Skip to main content

மாடுகள் மலைகள் ஏரிகள் ~ இறுதித் தொடர் நியூசிலாந்து பயண அனுபவம்

மாடுகள் மலைகள் ஏரிகள்~10 (இறுதித் தொடர்)

பூனாய்காக்கி ஒரு சிற்றூர்தான். சாலையோரத்தில்  ஒரே ஒரு நீண்ட கடைகள் வரிசை கொண்ட சிக்கனமான நிலப்பகுதி. ஆனால் அது பேன்கேக் வடிவிலான பாறைகளும், அதலபாதாள வலைகுடாக்களும் கொண்ட கடற்கரை ஊர். இதனைப் பார்க்கப் போய், கவனமற்றிருந்த  எத்தனை பேர் உயிரை விட்டிருப்பார்கள் என்று சொல்வதற்கு அங்கே சில எச்சரிக்கை வாக்கியங்கள் எழுதப்பட்டிருந்தன. அதில் மிகவும் துல்லியமான, படிமங்களை விரித்து, அச்சுறுத்தவல்ல ஒரு வாக்கியம், "ஒரே ஒரு புகைப் படத்துக்காக, உயிரை இழக்கும் முட்டாளா நீங்கள்' என்பது. ஆமாம் செல்பி தம்படம் என்ற பெயரில் நடக்கும் கோமாளிக் கூத்தை மலேசியாவில் நிறையவே காணலாம். சில பெண்கள்  குறிப்பாக இந்த தம்படம் எடுப்பதில் தங்களைக் கேலிக் கூத்தாக்கிக் கொண்டிருப்பதைப் பார்க்க முடியும். முன்னர் யாராவது எடுத்துத் தந்து அதனை படமாக்கிக் கொடுக்கும் பழைய தொழிநுட்பத்தை பன்மடங்கு தாண்டிவந்த ஒரு வசதிதாதான் இப்போதுள்ள கருவிகளும்  இந்தத் தம்படமும்.ஆனால் அதற்காக இத்தனை வகைப் படங்களா?  இத்தனை அலட்டல்களா?  தங்கள் அழகை தாங்களே ரசிக்கும் ஒரு உத்தி இது என்றாலும் கண்ணாடி என்ற் ஒன்றும் இருக்கிறதே! பொதுவில்   எதற்கு  உடற்பயிற்சியெல்லாம்? சில ஆண்டுகளுக்கு மு நான் காசி சென்றிருந்தேன். அங்கே என் படத்தை எடுக்க அவருக்கு என் படக்கருவுவியைக் கொடுத்து பதிவு செய்யச் சொன்னேன். படம் எடுத்த படங்களைக் கழுவிப் பார்த்தால் அதில் ஒரு பெரிய விழி அகோரமாய்ப் பதிவாகி இருந்தது. அது யாருடைய விழி என்றால் படம் எடுத்தாரே அவருடையது, என்ன ஆனது தெரியுமா? அவர் படக்கருவிவியை அவர் கண்பக்கம் வைத்து எடுத்துவிட்டார். எனவே தம்படம் தொழில்நுட்பம் அறிமுகமானதற்கு அவரே ஆதி முதல்வர். இதனை வரலாறு பேசும் ஒரு நாள்!.
 ஆடவர்களே    இந்தப் பெண்களிடம்' நீ அழகாய் இருக்கிறாய் எனக்கும் பயமாக இருக்கிறது' என்ற ஒரு  வார்த்தை   பேசுங்களேன். அவர்கள் அழகை அவர்களே எத்தனை முறைதான்  படம் எடுத்துக் கொள்வார்கள்?  இவை  தம்படங்களா? தம்பட்டப் படங்களா?
பேன் கேக் கட ற்கரையறுகே,     வேலி  போட்ட இடத்தைத் தாண்டி பாறையின் மேலேறி படம் பிடிக்கும் போது வழுக்கினால் அவ்வளவுதான். ஆள் அடையாளமில்லாமல் காணாமற் போய்விடுவர். அவ்வளவு ஆழம். பேயெனப்  பாறையில் மோதும் அலைகள் நம்மை அடித்து எங்கேயாவது செருகிவிடும்..



