Skip to main content

Posts

Showing posts from July 17, 2011

அக்டோபஸ் கவிதைகளும் அடர்ந்த கவித்துவமும்

          6.  சுய வம்சத்தையே சூறையாடும் மனித வன்மம்          தாய் வயிற்றில் கருவுற்றது முதல் பிறந்து வளரும் குழந்தைப் பருவம் மிகுந்த கவனத்துக்குரியது. ஒன்பது மாதங்கள் கருவறையின் இருட்டறையில் சன்னஞ்சன்னமாய் வளர்ந்து அங்கிருந்து வெளிச்சத்துக்கு வந்தவுடன் அதன் பரிணாம வளர்ச்சியைப் பார்க்கும்போது பிரமிப்பான சில தகவல்களை மனித வாழ்வுக்குக் கிடைக்கின்றன. குழந்தை பிறந்த முன்று நான்கு மாதத்துக்குள் புரண்டு படுக்கும். ஆறு மாதத்துக்குள்  தவழும். பின்னர் மெல்ல முழந்தாள் போட்டு நகரும். ரெக்கை முளைத்த பறவைக்குஞ்சுகள் பறக்க முனைவதைப்போல! புரளும்போதும் தவழும்போதும் முழந்தாள் போடும் போதும் அதற்குண்டாகும் வலியை அது பொருட்படுத்துவதில்லை. டொக் டொக் என்று முட்டியை சிமிந்துத்தரையில் பதித்துப் பதித்து நடந்து வரும்போதே நம் முட்டிகள் வலிப்பதுபோல இருக்கும். பார்வை இழந்தவனின் உலகம் எப்படி இருக்கும் என்பதை உணர கொஞ்ச நேரம் கண்ணை மூடி நடந்தால்தான் உணர்ந்துகொள்வது போல , வலி எப்படிப்படது என்பதை நீங்கள் முட்டி போட்டு நடந்து பார்த்தால்தான் உணரமுடியும்.       வெற்றி காணும் வரை கஜினி முகம்மதுவைப் போல தன் முயற்சியிலிரு