Skip to main content

Posts

Showing posts from March 28, 2010

சினிமாட் தாக்கம்

சினிமா தாக்கம் சினிமாவைப் பற்றி தெரிந்து வைத்துக் கொள்ளும் அறிவு இதனை தாண்டி தமிழ் இலக்கிய படைப்புகளைப் படிக்க முன்வந்தோர் இன்றில்லையோ என்றெண்ணும் அளவுக்கு இன்றைய நிலைமை உள்ளது. ஜனரஞ்சகமான காட்சிகள்இ கருத்தைஇ கவனத்தைக் கவருவதில் அதிசயமில்லைதான். எழுத்தையும்இ படைப்பையும் அப்படி மாற்றுவதற்கான வாய்ப்புகள் வருமா? எப்படிப் படைத்தாலும் படிப்பவரின் எண்ணிக்கையில் ஏற்றமில்லை. ஊடகங்களின் ஆகிரமிப்பில் உணர்வுகளைத் தொலைத்து விட்டு நிற்கிறோமோ என்ற எண்ண அச்சுறுத்துகிறது. கடிதம் எழுதச் சொல்லிக்கொடுத்தால் ஒரு மாணவன் கேட்கிறான் எதற்கு இதைப் படிக்க வேண்டும் அலைபேசியில் அழைத்து விவரத்தைச் சொல்லி விடலாமே என்று. துரு துரு பையனின் கேள்விக்குத் திரு திரு என்று விழித்து விட்டு சொன்னேன் சோதனைக்கு வரும் படி என்று. அவனுக்கு என்ன சொல்லி உணர்த்த வேண்டும். எப்படி சொன்னால் புரிந்து கொள்வான் என்று தெரியவில்லை. இப்படி தான் சினிமாவும் என்று ஒரு இயல்பான பதிலைத் தயாராக வைத்துக் கொள்ள வேண்டுமோ? தெரியவில்லை. சினிமாவும் ஓர் இலக்கியமாக இருந்த காலம் ஒன்று உண்டு. ஆனால்இ அது பழங்கதையோ. நம்மவர்களுக்குச் சிறந்த பொழுது போக்கென்று ஒ...

ஒரு தடுப்புச்சுவரிலிருந்து.....

சார் இக்கதை அருமையாக இருந்தது. முக்கியமாய் கதையின் முடிவு விழியில் நீரை வரவழைத்து விட்டது. இன்றைய நிலையை உள்ளப்படியே கதையில் காட்டியிருக்கிறீர்கள். எங்கள் பக்கத்து வீட்டுக்காரரின் தடுப்புச்சுவர் போல் இருக்கிறதே என்று படித்தேன்இ மனங்களிலும் இவர்களால் எப்படிதான் சுவர் எழுப்பிக் கொள்ள முடிகிறதோ தெரியவில்லை. இந்த வரிகள் மிகவும் அழகாக அனுபவபூர்வமாக எழுதப்பட்டுள்ளது என்று நினைக்கிறேன். அவர்கள் கரிசனத்தோடு பேசப்பேச அவர்களின் புத்தாடையைவிட அழகாகிகொண்டே போனார்கள். வீட்டில் இருக்கும் தருணங்களில் சதா அணைத்தபடி இருந்தவளின் உடற் சூட்டுக்காக தவித்தாள். அநத அணைப்பு கிட்டாத தருணம் தன் வாழ்வின் புதிர் மிகுந்த தருணமாக மாறிக்கொண்டிருப்பதாக உணர்ந்தாள்.. ஒரு தாயின் தவிப்பை இந்த வரிகளில் அழகாக ஆழமாகப் பதிவு செய்திருக்கிறீர்கள். மஞ்சுளா