பூனாய்க்காக்கி என்று சிற்றூரிலிருந்து கடற்கரைக்கு ஒற்றையடிப்பாதை உள்நுழைகிறது, இரண்டு கிலோமீட்டர் நீளத்துக்கு நெடுக்க பேன் கேக் பாறைகள் தான். kuih berlapis இருக்கல்லாவா அதுபோன்ற நேர்த்தியாக செய்யப்பட்டதுபோன்ற வடிவமுள்ள பாறைகள். உலகில் எங்கேயுமே பார்க்க முடியாத வடிவ ஒழுங்கு கொண்ட பாறைகள். இந்த வடிவப்பாறைகள் உண்டானது    என்பதற்கான் மண்ணியல் (பாறையியல் என்று சொல்லலாமா?) ஆய்வாளர்கள் ஆய்ந்து சொல்லியிருக்கிறார்கள்.  கடந்த காலங்களில் வீசிய பெரும் அலைகளும் , வேகமான காற்றும் இதனை இப்படி ஆக்கியிருக்கிறது என்கின்றனர். ஆனால் அலைகளுக்கும்  காற்றுக்கும்  ஓவியக் கலை  தெரிந்திருக்குமா ?  இயற்கை தாயன்னையின் அழகு    ஒரு பிரபஞ்ச ஏற்பாடுதா  னே.     பாறையில் கலந்திருக்கும் சுண்ணாம்பு கற்களை இந்த அலைகளும் காற்றும் அறுத்து அறுத்து அதனை வரி வரியாக்கியிருக்கின்றன. நம்ப முடியாத அளவுக்கு நேர்த்தியும் நுட்மும் கலந்தவை அவை! காற் றும், நீரும் நெருப்பும் வெகுண்டால் உண்டாகும் பாதிப்பை சொல்ல ஆய்வாளர்கள் தேவையா என்ன. இந்த பேன் கேக் வடிவப் பாறைகளே போதும்!

வலைகுடா  அதல்பாதாளத்தில் ஓரிடத்தில் பெண்ணின் தலைமுடிபோல் அலையில் அலையாடுகிறது  நீண்ட   கூந்தல். இது ஒருவகை கடற்செடி. அலையில் பேய்போல அலைவதால்    பேய்க்  கூந்தல் என்கிறார்கள். பேய் அலையுமா ? மனம்தான் கட்டுக்கடங்காமல் அலையும். மனப்பேயைத்தான் பேய் என்கிறார்களோ.

இதனை முதல்நாள் அந்தி வேளையில் பார்த்துவிட்டு மறுநாள் காலையில் மீண்டும் வந்து பார்த்தோம். முதல் நாள் காலையில்தான் தெரியாமல் ஒரு வெள்ளைக் காரனை நோக்கி,  அப்போது   அவன் படம் எடுத்துக் கொண்டிருந்தான்,  நீ எந்த ஊர்க்காரன் என்றேன். அப்போது என் கைகள் அவன் தோளைத் தொட்டன.எல்லா வெள்ளையர்களும் நட்புறவை விரும்புபவர்கள் என்ற   நினைத்தது என் தப்புதான். வயிறு பெருத்து பீமன் மாதிரி இருந்தான்.  நான் கேட்ட உடனே,fuck off,அப்படின்னா, நான் அவன் வார்த்தையை சரியாக உள்வாங்காமல் யெஸ் வாட்  என்றேன். I said off from me  என்றான். நான் அதல பாதாளத்தின் விளிம்பில்  நின்று கொண்டிருந்தேன்.  வசதியாய் நின்றிருந்த   அவன் என்னைத் தள்ளினால் அவ்வளவு தான் நான். எனக்குச் சனிப் பெயெர்ச்சி நடக்கிறது என்று எண்ணி நான் விலகிப் போய்விட்டேன். ஆனால் பின்னர் அவனை ஒரு கெட்ட வார்த்தையிலாவது திட்ட வேண்டும் என்று தேடினேன். அப்போது   என் மருமகனும் அவர் நண்பரும் பக்கத்தில் இருந்தார்கள். அவர்கள் துணை பலத்தோடு அவனோடு நான் பொருத முடியும்.நானில்லை அவர்களை ஏவிவிட்டு. ஆனால் அவர் அதிர்ஸ்டம் அவன் தப்பிவிட்டான்.   அவனும் ' படமெடுப்பவன்' என்று தெரிந்திருந்தால் கேட்டிருக்க மாட்டேன்.

அன்று விடுதியைக் காலி செய்துவிட்டு மீண்டும் பிக்டனை நோக்கி பயணமானோம்.    பிக்டனில் தங்கிவிட்டு  மறுநாள்  காலை பெர்ரியைப் பிடித்து ஆக்லாந்துக்குச் செல்லவேண்டும். நீண்ட பயணம்தான்.




