7.ஜோர்ஜ்டௌன் அனைத்துலக இலக்கிய விழாவும் கரிகாற் சோழன் விருதும் கரிகாற் சோழன் சிறந்த நூலுக்கான விருது விழா மாலை 5.00 மணிக்குத் தொடங்கவிருந்தது. என் நூலுக்கு நான் விருது பெறப்போகிறேன் என்ற திகைப்போ பதட்டமோ நான் உணராமல் இருந்தது எனக்கே வியப்பாக இருந்தது. நான் என சிறுகதைகளுக்கும் நாவலுக்கும், கவிதைகளுக்கும் நிறைய பரிசுகளும் பெற்றிருக்கிறேன். அப்போதெல்லாம் உண்டான மகிழ்ச்சி இந்த விருதுக்கு ஏற்படவில்லை. அதற்கு ஒரு காரணம் இருந்ததை பின்னர் நான் உணர்ந்தேன். நான் எழுதிய கையறு நாவல் மலேசியாவிலும் சிங்கப்பூரிலும் தமிழகத்திலும் பரவலாகவே வாசிக்கப்பட்டு மதிப்புரைகளும் விமர்சனங்களும் பல்வேறு மின்னிதழ்களில் வந்த வண்ணம் இருந்தன. ஒரு நூலுக்குக் கிடைக்கும் மிகப்பெரிய அங்கீகாரம் அவை. அதுவே படைப்பாளனுக்குக் கிடைத்த மதிப்புமிக்க விருதுகள். அதன்பொருட்டே அதீத மகிழ்ச்சி உண்டாகவில்லை. நூலுக்கான வாசகர்/ விமர்சகர் மதிப்பை முன்னமேயே பெற்றுவிட்டதால் நான் என்னை இயல்பாக எதிர்கொண்டதாகத்தான் உணர்ந்தேன். என் முகநூலில் Punniavan Govindasamy அவற்றைப் பதிவு செய்து வைத்திருக்கிறேன். கரிகாற்சோழன் வ...
ஒவ்வொருமுறையும் நூல்கள் திறக்கப்படும்போது- நன்றிக் கடனாக அவை உங்களை அகலத் திறந்துவிடுகினறன. (ko.punniavan@gmail.com)