முதல் முறை குடும்பத்தோடு தமிழ்நாட்டுப் பயணம் மேற்கொள்ளும் முனைப்பில் ஈடுபட்டிருந்த போது நெஞ்சில் இனமறியா பதற்றம் ஏறியிருந்தது. அந்நிய நாட்டுப் பயணம் என்பதால் புது இடத்தை, புதிய மனிதர்களை, புதிய கலாச்சாரத்தை எதிர்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தப் பதற்றம் அது. சென்னையில் யாரும் தெரிந்தவர்கள் இருந்தால் அவர்களை துணைக்கு அழைத்துக்கொள்ளலாம் என்ற எண்ணம் எழுந்தபோது தமிழ் நாட்டிலிருந்து மலேசியாவுக்கு வந்த ஒரு நடனக் கலைஞர்தான் நினைவுக்கு வந்தார். நடனமாட வந்தவர் எப்படியோ எங்களுக்குப் பழக்கமாகிப் போனார். அவர் கொடுத்த முகவரி அட்டையைத் தேடி எடுத்து அவரோடு தொடர்பு கொண்டோம். தொடர்பில் கிடைத்தார். நாங்கள் தமிழ்நாட்டுக்கு வருவது பற்றியும் அவர் உதவி தேவைப்படுவது பற்றியும் சொன்னபோது அவர் மகிழ்வோடு வரவேற்றார். கொஞ்சம் பதற்றம் குறைந்திருந்தது. உறுதியளித்ததுபோலவே விமானத் தளத்தில் காத்திருந்தார். விடுதிவரை வந்தார். பயணம் செய்யும் வழியில் இன்ன இடத்தையெல்லாம் சென்னயில் பார்க்கலாம் என்று சதா பேசிக்கொண்டே இருந்தார். வ...
ஒவ்வொருமுறையும் நூல்கள் திறக்கப்படும்போது- நன்றிக் கடனாக அவை உங்களை அகலத் திறந்துவிடுகினறன. (ko.punniavan@gmail.com)