போகும் பாதையில்தான் தங்கச் சுரங்க ஒன்று தென்பட்டது. கிரைஸ்சர்ச்சைச் சுற்றி நிறைய தங்கச் சுரங்கங்கள் உள்ளன. இடையில் ஒருவன் தனியாக தங்க வேட்டையில் இறங்கியிருந்ததைப் பார்த்து அவனிடம் பேச்சு கொடுத்தோம். அவனுக்கு வயது 20கூட இல்லை. அவனிடம் ஏன் இந்த படிக்க வேண்டிய வயதில் என்று கேட்டோம். நான் நிறைய தங்கம் தோண்டி எடுத்துவிட்டேன் , இப்பழக்கம் என்னைப் பித்துபிடித்து அலைய வைத்துவிட்டது? அதிகம் படித்தாலும் இவ்வளவு என்னால் சம்பாதிக்க முடியாது, என்று சொன்னான்.

பூனாய்க் காக்கியைத் தாண்டி சில மைல்களில் தங்கம் தோண்டி எடுக்கும் இடம் ஒன்று இருந்தது. வலது பக்கம் வேனைத் திருப்பி நூறு மீட்டர் போனவுடம் 1800 களில் கிட்டதட்ட 1860லிருந்து செயல் பட்டுவரும் தங்கச் சுரங்கத்தைக் காட்டினான் அத்துறையில் வாழ்நாள் முழுவதும் செலவழித்த  ஒரு வெள்ளையன். இவனுடைய முன்னோர்கள் தங்கம் கண்டெடுக்கப் பட்ட தொடக்க காலத்தில் இங்கே வந்திருக்கிறார்கள். 1860 களில் ஒத்தாகோ நியூசிலாந்தில்தான் முதன் முதலில் தங்கம் இருப்பதைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். பிரிட்டனிலிருந்து பல்வேறு ஐரோப்பிய நடுகளிலிருந்தும் சீனாவிலிருந்தும் தங்கம் தேடி இங்கே வந்திருக்கிறார்கள்.  இதுவரை  2 மில்லியன் கிலோ தங்கத்துக்கு மேல் இந்த நாடுகள் தங்கள் நாட்டுக்கு கொண்டு சென்றுவிட்டார்கள். அவர்களில் பலர் இங்கேயே தங்கிவிட்டார்கள். நம் நாட்டுக்கு ஈயம் தேடி வந்த சீனர்கள் போல , கனிமவலம் தேட வந்த ஐரோப்பியர்கள் போல, அங்கேயும் தங்கம் தேடிப் போயிருக்கிறார்கள். எவ்வளவு சுரண்ட முடியும் அவ்வளவவையும் சுரண்டுவதுதான் ஐரோப்பியர்கள் சாமார்த்தியம்.  அதிகாரம் மூலம் அதனைச் செய்வார்கள்.
நான் படித்த வரை மிகக் கொடுமையான சம்பவம் பதினேழாம் பதினெட்டாம் நூற்றாண்டுகளில் இந்த இரக்கமேயற்ற பிரிட்டிஷ் காரர்கள் இந்தியாவிலுள்ள தாதுப் பொருட்களை தங்கள் நாட்டுக்குக் கடத்தி பல லட்சம் இந்தியர்களைப் பட்டினியால் சாக வைதததுதான்.  இதனைத் தாது பஞ்சம் என்று வரலாறு சொல்கிறது. இருக்க இடமின்றி, உணவி ன்றி சாலை யோரம் பசியால் வாடி சுருண்டு செத்தவர்கள் எண்ணிக்கை பல லட்சம். அவர்கள் சாவதைப் பார்த்துகொண்டே தங்களின் தாதுப்பொருளை ஏற்றுமதி செய்தவர்கள் இந்த பச்சாதாப மனமேயற்ற பிரிட்டிசார். இவ்வாறான   பஞ்சத்திலிருந்து பயந்து ஓடி வந்தவர்கள்தான்  சஞ்சிக்கூலிகள்  என்று நாம் சொல்லும் நம் மூதாதயர்கள். நூற்றுக்கணக்கான நாடுகளுக்கு பிரிட்டிஷ்காரகள் இவர்களை அழைத்துச் சென்று உழைப்பைச் சுரண்டியிருக்கிறார்கள். மொரிசியஸ் பிஜி, பர்மா. மலாயா, இஸ்ட் இண்டிஸ் என அவற்றுள் சில.

