அக்கினிக் குஞ்சு (சிறுகதை) இரும்புக் கம்பிக் கதவுக்குள்ளே தள்ளப்பட்டதும் கதிர் வெடவெடத்துப் போனான். பீதி மெல்ல மேல்ல ஊடுறுத்து மனம் முழுவதும் விஷச் செடிபோல பரவித் தைத்தது. அவர்கள் அடுத்து தன்னை என்னவோ செய்யப் போகிறார்கள் என்பதை நினைக்கும்போதே உடலுக்குள் பீதி இழை இழையாய்ச் சரிந்து இறங்கியது. உடலின் நடுக்கம் குரல்வலையை அடைத்து வார்த்தைகளை பிசிறச் செய்தன. பல சமயங்களில் அவன் சொல்ல நினைப்பவை சிதறி உதிர்ந்தன. சிலுவாரையும் சட்டையையும் கழட்டச் சொல்லிக் கட்டளை பிறப்பித்தான் ஒரு போல...
ஒவ்வொருமுறையும் நூல்கள் திறக்கப்படும்போது- நன்றிக் கடனாக அவை உங்களை அகலத் திறந்துவிடுகினறன. (ko.punniavan@gmail.com)