Skip to main content

Posts

Showing posts from March 3, 2013

மரணம் குறித்த முன் சமிக்ஞைகள்

                                                         கவிஞர் பா.அ.சிவம்             பா. அ. சிவம் எனக்கு அறிமுகமானது தொலைபேசி வழியே. குரலை வைத்து அவர் முகம் இன்னெதென்று அனுமானிக்க முடியாததாக இருந்தது. ஆனாலும் மனம் அவர்க்கொரு முகத்தை வரைந்தபடி இருந்தது. அவர் பெயரை வைத்து , குரலை வைத்து அந்த ஓவியம் உருவாகிக்கொண்டிருந்தது. நமக்குப் பிரியமானவரின் முகத்தைப் பார்க்கும் ஆவலில் இப்படியான சித்திரங்கள் நம் மனம் வரைந்துகொள்வது இயல்புதானே! “மலாயாப் பல்கலைக் கழக பேரவைச் சிறுகதைப் போட்டிக்கு நீங்கள் எழுதிய சிறுகதை  பரிசுக்குத் தேர்வு பெற்றிருக்கிறது, நீங்கள் நிகழ்ச்சியில் அவசியம் கலந்துகொள்ள வேண்டும்” என்று அழைத்துச் சொல்லியிருந்தார். அந்த ஆண்டு அவர் பேரவையின்...

வேட்பாளர்கள் வீ.ஆ.வேவும் சிக்ஸ் ஸ்டாரும்

                                (3.3.2013 ஞாயிறு குரலில் வெளியானது) உள்ள படியே அவர் பெயர் அதுவல்ல. பிறப்புப் பத்திரத்தில் செங்கல்ராயன் என்ற கல்வெட்டு போல பத்திரமாகவே  பதிவாகியிருக்கிறது. கடந்த தேர்தலில் வீசிய அரசியல் புயலில் ஆளுங்கட்சி, வயசான கிழவனின் பல் ஆட்டங்கண்டது போல தேர்தல் முடிவுகள் அதிர்ச்சி வைத்திய வாக்களிப்பில் கொஞ்சம்.. கொஞ்சமென்ன ? அடித்தலமே ஆடித்தான் போனது.    மனிதன் இறந்தும் சீக்கிரத்தில் அழியாத ஒரே உறுப்பு பல் தானாம். அதுவே ஆட்டங்காணும் போது அல்லக்கை அகந்தை  நிலைகுலையாதா என்ன?    ஒரு அரை நூற்றாண்டாக ஆட்சி பீடத்தைச் சக்கரவர்த்தியின்  அகந்தையோடு பரிபாலனம் செய்ததற்கு  அது நல்ல பாடமென்றே பரவலாகப் பேசப்பட்டது. அந்தத் தேர்தல்தான் தமிழர்கள் நிறைய பேர் களமிறக்கி கரை சேர்ந்திருந்தது. அந்த அலையில்தான் செங்கல் ராயன் தன் பேரை மாற்றி வீர ஆவேச வேங்கை என்ற மறு அவதாரம் எடுத்திருந்தார்....