6.பிராமி எழுத்தில் என் பெயர் எங்கள் பயணத்தில் கீழடி அகழாய்வப்பற்றித் தெரிந்துகொள்வது முக்கியத் திட்டமாக இருந்தது.அதனால் இங்கே சற்று அதிகமான நேரம் செலவழித்தோம். கார் பயணத்தில் எங்களுக்கு விளக்கம் சொல்லிக்கொண்டு வந்த பேராசிரியர் வல்லபாய் மதுரையில் சொந்த வேலை நிமித்தமாகச் சென்றுவிட்டார்.மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் உள்ள முனைவர்கள் விளக்கம் இன்னும் ஆழமாகவும் அறிவுப்பூர்வமாகவும் இருக்கும் என்பதால் அவர் விலகிக்கொண்டார் எனப் புரிந்து கொண்டோம். கீழடி ஆய்வில் மிக முக்கியமான ஒரு விடயம் அங்கே கடவுள் நம்பிக்கை இருந்ததற்கான எந்த ஆய்வுப் பொருளும் கிடைக்கவில்லை என்கிறார்கள் ஒரு சாரர். எனவே மத நம்பிக்கை இருந்திருக்க வாய்ப்பில்லை என்றும் நிறுவுகிறார்கள். இதனை அடிப்படையாக வைத்துப் பார்க்கும்போது அப்போது வாழ்ந்தவர்கள் பகுத்தறிவு உள்ள சமூகமாக வாழ்ந்தார்கள் என்று ஒரு கருதுகோல் உண்டு. ஆனால் சங்ககால இலக்கியங்கள் ஐந்தினைகள் பற்றிக் கூறுகின்றன. ஐந்தினைகளில் கடவுள் வணக்கம் இருந்திருக்கிறது என்பதால் அப்போது வாழ்ந்த மக்கள் இறை வழிபாட்டு முறைகள் இருந்திருக்கக் கூடும். குறிஞ்சித் ...
ஒவ்வொருமுறையும் நூல்கள் திறக்கப்படும்போது- நன்றிக் கடனாக அவை உங்களை அகலத் திறந்துவிடுகினறன. (ko.punniavan@gmail.com)