Skip to main content

Posts

அன்னை என்ற தீபம் அணையாது எரிகிறது

அக்டோபஸ் கவிதைகளும் அடர்ந்த கவித்துவமும். அம்மா என்ற தலைப்பில் கவிதை கேட்டார்கள் ‘அம்மா’ என்றேன் உடனே, கேட்டது அம்மாவாக இருந்தால் இன்னும் சின்னதாய் சொல்வேன் ‘நீ’.....என்று                     ...தாஜ்       இந்தக்கவிதை ஆனந்தவிகடன் இதழில் 2002 ஆம் ஆண்டு நடத்திய கவிதைப்போட்டியில் எழுபத்தைந்து சிறந்த கவிதைகளில் ஒன்றாக பதிவாகியது. கடுகளவே இருக்கும் இந்தக் கவிதை மனதுக்குள் பூமழை பொழிவதை உணரமுடிகிறது.  வெப்பம் உரசியதும் நெகிழ்ந்துருகும் நெய்யைப்போல அம்மா என்ற சொல்லுக்குள் அன்பும் பாசமும் பிரவாகமாவதைத் தவிர்க்க முடிவதில்லை. வெறும் சொல்தானே என்று புறந்தள்ள முடிவதில்லை, அதற்குள் உறைந்திருக்கும் உணர்வும் உயிர்த்துடிப்புள்ளவை!. எல்லாச் சொற்களுக்கும் தாய்ச்சொல்லாக தன்னை நிறுவிக்கொள்கிறது அம்மா என்ற அற்புதச் சொல். உயிரெ¦ழுத்தும், மெய்யெழுத்தும் உயிர்மெய்யை உருவாக்குவதுபோல அம்மா என்ற ஒற்றைச் சொல்லுக்குள் உயிரும்    மெய்யும் இரண்டரக் கலந்து நிற்கிறது.  ...

ஆக்டோபஸ் கவிதைகளும் அடர்ந்த கவித்துவமும்

  வற்றாது ஒடும் நதி   கனத்த இதயத்தோடுதான் நான் பணி ஓய்வு பெறும் நாளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.  இனி அத்துவான வெளியைப்பொல சலனமற்று விரிந்திருக்கும் வெறுமையான நாட்களை எப்படி எதிர்கொள்ளப்போகிறேன் என்ற இனம் புரியாத அச்சம் மனதுக்குள் கசியத்துவங்கியிருந்தது. ஆனால் ஓய்வு பெற்ற ஓரிரு நாட்களிலேயே அந்த அச்சம் உச்சி வெயிலின் நிழலென சுருங்கிவிட்டிருந்தது! எனக்கு வாசிக்கும் பழக்கமும் எழுதும் பழக்கமும் என்னோடு கவச குண்டலமாய் ஒட்டிக்கொண்டிருந்ததால் பணி ஓய்வு பெற்ற வெறுமையான நாட்களை எளிதில் கடந்து செல்ல  முடிந்திருந்தது. கலை சார்ந்து இயங்காதவர்களின் வாழ்க்கையின் வெறுமையான நாட்களை எளிதில் கடந்துவிடும் உபாயம் பெற்றிருப்பார்களா என்பதில் என் மனதில் தீராத சந்தேகம் வடிந்தபடி இருக்கிறது. என் நீண்ட கால ஆசிரியர் பணியை செம்மையாகச் செய்ததுண்டா என்ற வினா  மின்சார, தண்ணீர், தொலைபேசி கட்டண பில் போல  என்னை விடாமல் பின் தொடர்ந்தவண்ணம் உள்ளது. பள்ளியில் நான் போட்ட திட்டங்கள் பல நிறைவேறியும், சில வற்றில் தோல்வியும், முழுமூச்சாய் ஈடுபடாததால் சிலவற்றில் நிறைவின்மையும் உண்டானதுண்டு. தலைமை ஆ...

எப்போது தருவாய் வரம்?

