கவிஞர் பாலு மணிமாறன் சிங்கப்பூர் பாலு மணிமாறனின் காதல் கவிதைகளை முகநூலில் படிக்கும் போதெல்லாம் எனக்கு வயதானதே ஒரு கணம் மறந்துபோகிறது. என்னை மட்டுமல்ல காதல் எல்லாருக்குமே இளமையை நினைவு படுத்துகிறது- ஆமாம் படுத்துகிறது. நான் நினைப்பேன் காதல் தோல்வி காணும்போதுதான் அது சாகாவரம் பெறுகிறது என்று. காதலில் ‘வென்றவர்கள்’ பாவம் கல்யாணம் , குடும்பம் என்ற சாகரத்தில் போய் விழுந்து எதிர் நீச்சல் போட முடியாமல் சிக்கித் தவிக்கிறார்கள். அதனால்தான் காதல் , கால்யாண ஆப்கானிஸ்தான் எல்லையைத் தொடக்கூடாது என்று சொல்கிறேன். கல்யாணம் செய்யாமல் வாழ முடியாதே என்று யாரோ சிலர் எதிர்வினையாற்றுகிறார்கள். காதலர்களாக இருந்தவர்கள் கல்யாணத்துக்குப் பிறகு அதிகாரமும் அகம்பாவமும் பிட...
ஒவ்வொருமுறையும் நூல்கள் திறக்கப்படும்போது- நன்றிக் கடனாக அவை உங்களை அகலத் திறந்துவிடுகினறன. (ko.punniavan@gmail.com)