தங்கம் தேடி நியூ சிலாந்து, ஆஸ்திரேலியா சென்ற சீனர்களில் பலர் அங்கேயே தங்கி விட்டார்கள். பொருளாதாரத்தில் அவர்களுக்கு ஈடாகவும் இருக்கிறார்கள். தங்கள் மொழி அழியாமல் இருக்கவும் இன்றுள்ள சந்ததி சீன மொழி பேசுவதை பல கடைகளில் பார்த்தேன். ஆனால் இந்தியர்கள், குறிப்பாகத் தமிழர்கள் சென்ற இடங்களில் தமிழையும் மறந்து அடிமைப் போக்கையும் விடாது வாழ்பவர்க  ளாகத்தான் இன்று பார்க்கக் கிடைக்கிறது.

நான் மேலே சொன்ன தங்கச் சுரங்கத்தை பத்து டால்ர் கொடுத்து சுரங்கத்தினுள் நுழைந்து பார்த்தோம். இன்னும் கூட மண்ணில்  கலந்த தங்கத் துகல்கள் மின்னுவதைப் பார்க்க முடியும். தொடக்க காலத்தில் தங்க தோண்டி அவற்றைத் துகல்களாக சலித்து எடுக்கும் பழைய முறை தொழிநுட்பத்தைப் பார்க்க முடியும்.

அங்கிருந்து கிளம்பி மீண்டும் பிக்டன் அடைந்தோம். அங்கே அன்றிரவைக் கழித்துவிட்டு வெலிங்கடனில் கரையேறி ஆக் லாந்து சென்று கோலால ம்பூர் வந்தடைய வேண்டும்.

ஆனால் எங்களைப் பிடித்த சனிப்பெயர்ச்சி விட்டபாடில்லை. மழையானதால் துவைத்த துணிகள் காயவில்லை. ஐரோப்பிய வீடுகளின் உள்ளே கனல் அடுப்பு இருக்கும். குளிர் காலத்தில் உடலைச் சூடேற்ற. காயாத துணிகளைக் காயவைக்க என் மருமகன் வெளியே இருந்த விறகுகளை எடுத்துவது நெருப்பு மூட்டினார். துணிகளை அருகே வைத்து  காயப்போட்ட   சில நிமிடங்களில் கனல் அடுப்புக்கு  மேலே இருந்த கிரு ஸ்த்துமஸ் அலங்காரப் பொருடகள்  நெருப்புப் பிடித்துக் கொண்டது. சைரன் சத்தம் கேட்ட பிறகே நெருப்பு பரவுவதைப் பார்த்தோம்.வீட்டின் விட்டம் பலகையால் செய்யப் பட்டது. அது தீப்பிடிப்பதற்கு முன்னர் என் மருமகன் ஓடிப்போய் அந்த அலங்காரங்களை நீக்கினார். கையில் தீப்புண்ணோடு வீடு தப்பியது. மறுநாள் அந்த அலங்காரத்தை முன்பிருந்தது போலவே பொறுத்திவிட்டு நல்ல பிள்ளையாக வீடு வந்து சேர்ந்தோம்.  வீட்டு உரிமையாளரிடமிருந்து   இதுவரை புகார் வரவில்லை.

காலையிலேயே பிக்டனில் பெர்ரி பிடித்து, வெலிங்கடன் வந்து, மீண்டும் பழயபடி ஆக்லாந்துக்கு ஓடியது வேன். அன்றிரவு மீண்டும் கோலாலம்பூருக்கு பயணம். குறைந்தது 5000 மைல்கள் வேனில் பயணமா  கியிருப்பதாக மீட்டர் காட்டியது. அடேங்கப்பா?
முற்றும்.