எப்போது வரம் தருவாய்? வெளியே இருந்துகொண்டு ஒரு அழகிய வீட்டைப் பார்ப்பது போலவே உன்னைக் பார்க்கத் துவங்கினேன் அப்போது அந்நியம்தான் அந்த வீட்டுக்கும் எனக்குமான தொடர்பு என்பது என் கண்களுக்கும் வசீகர வீட்டுக்குமான இடைவெளி மட்டுமே நாம்  நட்பாகிப் போன  தொடக்க நாட்களில் ஒரு இடைவெளி எப்போதுமே நம் உள்முகத்தை ஒளித்து விளையாடியது வார்த்தைகளுக்கு ஒப்பனை செய்து களைத்த போதெல்லாம் எதுதான் நிஜமென மௌனமாய் அழுதோம் நாம் சந்திக்கும் ஒவ்வொரு தருணத்திலும் ஏதேதோ பேசுகிறோம் காதலை தணிக்கை செய்துவிட்டு தணிக்கை செய்ததுவும் காதல்தானே என்று தெரியாமல் நாம் பேசிக்கொண்டிருக்கும்போது தொடர்பற்றிருந்தோம் பேசாதபோதுதான் தொடர்பில் இருந்தோம் நம் காதலை மென்றபடி வானத்தில் திடீரெனெ நட்சத்திரமொன்று இருளைக் கிழித்தது போல உன் ஒளி என்னை இருளாக்கியது வெளிச்சத்துக்காக நான் வேண்டி நின்ற போது இடைவெளி குறைத்து என்னுள் மின்னல் ஒன்றைச் பாய்ச்சினாய் நட்சத்திர ஒளியால் திணறடிக்கப்பட்டு  மீளாத போது மின்னலாய்த் தாக்கி என்னை ஊனமாக்கி விட்டிருக்கிறாய் நான் மீண்டும் பழைய நானாக வேண்டும் இந்த நக்கீரனை எரித்த ...
நிராகரித்தலும், நிராகரிக்கப் படுதலும்- பிச்சைப் பாத்திரம் கதை ஒரு பார்வை                                பாவையின் ‘பிச்சைப் பாத்திரம் சிறுகதை மலேசியாவில் அரிதாக சொல்லப்படும் கதை வகைமையில் ஒன்று. ஏறத்தாழ துறவறமே இல்லறத்தைவிட மேலானது என்று சொல்ல வந்த கதை. கிட்டதட்ட 100 விகிதம் நடைமுறை   வாழ்க்கையையைத் திரும்பத் திருமப படம்பிடித்துக்காட்டும் வரட்சியான கதைக் களத்திலிருந்து சற்று விலகி துறவு பற்றிப்பேச வந்ததை சற்று ஆறுதல் தருகிறது. அதற்காகப் பாராட்டுகள்.        ஏகபோக சொத்துக்கும் அதிபதியாகப் போகிறவனின் மகன்   துறவறத்தில்தான் தான் முழுமையடைவதாகச் சொல்வதை நிதானமாக , சொற்ப வார்த்தைகளுக்குள் சொல்வது வாசகமனத்தை கவர்கிறது. ஆனால் மகன் துறவறம் மேற்கொள்வதற்கான பின்புலக் கற்பிதம் எங்கேயும் காட்டப் படவில்லை. வாசகனே இட்டு நிரப்பிக்கொள்ளட்டும் என்று வெற்றுக்கோடுகளை விட்டிருக்கலாம் கதாசிரியர் .ஆனாலும் சொல்ல வேண்டியதைச் சொல்...

ஓடாதே -கதை விமர்சனம்

22.7.12ல் ஞாயிறு தினக்கதிரில் பிரசுரமான ஓடாதே கதையைப் பற்றி என் பார்வை  ஓடாதே கதையை ஒரு கட்டாயத்தின் பேரில், ஒரு ஆர்வமற்ற மனநிலையோடுதான் வாசிக்க ஆரம்பித்தேன். ஆனால் கதையைத் தொடங்குவதற்கு முன்னாலேயே பொதுவாகவே புதியவர்களின் படைப்பை வாசிக்கும்போது  தோன்றும் முன்சலிப்பு, கதையைத் தொடங்கியதும் பட்டென விலகிக்கொண்டது. தொடங்கியபோது உண்டான ஆர்வநிலை முடியும் வரை அகலவே இல்லை என்பதிலிருந்தே இக்கதை மிக அருகில் வந்தமர்ந்து என்னோடு கைகோர்த்துக்கொண்டு கடைசிவரை பயணித்தது.  நேர்க்கோட்டு உத்தியையச் சார்ந்து கதையைப் பின்னியிருக்கிறார் ஐஸ்வரி. Linear என்று சொல்லக்கூடிய நேர்க்கோட்டு உத்தி மிகப் பழைய கதைசொல்லும் பாணி. ஆனாலும் இக்கதைக்கு (கருவுக்கு) இவ்வுத்தியின் செய்நேர்த்தி  மிகப் பொருத்தமாவே அமைந்துருந்தது. மொழி நடையின் அழகியல் இதற்குக் கூடுதல் சான்று.    ருக்குமணி டீச்சரில் தொடங்கி அவரிடமே ஒரு அதிரடி முடிவோடு வந்து நிற்கிறது கதை.    பொதுவாகப் பள்ளிகளில் ருக்குமணிச் டீச்சர்களின் சாகசங்களால் சமூகத்தில்  சாதனையாளர்களாக வரவேண்டியவர்களை எண்ணற்றவர்களை மிகச் சாதூர்யமா...

