இரண்டு தினங்களுக்கு முன்னர் இதனை எழுத நினைத்து நான்கு ஐந்து வரிகள் எழுதி பின்னர் அழித்துவிட்டேன். எனக்கு எழுதப்பிடிக்கவில்ல. ஆனால் நேற்று ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியைப் பார்த்த பின்னர் அதன் பாதிப்பால் மீண்டும் எழுதத்தூண்டியது. வேண்டாம் என்று விட்டு விடலாம் என்று பார்த்தால், ஏதோ ஒன்று எழுதிவிடுவதற்கான நெருப்பை மூட்டிக்கொண்டே இருக்கிறது. இந்தச்சகதியெல்லாம் எழுதி நேரத்தை ஏன் வீணாக்கவேண்டும் என்று முடிவெடுத்து ஒதுங்கினாலும், குறுக்கே வந்து எழுதித் தொலைப்பதற்கான ஆதங்கத்தை மேலோங்கச்செய்தது. இப்போதும் சொல்கிறேன் நான் எழுதவில்லை, எனக்குள் புகுந்த ஒன்று தீய சக்தியைப்பற்றி எழுத வைக்கிறது. மலத்தை 24 மணிநேரத்துக்குமேல் உடல் வைத்திருக்க விரும்புவதில்லை. இல்லையா? ஒரு வாரத்துக்கு முன்னால் நடிகர், சூப்பர் ஸ்டார், இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் ரஜினியின் பிறந்த நாள். தமிழை எப்படி உச்சரிக்கவேண்டும் என்று சிவாஜி கணேசன் இவரிடம் கற்றுக்கொள்ள வேண்டும். எப்படி இடுப்பை ஆட்டிக்கொண்டு கைகளை மூன்னும் பின்னுமாக (கொசு விரட்டும் மாட்டின் வாலைப்போல) வீசி வீசி வசனத்தை நாக்கில் படாமல் பேசுவது என்ற வித்தையை தமிழ...
ஒவ்வொருமுறையும் நூல்கள் திறக்கப்படும்போது- நன்றிக் கடனாக அவை உங்களை அகலத் திறந்துவிடுகினறன. (ko.punniavan@gmail.com)