Comments

Popular posts from this blog

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

கோ.புண்ணியவான். அதன் பிறகு இந்தப் புதிய வடிவத்துக்குப் பெரிதாய் வாசல் திறந்து வரவேற்பு நல்கியது புதிதாய்ச் சிறகு தரித்து நாடு முழுதும் பாட வந்த வானம்பாடி என்ற வார இதழ்.தமிழ் மலரில் ஒரு செய்தி ஆசிரியராகச்சேர்ந்த ஆதி.குமணன் என்ற இளம் பத்திரிகையாளர் பின்னாளில் வானம்பாடி வார இதழைத்தொடங்கி புதுக்கவிதையை வளர்த்தெடுப்பதில் பிரத்தியேகக் கவனத்தைச்செலுத்தினார் என்பதைச்சரித்திரம் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்து வைத்திருக்கிறது. இதில் மிக முக்கியமான செய்தி என்னவெனில் தமிழ் மலரில் பணியாற்றும்போதே புதுக்கவிதைக்குப் பதியம் போட்ட ஆதிகுமணன் பிற பத்திரிகைகள் கொடுக்கத்தயங்கிய அங்கீகாரத்தைத் தன் புதுப்பத்திரிகையான வானம்பாடியில் சிவப்புக்கம்பல வரவேற்பை நல்கினார்.அதன் பின்னர் வானம்பாடி புதுக்கவிதைக்கான இயக்கமாகவே மாறி அதனைத்தீவிரமாக வளர்த்தெடுக்க முயன்றது.புதுக்கவிதை வடிவம் பழைய மரபைக் கட்டுடைத்துத்தந்த சுதந்திரத்தைச் சாதகமாகப்பார்த்த பலர் இத்துறையில் தங்கள் எண்ணங்களை எழுத்துக்களாக வடித்தனர். சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, கு.கிருஷ்ணன், துரை.முனியாண்டி, பிரசன்னா, இளந்தமிழன், வே.ராஜேஸ்வரி, அருள்தாசன் போன...

வைரமுத்துவின் காலத்தால் அரிக்கப்படாத பாடல்கள்

கவிஞர் வைரமுத்து இந்த ஜூலை 13ல் மணிவிழா  கொண்டாடினார். மணி விழா எடுக்க எல்லாத் தகுதியும் கொண்டவர் கவிஞர். புதுக்கவிதை தமிழ்ப் படைப்புலகுக்கு அறிமுகமான  காலத்தில்   மரபிலிருந்து  புதுக்கவிதைக்குப் பெரும்  பாய்ச்சலை  நிகழ்த்தியவர்களில் மிக முக்கியமானவர்.  மரபுக்கவிதை காலமாற்றத்தால் கனிந்து உதிர்ந்து விழுந்து கொண்டிருக்கும் வேளையில் கவிதை இலக்கியம் தன்னை புதிய தோற்றத்துக்குத் தோலிருத்துக் கொண்டு புதிய சட்டையை மேலணிந்து கொள்ளத்துவங்கியது. இலக்கணச் சங்கிலியால் படைப்புச் சுதந்திரத்தை கட்டிப்போட்டிருந்த படைப்புத் தமிழ் மெல்லத் தளர்ந்து பின்னர் கட்டவிழ்த்து இலக்கணப் பிடியற்ற புதிய விடுதலைக்குத் தயாரானது. புதிய பரிமாணத்தில் புதிய கவிதை யுகத்தைப் படைக்க தொடங்கியிருந்தது. இது காலம் கொண்டுவந்த மாற்றம். மனிதர்களின் முன்தீர்மானம், திட்டமிட்ட செயல் என்றெல்லாம் சொல்வது காலம் வகுத்த விதிக்கு முரணாக சொல்லப்படும் கருத்தாக்கம். புதுக்கவிதை  மரபை பதியம்போட்டு வளர்த்த அப்போதிருந்த வானம்பாடிக் கவிஞர்களே புதுக்கவிதை இலக்கியத்தை ஒரு இயக்கமாக முன்னெடுத்தார்கள். கவிதை ...

தாய்மை- சிறுகதை

                                                                தாய்மை                                                      கோ.புண்ணியவான்                காரை என்னால் தொடர்ந்து செலுத்த முடியவில்லை. கார் என் கட்டுப்பாட்டிலிருந்து நழுவிய நுண்ணுணர்வு தாக்கியது. நான்  காரின் கட்டுப்பாடட்டுக்குள் அடிமையான தோல்வியை உணர்ந்தேன். அம்மா இல்லாத பின் இருக்கை, அவள் மூச்செறியும் ஓசையின்மை, குமாரு..என்று குரலெழுப்பாமை, என்னை அலைக்கழித்தது. என்னைச் சுதாரித்துக் காரை  ஓரங் கட்டினேன். காரை நிறுத்திவிட்டு  சாய்த்து சலனமற்றிருந்தேன்.                மனைவி என்னைத் தீர்க்காமாகப் பார்த்தாள்.   என் நிலைமையைப் புரிந்துக...