பேயச்சம்

கழுத்தைக்கடித்து குருதியுறுஞ்சும் பேயாகவே மாரியம்மன் கோயிலேறும் சடக்கில் தலைகோதி நின்ற புளிய மரம் அச்சுறுத்திய காலம் ஒன்றுண்டு அம்மாதான் சொல்வாள் ரத்தக் காட்டேறி மரமென்று  பழம் பறிக்க பள்ளி முடிந்து கழியெறியும் போதெல்லாம் அதன் குச்சியொடித்து விலாசும்போதே தோலுறித்த ரத்தத் தடையங்கள் உறுதிப் படுத்தியது உண்மைதானென்று வெயில் விரட்டும் அதன் குளிர் நிழலில் வியர்வை நனைய விளையாடும் போதில் பேய் நினைவு மெல்ல ஒதுங்கத் தொடங்கியது நோய் நொடி விரட்டும் அதன் இலை மருத்தவம் பார்த்துப் பழகி நன்பகல் நிழலாய் கறையத்தொடங்கியது கொஞ்சம் மாநுட நலம் காக்கும் கரிசனை நோக்கம் மரத்தை நேசிக்க நேர்ந்தது கருவாட்டுக் குழம்புக்கும் ஆத்துமீன் கறிக்கும் புளிப்பு  சுவை கூட்டியபோதும் பயம் பறந்தோடி பாசம் மருவியது காய்ந்து சுல்லிகள் நின்றெரியும் தீயில் தோளில் ஒட்டா புளியம் பழமாய் அச்சம் ஒட்டாது ஓடியது கிளையேறி ஒளிந்து விளையாடும் விறுவிறுப்பில் கிலி அருதியாய்  அழிந்தொழிந்தது கல்லெறிந்து கல்லெறிந்தே காட்டேரியை விரட்டி அடித்தோமோ என்னவோ கித்தா மரங்கள் இலைய...
             (எனக்கு பிறந்த நாள் வாழ்த்து சொன்னவர்களுக்கு இக்கவிதையைக் சமர்ப்பிக்கிறேன். )   -63 எனக்கின்று -63 நீங்கள் வாழ்த்துக்கூறி என்னை மீட்டுருவாக்கியதால் என்னைச்சுற்றி ஆனந்த ஒளிவட்டம் என்னாளும் மிதந்திருப்பதால் என் வெற்றி இன்னதென்று என் பிரிய எதிரிகள் இனங்காட்டுவதால் என்னைச் சூழ்ந்த காற்று தீபத்தை வேண்டுமானால் தீர்த்துக் கட்டலாம் தீயை அல்லவே... என்பதால் என் நரை என் வரையறை இதுவென்று வழி சொல்வதால் அது என்னை மென்மேலும் வெள்ளையாக்குவதால் என் முதுமை என் இளமையிலிருந்தே பிறந்ததால் என் அனுபவம் கடவுளாகி என்னைக் கைப்பிடித்து இட்டுச்செல்வதால் தட்டுகின்ற கதவுகள் இன்றில்லையென்றாலும் என்றாவது திறந்தே தீரும் என்பதால் கர்ணன் தொடையைத் துளைத்த கவலை வண்டு என் கவனத்துக்கு அப்பால் இருப்பதால் இந்தக் கவிதைக்கான கரு இன்று என்னிலிருந்து வித்தானதால் மரணம் மறுபிறப்புக்கான வாசலைத் திறந்துவிட்டதால் இன்று எனக்கு மைனஸ் 63 தானே?.