Skip to main content

Posts

Showing posts from July 17, 2016

சிறியோரை இகழ்தல் அதனிலும் இலமே

                        சிறியோரை இகழ்தல் அதனிலும் இலமே                                                     சிறுகதை நான் வீட்டுக்கு வெளியே இருந்தேன். கொஞ்ச நாளாய் குளியலறை நீர் வடிந்து ஓடித் தெரு சாக்கடையில் விழாமல் எரிச்சலை உண்டு பண்ணியது. குளிலயறையிலேயே குளம் கட்டி  புரொஸ்டேட் நோயாளியின் சிறுநீர் போல மெல்ல மெல்லத்தான் வெளியானது. அது முற்றிலும் வடிந்த பின்னரும் அடித்தரையில் மெல்லிய  வழுக்குப் பாசி. சிறுநீர் வீச்சம் இலவச இணைப்பாக. தினமும் தேய்த்து கழுவேண்டியதாயிற்று. கழுவிய நீர் கறைந்தோட பலமணி நேரப்   பிடிவாதம். கணுக்கால் வரை அழுக்கேறித் தேங்கிய குளத்தில் நின்று குளிக்கும் நிலையைத் தவிர்க்கவியலாத போராட்டம். நான் அடைத்த சாக்கடையை  ஹோஸ் பைப்பால்  குத்தி தற்காலிக வடிகால் உண்டாக்கும் முயற்சிகள் பலனளிக்கவில்லை. குழாய் பொறுத்துனரை அழைத்தும் அவன் ‘தோ வரேன், நாளக்கி வரேன்’ என்று என் குளியளறை தரை போல வழுக்கிக்கொண்டிருந்தான். பள்ளி முடிந்து வீடு வந்து சேர்ந்திருந்தது மகளின் கார். சதீஸ் வாடிய முகத்தோடு இறங்கினான். அதற்கு நேர் முரணாக மகளின் முகத்தில் மாகாளி குடியேறியிருந்தாள். “ஏன் ஒரு மா