13 வது மௌன வெளியீட்டுக்காக மலாக்கா வரை சென்று வந்ததில் களைப்பு இன்னும் தீரவில்லை. பயணக் களைப்பு தூங்கி எழுந்தால் போய்விடும். இது தூங்கி எழுந்தால் கலைந்து போகும் களைப்பல்ல. நவீனக் கவிதைகள் பல கவிஞர்களிடமே போய்ச் சேராத களைப்பு. கவிதை ஆளுமைகளை அடையாளம் காணமுடியாத களைப்பு , போட்டிகளினால் நல்ல கவிதைகளைத் தேர்வு செய்ய முடியாத ஆதங்கக் குரலில் எழுந்த களைப்பு என ஏகப்பட்ட களைப்புகளின் ஒட்டுமொத்த fatique (அதீத களைப்பு) இது. நவீனக் கவிதை எழுதுபவர்களில் பா. அ. சிவம் , பாலமுருகன் , தேவராஜன், ரிவேகா இருந்தது ஆறுதலாக இருந்தது. நான் நவீனக் கவிஞனா (கவிஞர் என்ற சொல்லே எனக்குப் பிடிக்கல!) என்பதில் எனக்கு எப்போதுமே பலத்த சந்தேகம் உண்டு. சை. பீரையும், பச்சை பாலனையும் நான் கண்டிப்பாக நவீன கவிஞர் லிஸ்டில் சேர்க்க மாட்டேன். (நன்றாக கவிதை யாப்பது வேறு விஷயம்). இவர்களோடு மரபுக் கவிதை...
ஒவ்வொருமுறையும் நூல்கள் திறக்கப்படும்போது- நன்றிக் கடனாக அவை உங்களை அகலத் திறந்துவிடுகினறன. (ko.punniavan@gmail.com)