Skip to main content

Posts

சிறகுகள் -சிறுகதை

                                                          சிறகுகள்                                             கோ.புண்ணியவான்                                 அது ஒரு துர்ச் சம்பவம்.   தப்பிக்கவே முடியாத ஒரு மாயவலைக்குள் விழுந்து சிக்கிக் கொண்டது போல முடிந்துவிட்டிருந்தது . எல்லாம் கொண்டாட்ட கதியில்   நகர்ந்து கொண்டிருந்த தருணத்தில்   ஓர்   ஊழிப் பெரும் கொடுக்க...

எம்ஜியார் -சிறுகதை

                                                                                              எம்ஜியார்                     திரையை விலக்கி எட்டிப்பார்த்தார் எம்ஜியார். பாதி மண்டபம் நிறைந்து விட்டிருந்தது. எம்ஜியாருக்கு இப்போதே கைதட்டும் ஓசையும் ஆரவாரமும்   செவிமடல்களைச் சிலிர்க்கச் செய்தது. முன் வரிசை நாற்காலிகள் இன்னும் காலியாகவே கிடந்தன. சிறப்பு விருந்தினருக்கானது. மண்டபத்தை நாற்காலிகளை நிறைத்துக் கொண்டிருந்த ரசிகர்கள் உண்டாக்கும் உற...

பெண்ணே ஓடிப்போய்விடு....

            பெண்ணே ஓடிப்போய்விடு      தென்னாப்பிரிக்காவில், சோமாளியாவின்  ஒரு கிராமத்திலிருந்து ஒரு பதிமூன்று  வயதுப்பெண் அந்த ஊரைவிட்டே ஓடிப்போவதாக முதல் அத்தியாயம் விறுவிறுப்பாகத் தொடங்குகிறது. பாலைவன மணலின் தகிப்பு ஒருபுறம், தன்னை விரட்டி வருபவரிடம் சிக்கிக் கொள்வோமோ என்ற பீதி இன்னொரு புறம். செருப்புப் போடாத பாதங்களைச் சுடுமணல் சுட்டெரிக்க சுட்டெரிக்க ஓடி வருகிறாள். பாதங்கள் பழுத்துச் சிவந்து கொப்பளிக்கின்றன. சில இடங்கள் புதை மணல் காலை மேலிழுத்து மூச்செரிக்க பின்னால் திரும்பி பார்த்தவாறே தொடர்ந்து ஓட்டம் பிடிக்கிறாள்.  வெயில் தனலின் சூடு உதட்டை பாலம் பாலாமாக வெடித்து வெளிறச் செய்துவிடுகிறது.தண்ணீரைக் கெஞ்சுகிறது தொண்டை. வியர்வை முற்றிலும் நின்றுவிட்ட அளவுக்கு உடல்நீர் வற்றிவிடுகிறது. கால்கள் இற்றுப்போய்விட்ட தளர்ச்சி. ஆனால் அவள் ஓட்டத்தை மட்டும் நிறுத்தவில்லை. இப்படியே ஓடி ஓடி, ஓடிய களைப்பில், கால்கள் வலுவிழந்து உயிர் போனாலும் போகட்டுமே, அவர் கைகளில் மட்டும் சிக்கிவிடக்கூடாது என்ற பிடிவாதத்தில் நிற்காமல் ஓடி வருகிறாள்...

மாடுகள் மலைகள் ஏரிகள் ~ இறுதித் தொடர் நியூசிலாந்து பயண அனுபவம்

மாடுகள் மலைகள் ஏரிகள்~10 (இறுதித் தொடர்) பூனாய்காக்கி ஒரு சிற்றூர்தான். சாலையோரத்தில்  ஒரே ஒரு நீண்ட கடைகள் வரிசை கொண்ட சிக்கனமான நிலப்பகுதி. ஆனால் அது பேன்கேக் வடிவிலான பாறைகளும், அதலபாதாள வலைகுடாக்களும் கொண்ட கடற்கரை ஊர். இதனைப் பார்க்கப் போய், கவனமற்றிருந்த  எத்தனை பேர் உயிரை விட்டிருப்பார்கள் என்று சொல்வதற்கு அங்கே சில எச்சரிக்கை வாக்கியங்கள் எழுதப்பட்டிருந்தன. அதில் மிகவும் துல்லியமான, படிமங்களை விரித்து, அச்சுறுத்தவல்ல ஒரு வாக்கியம், "ஒரே ஒரு புகைப் படத்துக்காக, உயிரை இழக்கும் முட்டாளா நீங்கள்' என்பது. ஆமாம் செல்பி தம்படம் என்ற பெயரில் நடக்கும் கோமாளிக் கூத்தை மலேசியாவில் நிறையவே காணலாம். சில பெண்கள்  குறிப்பாக இந்த தம்படம் எடுப்பதில் தங்களைக் கேலிக் கூத்தாக்கிக் கொண்டிருப்பதைப் பார்க்க முடியும். முன்னர் யாராவது எடுத்துத் தந்து அதனை படமாக்கிக் கொடுக்கும் பழைய தொழிநுட்பத்தை பன்மடங்கு தாண்டிவந்த ஒரு வசதிதாதான் இப்போதுள்ள கருவிகளும்  இந்தத் தம்படமும்.ஆனால் அதற்காக இத்தனை வகைப் படங்களா?  இத்தனை அலட்டல்களா?  தங்கள் அழகை தாங்களே ரசிக்கும் ஒரு உத்தி இது எ...