பேசிக்கொண்டிருக்கும்போது எப்படி இன்னொரு இழைச் சிந்தனை வேறு ஒன்றுக்குத் தாவுகிறதோ,அது போலவே அவர் கதையும் தாவும். புரிந்துகொள்வது சிரமமில்லை" என்றார். மௌனியைப் பற்றி நான் வரைந்துவைத்த சித்திரம் இப்போது தெளிவாகத் தெரிந்தது. இதற்க...