எம் ஏ இளஞ்செல்வன் என்னும் கை தேர்ந்த கதை சொல்லி என் இடைநிலைக் கல்வியை முடித்துவிட்டு வேலைக்காக அலைந்து கொண்டிருந்தேன். நெடுநாட்கள் அலைந்து அலைந்து பலனற்றுச் சோர்ந்து போயிருந்தேன். என்னோடு படித்தவர்கள் என் கண் முன்னாலேயே வேலைக்காகி கை நிறைய சம்பளம் பெறுவதைப் பார்க்கும்போது மனம் விம்மியது. புத்தம் புதிய ஆடைகள் உடுத்தி, பெருமையோடும் மிடுக்கோடும் அவர்கள் வேலைக்கச் செல்வதைப் பார்க்கும் போது பொறுமினேன். வீட்டில் வெட்டியாக இருப்பதைப் பார்த்து பிறர் ஏதும் சொல்லாமல் இருந்தாலும் உள்மனம் வெடித்து வெடித்து அழுதது. சம்பாதிக்க வேண்டிய வயதில் பெற்றொர் உழைப்பில் உண்ணும் உணவு கசந்தது. வேலையற்று வெறுமனே திரியும் தருணங்கள் என்னைத் தூக்கி தெருவில் வீசி விட்ட கை...
ஒவ்வொருமுறையும் நூல்கள் திறக்கப்படும்போது- நன்றிக் கடனாக அவை உங்களை அகலத் திறந்துவிடுகினறன. (ko.punniavan@gmail.com)