மாடுகள் மலைகள் ஏரிகள்~ 9
அதிகாலையில் பனிமலைக்கு எல்லாரும் கிளம்பியபோது நான் அவர்களோடு நான் போகவில்லை. என் செவிகள் சில ஆண்டுகளுக்கு முன்னர் சில தொல்லைகளைக் கொடுத்து வந்தது. கண் காது மூக்கு டாக்டர் செ விப்பறையில் சிறு துளை விழுந்திருக்கிறது, அதனால் சத்தம் உள்ள இடத்தைத் தவிர்க்கும் படி அறிவுறுத்தினார். நான் தொலைக் காட்சி கூட பார்ப்பதில்லை. சினிமா தியேட்டர்கள் அதை விட மோசம். கொஞ்சம் கவனமாக இருந்ததால் செவிப்பறை கூடி வந்தது. உலங்கு வானூர்தி அதிக ஒலி எழுப்பக் கூடியது.எனவே தவிர்த்தேன். ஆனால் எல்லாருக்கும் செவி பாதுகாப்பு கருவி கொடுத்தார்கள் என்றார்கள். நான் போகவில்லை என்றதும், அன்றைக்கான காலை பகல் உணவை நான் தயாரிக்கும்படி ஆனது. முதல் நாள் வாங்கி வைத்த இறாலைப் சம்பல் செய்தேன். வெள்ளரிக்காயை (9 ரிங்கிட்) முட்டை கலந்து சூப் செய்தேன். பகலுணவு உண்ணும் போது சாப்பிடச் சாப்பிட சாப்பிட்டுகிட்டெ இருக்கணும் தோணுது என்றார்கள். ஒரு கலைஞனுக்கு எல்லாமே எளிதில் கைவரும்.
பனிமலைக்குப் போய் வந்தவர்கள் மறக்க முடியாத அனுபவம் என்றார்கள்.பாதங்கள் பதியப் பதிய வெண்பனி பூவாய் முகிழ்ந்தது என்றார்கள். சரி நமக்குக் கொடுத்து வைத்தது அவ்வளவுதான்! சிக்கிம் மலையுச்சியிலிம் பெய்ஜிங்கிலும் நான் பனிமலையில் சருக்கி விழுந்திருக்கிறேன்.
ஆனால் அதவிட , அன்று காலையிலேயெ உலகில் மிக முக்கியமான இடமான கிலேசியர் அருகில் போய் பார்க்கக் கிடைதத்து.Franz Joseph Glacier என்ற பெயர் மிக பிரசித்தமான பனிக்கட்டி உறைந்த மலைப் பள்ளத்தாக்கு. உலகில் மிகச் சில இடங்களில்தான் இதனைப் பார்க்கலாம். மலை பள்ளத்தாக்கில் கெட்டிதட்டிப்போய் மூடிக்கிடக்கும் ஐஸ் கட்டி மலை இடுக்கு அது. பல்லாயிரம் ஆண்டுகளாய் கெட்டிதட்டிப்போன ஐஸ் அசையாமல் உருகாமல் அப்படியே கிடக்கிறது.
