Skip to main content

Posts

Showing posts from April 3, 2011

9.பனிப்பொழிவில் 10 நாட்கள்

செங்க்கோட்டை வாசல்                                     மேலே  தாஜ் மஹால் வாசல் / செங்கோட்டை     அக்ராவில் அன்று இரவு தங்கிவிட்டு காலையில் காதல் சின்னத்தைப் பார்க்கத்திட்டம்.     அக்ரா ஒரு புராதன ஊர். பழமை மேய்ந்து கிடக்கிறது. தூசு மண்டிக்கிடக்கிறது. மக்கள் பிழைப்பதற்காத நடத்தும் போராட்டம் முதல் பார்வையிலேயே தெரிகிறது. சாலைகளில் நேரடி விற்பனையாளர்கள், வேற்று நாட்டவரை அடையாளங்கண்டு கைவினைப்பொருட்களை தலையில் கட்டப் போராடுகிறார்கள். அறுபது விகிதம் மக்கள் சுற்றுப்பயணிகளை நம்பியே வாழ்கிறார்கள். செங்கோட்டையும் தாஜ் மஹாலும்தான் ‘வாழ்வாதாரம்’.      அக்ரா தொடக்கத்தில் இந்து ராஜ்யமாகத்தான் இருந்திருக்கிறது. அது இந்து ராஜ்யத்தின் கீழ் இயங்கும் போது ஆக்ரபன் என்ற பெயரைப் பெற்றிருந்தது. மகாபார தத்தில் அக்ரபான் என்றே குறிப்பிடப்பட்டிருப்பது அக்ராதான் என்று நிறுவுகிறார்க...