17.செருப்பு விற்ற பணம் பூக்கோ சொல்வதுபோல மனிதன் மனிதனாக இல்லை. அவன் தன் சுயத்தைக் காணடித்துவிட்டான். அவனைச் சூழ்ந்துள்ள உலகமே அவனின் நம்பிக்கைகளை, நடத்தையை, போக்கைக் , கல்வியை, கட்டமைக்கிறது. இதை அவன் அறிவதில்லை. அந்தக் கட்டமைப்பிலிருந்து அவனால் எளிதில் வெளிவர முடியாது. கடவுளின் மேல் அவன் வைக்கும் நம்பிக்கை இதற்கொரு நல்ல சான்று. அவன் முன்னோர்கள் எவ்வாறு நம்பிக்கை வைத்தார்களோ அதனையே சுற்றியுள்ள சமூகம் செய்கிறது. சூழ்ந்துள்ள சமூகப் போக்கின் நீட்சியாகவே இவனும் அதனை அப்படியே தொடர்கிறான். நம் சமூகத்தின் கடவுள் நம்பிக்கையானது இப்படித்தான் கட்டமைக்கப் பட்டு , தனிமனிதன் வரை தகவமைத்துக்கொள்ளும்படியானது . மனிதன் சுயத்தைத் தேடினால்தான் பூக்கொ சொல்வது சரியில்ல என்றாகும். இது நடக்குமா? முந்தைய கட்டுரையில் நான் சொல்லி வந்த கடவுள் நம்பிக்கைக்கும் கோட்பாட்டாளர் பூக்கொ சொன்னதையும் ஒப்பீடு செய்து பார்க்கலாம். சந்து வழியாக நடைப்பயணம் காசி விஸ்வநாதர் கோயிலின் உள்ளே இருந்து வெளியாவது பெரிய சிக்கலாகி விட்டது. ஒவ்வொரு சிலைய...
ஒவ்வொருமுறையும் நூல்கள் திறக்கப்படும்போது- நன்றிக் கடனாக அவை உங்களை அகலத் திறந்துவிடுகினறன. (ko.punniavan@gmail.com)