வசூல் ராஜா சிவனின் பாதங்கள் எஞ்சிய தடம் ரிசிகேஸ் காசியைப் போலவே நதியோடும் ஊர். இங்கே கங்கை சீராக ஓடுகிறாள்.சமீபத்தில் முத்ரிநாத்தில் கரை புரண்ட வெள்ளம் ஆயிரக்கணக்கான பக்தர்களைக் காவு கொண்டது. வெள்ளம் ஒரு இயற்கைப் பேரிடர் என்றாலும் வெள்ளம் வந்து காவு வாங்கிப்போன காரணத்தை சிலர் பலவாறாக சிலாகித்துப் பேசினார்கள் . முத்ரிநாத்தில் கங்கையில் காளி சிலை ஒன்று இருந்ததாகவும் அதனை நீக்குவதற்கு அங்குள்ள பகதர்கள் உடன்படவில்லையென்றும், அவர்கள் உடன் படாததையும் மீறி அந்தச் சிலையை நீக்கியதால் காளி ஆவேசம் கொண்டு புரண்டதுதான் இந்த முத்ரிநாத் வெள்ளம் என்றும் ஒரு குற்றச்சாட்டு வைக்கப் பட்டது. ஆனால் அதன் சீரழிவு முத்ரி நாத்தோடு நிற்கவில்லை, இங்கே ஆஸ்ரமத்துக்கு அருகில் ஓடும் கங்கையில் சிவனின் பேருருவச்சிலை நிறுவப்பட்டிருந்தது. அந்த பிரம்மாண்ட சிலையையும் கங்கை வெள்ளம் சாய்த்து இழுத்துக் கொண்டும் போய்விட்டிருக்கிறது. இப்போது அதன் தடமாக எஞ்சியிருப்பது சிவனின் பாதங்கள் மட்டுமே. காளி ஆவேசம் கொண்டாள் அதனால் அவள் வெள்ளமாக வந்து தாகிக்கினாள் என்றி காளியின் மேல் வீண் பழி சுமத்தக் கூடாது. இந்தப் பிரபஞ...
ஒவ்வொருமுறையும் நூல்கள் திறக்கப்படும்போது- நன்றிக் கடனாக அவை உங்களை அகலத் திறந்துவிடுகினறன. (ko.punniavan@gmail.com)