Skip to main content

Posts

Showing posts from April 4, 2010

இளகிய மனமுள்ளோர் இதப்படிக்காதீங்க

சின்ன வயசுல ஒரு கதை சொல்வாங்கஇ ஏழு கடல் தாண்டி ஏழு மலை தாண்டி ஒரு அரக்கனோட உயிர்இ ஒரு கிளிட்ட இருக்குஇ அந்த கிளிய ஒரு ராஜகுமாரன் போய் கொன்னுட்டு தன்னோட ராணிய காப்பாத்துனான்னு… கேள்விபட்டிருக்கீங்களா? கண்டிப்பாகேள்விபட்டிருப்பீங்க. ஏன்னாஇ அது சின்ன வயசு கதை. இப்ப பெரிய வயசுல ஒரு கதை சொல்றேன். ஒரு பாலம் தாண்டிஇ ஒரு கோயில் இருக்கு. அந்த பாலத்துக்கு அடியில ஒரே தண்ணிஇ கண்ணுக்கு எட்டுன தூரம் வரை தண்ணி. அத கடல்னு சொல்றாங்க. அந்தக் கடல்ல என்ன நடந்தாலும் யாருக்கும் எதுவுமே தெரியாது. அந்தக் கோயில்ல ஒரு சாமி இருக்கு. அந்த சாமியால கூட உதவ முடியாம கடலுக்கு பக்கத்துல நிறைய மக்கள் இருக்காங்க. உங்களப் போலஇ என்னப் போல … சொல்லப் போனா ஒரு லட்சம் மக்கள். எந்த ராஜகுமாரனும் இதுவரைக்கும் வந்தபாடில்ல. இத கேள்விபட்டிருக்கீங்களா?. கண்டிப்பா கேள்வி பட்டிருக்கமாட்டீங்க. ஏன்னாஇ அந்த மக்களோட வாழ்க்கை முறைக்கும் நமக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. ஒரே ஒரு சம்மந்தம் வேணும்னா இருக்கும். அது என்னான்னு அப்புறம் சொல்றேன். இந்த கோயிலும்இ பாலமும்இ எங்க இருக்குன்னு யோசிச்சீங்களா? தெரியலேனா பரவாயில்லைஇ ரொம்ப யோசிக்...