அதன் உறைத்தன்மை உலகம் வெப்பமாதல் காரணமாக வெகுவாகப் பாதிக்கப் பட்டிருப்பதாக அறிவியல் அறிஞர்கள் எச்சரிக்கிறார்கள். அதனை நேரடியாக பிரான்ஸ் ஜோசப் உறைப்பனிமலை உருகிக் கறைவதைக் காணமுடிகிறது. நான் அந்த மலையுச்சிக்கு நடந்து போகும்போது உறைப்பனி உருகி ஐஸ்கட்டியாக அருவியில் உருண்டு வருவதைப் பார்த்தேன் . கரையோரம் கூட ஐஸ்கட்டிகள் ஒதுங்கிக் கிடந்ததைப் பல இடங்களில் பார்த்தேன். ஆனால் கிலேசியருக்குப் பெரிதாக பாதிப்பு ஏதும் நேராது என்று விக்கிப்பிடியா சொல்கிறது. அதனை என் சிற்றறிவு கொண்டும் யோசித்துப் பார்க்கிறேன். பூமி வெப்பமாதல் மழை நிறைவாகப் பெய்யும் போது உறைப்பனி பாதிக்கப்படுவதில்லை. ஏனெனில் காடுகள் சூழ்ந்து மழைக்கான வரத்தை உறுதி செய்கிறது. இப்போதெல்லாம் மழை போதுமளவுக்குப் பெய்வதைப் பார்க்கமுடியும். அதே வேளையில் மலை உச்சி சிதோஷ்ண நிலையை சீராக வைத்திருக்க உதவுகிறது. உறைப்பனி உடைய உடைய மழைநீர் அதன் உறைத்தன்மையைச் சமன் செய்கிறது . எனவே மலை பள்ளத்தாக்கின் உறைப்பனி உருகுவதால் கடல் மட்டம் உயராது.
ஆனால் வட தென் துருவ கடல் மட்டம் உறைப்பனி உருகி உயர வாய்ப்புண்டு. ஏனெனில் பூமி வெப்பமாகிறது. கடல் விரிந்து பரந்து சூரிய ஒலிக்கு முகம் காட்டுகிறது. வட தென் துருவங்களில் காடுகள் இல்லை. அதனால் மழை பெய்தல் குறைகிறது . இந்த இரு காராணிகள் கெட்டிதட்டிப் போய்க் கிடக்கும் கடலின் மேல்மட்ட ஐஸ்கட்டிகள் உடைந்து உருகிக் கொண்டே இருக்கிறது. அதனால் என்ன ஆகும்? தீவுக் கூட்டங்கள் மூழ்கும். உயிர்களுக்கு பெரும் ஆபத்து நேர்ந்து கொண்டே இருக்கிறது. மழைக்காடுகள் தான் மனிதர்க்குக் கண்கண்ட தெய்வம். தெய்வத்தைக் குலைக்காதே!
பிராண்ஸ் ஜோசப் உறைப்பனியிடம் 12 கிலோ மீட்டர் நீளம். அது போக்ஸ் (fox}உறைப்பனியிடத்தோடு இணைந்து 20 கிலோ மீட்டர் நீளமாகக் காட்டுகிறது. அதனை வை ஹு நதி என்று பெயரிட்டிருக்கிறார்கள்.
பயணம் வந்த நாள் தொட்டு எனக்கு நடைப் பயிற்சி இல்லை. அதனால் என் இனிப்பளவு உயர்ந்திருக்கலாம். எனவே பிரான்ஸ் ஜோசப் கிலேசியருக்கு நடந்து போய்ப் பார்க்கும் வாய்ப்பை உபயோகித்துக் கொண்டேன். போக வர இரண்டு மணி நேரம் ஆகிறது. நல்ல நடை. குளிரானதால் வியர்க்கவில்லை.
அங்கிருந்து பூனைகாய்க்கி என்ற தங்குமிடத்துக்குப் பயணம். மூன்று மணி நேர நீண்ட பயணம் அது. பெரிய பெரிய நகரங்களுக்கு இடையே சின்னச் சின்ன ஊர்கள் இருக்கின்றன. டி அனா என்னும் ஊரில் ஒரு முட்டையின் விலை 5 டாலர்கள். அதாவது 15 ரிங்கிட். ஆனால் பேரங்காடிகளில் 12 முட்டைகளாக வாங்கினால் ஒரு முட்டையின் விலை 1.50 ரிங்கி ட்டாகிறது.
பூனாய்க் காக்கியில் இன்னொரு அதிசயம் கடற்கரை பாறைகள். அதனை பேன் கேக் கடற்பாறை என்கிறார்கள் . அங்கேதான் ஒரு வெள்ளையன் என்னைத் திட்டினான்.
தொடரும்...

கரை ஓரத்தில் வெள்ளை நிறமுடையவை ஐஸ்கட்டிகள் |

Comments