சாருக்கானையும் கஜோலையும் டிடல்டிஸ் மலை உச்சியில் பார்த்தோம். தில்த்திஸ் மலையின் உயரம் 10,000 அடி. நான் கேபல் காரில் பயணம் செய்த அனுபத்தில் இதுதான் ஆக உயர்ந்த இடம். லங்காவித்தீவில் தொங்கும் பாலத்தில் நடப்பது விநோத அனுவம் என்றால், இந்த மலையுச்சியில் உறை பனிமலைகளைப் பார்ப்பது இன்னொரு அனுபவம். சுவிட்சர்லாந்தில் இந்த டில்ட்டிஸ் மலை மிகப் பிரபலமானது. ஏஞ்ஜல் பெர்ட் கேபில் கார் என்று இதனை அழைக்கிறார்கள். இதுதான் உலகத்திலேயே முதன் முதலாக நிர்மானிக்கப்ப்பட்ட கேபில் கார் சுற்றுலாத்தளம். கோடை காலத்திலும் டில்டிஸ் மலை உச்சி சைபர் டிகிரி செல்சியஸ் வரை இறங்கி இருக்கிறது. குளிர்காலத்தில அநேகமாக இங்கே யாரும் போக மாட்டார்கள் என்றே சொல்கிறார்கள். கேபில் கார் இரண்டு இடங்களில் நிற்கிறது. முதல் இடம் 6000 அடி உயரத்தில் நிற்கிறது. இங்கே இந்திய உணவு வகையான பிரியாணி உணவகம் பார்த்தோம். வெள்ளையர்கள் இன்றைக்கு பிரியாணி வகை உணவை விரும்பு உண்கிறார்கள் என்பது பல இடங்களில் பார்க்கமுடிகிறது. அடுத்த கேபில் கார் 10000 அடி உயரத்தில் நம்மை இறக்கிவிடுகிறது. 6000 அடி உயரத்தில...
ஒவ்வொருமுறையும் நூல்கள் திறக்கப்படும்போது- நன்றிக் கடனாக அவை உங்களை அகலத் திறந்துவிடுகினறன. (ko.punniavan@gmail.com)